அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் – உஷா முத்துராமன்

நிலத்தடி நீர் குறைந்து வருவது நூறு சதவீத உண்மை. இதற்கு காரணம் பெருகி வரும் அடுக்குமாடி கட்டிங்களும் தொழிற்சாலைகளும்தான். இதற்கு நாமேதான் தீர்வு செய்ய வேண்டும். முதலில் நாம் நம் பிள்ளைகளுக்கு நம்முடைய அந்தக் கால நினைவுகளை புரிய வைத்து அதனால் உலகம் எவ்வுளவு பசுமையா இருந்தது என புரிய வைக்க வேண்டும், வீடுகளை கட்டும் போது வீட்டைச் சுற்றி சிமெண்ட் பூச்சுகளால் முழுவதும் பூசாமல் நிறைய மண் இடங்களை விட வேண்டும், அதனால் மழை பூமிக்கும் வரும் போது அதை அந்த மண் உறிஞ்சி கொண்டு நிலத்தடி நீரை சேமிக்கும். இது போன்ற முயற்சிகளை பொது மக்களால் முடிந்தவரை செய்தால் அதனால் நிலத்தடி நீர் பெருமளவுக்கு சேமிக்கப் படும்.

இந்த நிலத்தடி நீர் குறையாமல் இருக்க அறிவியல் தீர்வும் செய்ய வேண்டியது மிக அவசியம். அதிக அளவில் மழைப் பெய்யும் காலங்களில் பெரிய அணைகளை கட்டி நீரை சேமிக்கலாம். இதனால் கடும் வெய்யில் காலங்களில் அந்த நீர் நம்மை தண்ணீர்ப் பிரச்சனையிலிருந்து காப்பாற்றும். நிலத்தடி நீர் குறைந்து வருவதற்கு மிக முக்கியமான காரணம் நாம் தூக்கி எறியும் குப்பைகள் மண்ணில் மக்காமல் இருப்பதே. இப்போது மக்கள் அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப் படுத்துவதும் மிக முக்கியமான காரணம், நாம் தூக்கி எறியும் பிளாஸ்டிக் குப்பைகள் மண்ணில் மக்காமல் இருப்பதுடன், அதிக அளவில் எறியப் படும் பிளாஸ்டிக் பொருள்களினால் வானத்திலிருந்து பூமியை நோக்கி வரும் மழை நீர் மண்ணினால் உறிஞ்சப் படாமல் ஓடிச் சென்று உப்பு நீராகிய கடலில் விழுந்து விடுகிறது, இதனால் பூமியின் நிலத்தடி நீர் பெருமளவு குறைந்து நமக்கு தேவையான போது நீரில்லாமல் போய் விடுகிறது.

அறிவியல் கண்டுபிடிப்பினால் நாம் அடைந்த பலன்கள் அதிகம், அதே போல் இந்த நிலத்தடி நீர் சேமிக்கவும், சேமிக்கப்பட்ட அந்த நீர் நமக்கு தேவையான போது கிடைக்கவும் வழி செய்வது நம் கடமை.

சமீபத்தில் ஒரு பொருட்காட்சிக்கு சென்ற போது அங்கு பள்ளி மாணவர்கள் அமைத்திருந்த ஒரு அரங்கம் வித்தியாசமாகவும் அதே நேரம் உண்மையை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. முதலில் ஒரு பணம் எடுக்கும் ஏ.டி.எம், மிஷின் போல ஒன்றை அமைத்து அதில் இன்று நாம் இது போன்ற மிஷின்களில் பணம் எடுக்கிறோம், நம் வங்கி கணக்கில் பணம் இருந்தால் மட்டுமே அந்த மிஷினில் நம்முடைய அடையாள அட்டையினை நுழைத்து ரகசிய குறியீட்டு எண்களை அழுத்திபணம் எடுக்க முடியும். அதே போல் நாம் 2050-ம் ஆண்டுகளில் ஒவ்வொருவருக்கும் ஒரு குடி நீர் மிஷின் அமைக்கப் படும், அதில் நாம் நீரை சேமித்தால் மட்டுமே எடுத்து உபயோகிக்க முடியும் என்ற வாசகங்கள் சிந்திக்க வைத்தன, அதே போல் மின்சாரத்தை சேமிக்கா விட்டால் எவ்வுளவு துயரங்களை சந்திக்க முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தனர், அந்த மாணவர்களின் எதிர் கால சிந்தனை மிகவும் உண்மையானது, சாப்பிடுவதற்கு வாடழை இலைகளை பயன் படுத்துங்கள், நாம் தூக்கி எறியும் வாடழை இலை மக்கி நல்ல உரமாகும், பிளாஸ்டிக் தட்டு போன்றவற்றை உபயோகிக்காதீர்கள் என்றுமிக அழைகாக சுட்டிக் காட்டியிருந்தனர். சூரிய ஒளி இருக்கும் போது மின் ஒளி எதற்கு? இயற்கையில் நல்ல காற்று தரும் கை விசிறிகளை பயன் படுத்துங்கள். இதனால் மின்சாரம் சேமிக்கப் படுவதுடன் உடலும் ஆரோக்கியமாக இருக்கும், அருகில் உள்ள இடங்களுக்கு இரண்டு சக்கர வாகனங்களில் செல்லாமல் சைக்கிள் அல்லது நடப்பதால் உடலின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இப்படி ஒவ்வொரு செயலையும் சுட்டிக் காட்டியது மிகச் சிறப்பாக இருந்தது, நாமும் நம் பிள்ளைகளிலுக்கு அருகி வரும் நிலத்தடி நீர் பற்றி எடுத்து சொல்வதுடன் அதை தீர்க்க வழி சொல்ல வேண்டும், கடைகளுக்கு செல்லும் போது அங்கு கொடுக்கும் பிளாஸ்டிக் பைகளை வாங்காமல் நாமே துணி பையினை பிள்ளைகளிடம் கொடுத்து விட வேண்டும், அதற்கு நாம் முதலில் அது போன்று துணிப் பைகளில் பொருட்களை வாங்கி வந்தால் நம் பிள்ளைகளும் அதே போல் செய்ய முன் வருவர். எந்த ஒரு செயலையுமே தொடங்குவதுதான் கடினம். ஒருவர் செய்யத் தொடங்கினால் அது நிச்சயம் பலரை செய்யத் தூண்டும்.

கட்டிடம் கட்டும் பொறியாளர்கள் இந்த நிலத்தடி நீருக்கு அறிவியல் மாற்றங்களை செய்யலாம். அவர்கள் கட்டும் கட்டிங்களில் மழை நீர் சேமிக்கும் வழியினை அமைத்து அந்த குழாய்கள் மூலம் நீரை பூமிக்கு செல்ல வழி செய்ய வேண்டும். இபபடி ஒவ்வொருவரும் தன்னால் இயன்ற முயற்சியினை செய்வது மூலம் நிலத்தடி நீரை காப்பாற்றலாம், இது ஒரு மனிதனின் முயற்சி இல்லை, கூட்டு முயற்சி. கூடி முயற்சிப்போம் வெற்றிக் கனியினை சுவைப்போம்.

Advertisements
This entry was posted in 2010, அறிவியல், நிலத்தடி நீர் சிக்கல்களும் அறிவியல் தீர்வும். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s