அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் – ஜெ.பிரபு

முன்னுரை:

நீரின்றி அமையாது உலகு என வியந்து பாடியுள்ளார் தமிழ் புலவர். நீர் இல்லாவிட்டால் உலகமே இல்லை என அடித்து சொல்கிறார். நீர் மனித, மிருகங்களுக்கும், உலக உயிரினங்கள் வாழ்வதற்கு காற்றுக்கு அடுத்தபடியாக நீர்தான் மனிதனுக்கு உணவளிப்பதும் உடலை சுத்தப்படுத்துவதும் இதுவே.

நடுவுரை:

மழைநீர் இருக்கவேண்டிய இடத்தில் (கண்மாய், குளம், ஏரி) இன்று மனிதன் வீடு கட்டியுள்ளான். அதனால்தான் தற்போது பெய்த புயல் மழையால் வீடுகள் அதிகம் சேதமடைந்தன. சேட்டிலைட் மூலம் படம் பிடித்து தமிழக வரைபடத்தை பார்த்தபோது கண்மாய்கள் அதிகம் உள்ள பகுதி (தமிழகம் மதுரை வக்கம் உள்ள) ராமநாதபுரம் என தெரிந்தது. ஒரு கண்மாய் நிறைந்து, அடுதுள்ள கண்மாய் நிரம்ப வழி செய்யும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது. தொலை நோக்கோடு பழைய தமிழர்கள் அமைத்தனர். மழைநீர் கடலுக்கு செல்லாதவாறு கண்மாய்கள் அப்போது நிரம்பின. நீர்மட்டம் உயர்ந்தது. உணவு உற்பத்தியும் உயர்ந்தது.

தற்போது நிலைமை தலைகீழ். அதனால் எல்லா மாறிவிட்டன. நிலத்தடி நீர் வருடத்திற்கு வருடம் தேய்பிறையாக உள்ளது. நகரங்களில் ஆழ்குழாய் அமைத்து நீர் எடுக்கின்றனர். இது தவறான கொள்கையாகும். அரசியல்வாதிகள் அரசுக்கு சொந்தமான நிலங்களில் கண்மாய்களில் வீடு கட்டிவிட்டனர். நீர் தங்க வேண்டிய இடத்தில் மனிதன் தங்கிவிட்டதால் மனிதன் இனி கண்ணீர் விடும் நேரம் நெருங்கிவிட்டது. 1 லிட்டர் பால் விலையும் 1 லிட்டர் தண்ணீர் விலையும் ஒன்றாகத்தானே உள்ளது நகரத்தில்.

சந்திக்க இருக்கும் சிக்கல்கள்:

நீர்மட்டம் குறைந்தால் விவசாயம் பாதித்து உணவு பற்றாக்குறை ஏற்பட்டு வெளிநாடுகளில் உணவு இறக்குமதி செய்யவேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் உள்நாட்டில் சண்டை சச்சரவுகள் பெருகும். மனிதனுக்கு பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் என சொல்வார்கள். (மானம்) (ரோசம்) சூடு, சுரனை, அன்பு, பன்பு, பாசம், நேசம், ஒழுக்கம், அறிவு எல்லாம் மறைந்து மிருகமாகிவிடுவான்.

ஐந்தறிவு உள்ள எறும்பு கூட வெயில் காலங்களில் உணவை தேடி சேமித்து, பூமிக்கு அடியில் சேமித்துகொள்ளும் அதை மழைக்காலங்களில் பயன்படுத்திகொள்ளும். ஆனால் ஆறறிவு உள்ள மனிதன் பருவ காலங்களில் பெய்யும் மழைநீரை கண்மாய், குளம், ஏரி, அணைக்கட்டு போன்ற அமைப்புகளால் தேக்கி வைக்க தெரியவில்லை. தொலைநோக்கோடு உள்ள சமூக அக்கரையுள்ள சுயநலமில்லாத அரசியல்வாதிகள் இருந்ததால் பொதுநலத்தோடு மேற்படி காரியங்கள் செய்யமுடியும்.

பெருந்தலைவர் காமராஜர் பொதுநலப் (தொலை) பார்வையோடு பல அணைக்கட்டு;களை அமைத்தார். இன்றுள்ள அரசியல்வாதிகள் பணக்கட்டுகளை சேமிக்கின்றனர். அடுத்த தலைமுறையினர் நம்மை வசமாக திட்டுவார்கள். 10 வருடத்தில் நீருக்காக உலகப் போர் மூளும் என சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.

நீர்மட்டம் குறைந்தால் வெப்பம் அதிகப்படும். இதனால் புதிய நோய்கள் மனிதனை தாக்கும். அதை தீர்க்க மருந்து கண்டுபிடிப்பதற்குள் அவன் இறந்துவிடக் கூடும். கொசு உற்பத்தி அதிகமாகும். இதனால் மலேரியா, காலரா போன்ற இன்னும் பெயர் தெரியாத புதிய நோய் பரவும். இதனால் மனிதனுக்கு மருத்துவச் செலவு கூடும். மழைநீரை சேமிக்க வக்கில்லாத அரசியல்வாதிகள் கடல்நீரை குடிநீராக்குவோம் என வாதிடுவது. மாட்டின் தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடிப்பது போல ஆகும். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு செலவாகும் பணத்தை கண்மாய், குளம், ஏரி போன்றவற்றை ஆழப்படுத்தவும், புதிய அணைகளும் கட்டினால் நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லது.

அறிவியல் தீர்வுகள்:

நிலத்தடி நீரை உயர்த்த கிராம விவசாயிகளை அழைத்து யோசனை கேட்டு அதன்படி அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கவேண்டும். அணைக்கட்டு கட்ட, குளம், ஏரி, கண்மாய் அகலப்படுத்த உடனடியாக நிதி ஒதுக்கீடு, ஒரு ஐயுளு அதிகாரியை மாவட்டம் தோறும் நியமித்து அரசு நேரடிப்பார்வையில் பணி நடக்கவேண்டும். காண்ட்ராக்டு விடக்கூடாது. காண்ட்ராக்டு விட்டுதான் இப்போது 100 நாள் வேலைத்திட்டம் நாசமாய் போனது.

ஒரு வருடத்திற்குள் தமிழக கண்மாய்கள் குளம், ஏரிகள் ஆழப்படுத்த திட்டமிட்டு செய்யவேண்டும். இதற்கு சுமந்தப்பட்ட பொதுமக்களும் உதவவேண்டும். எல்லோரும் ஒற்றுமையாய் சேர்ந்து செயல்பட்டால் வெற்றிதான். இத்தகைய திட்டங்களை செய்ய கர்மவீரர் போன்ற தலைவர்கள் வரமாட்டார்களா? என ஏங்குகிறார்கள். மனமிருந்தால் மார்க்கமுண்டு. இனிவரும் தேர்தலில் பணம் வாங்காமல் சிந்தித்து நல்ல தலைவர்களை மக்கள் தேர்வு செய்தால் மேற்படி திட்டம் தானான நிறைவேறும் என நம்பலாம். ஓட்டுக்கு பணம் வாங்கினால் நம் கையில் திருவோடு (பிச்சைப்பாத்திரம்) என எண்ணவேண்டும்.

Advertisements
This entry was posted in 2010, அறிவியல், நிலத்தடி நீர் சிக்கல்களும் அறிவியல் தீர்வும். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s