அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் – முத்து ரத்தினம்

நிலத்தடி நீர் என்பது, நிலத்தில் அடியில் மண்ணில் உடன் கலந்தும் , பாறைகளின் இடுக்கிலும் கலந்து உள்ளது. அறிவியல் படி சொல்வதானால் நிலத்தடி நீரில் மண் கலவை, மண் கட்டிகள், மண் பாறை, ஆயில் எவை அனைத்தும் கலந்த நீர் எனச் சொல்லலாம்.

உலகின் தண்ணீர் தேவையை இருபது சதவீதம் தீர்த்து வைக்கிறது, நிலத்தடி நீர். உலகின் நிலத்தடி நீர் எந்த அளவு உள்ளதோ, அதே அளவு கிட்டத்தட்ட சுத்தமான நீர் வட துருவம் மற்றும் தென் துருவம் ஆகியவற்றில் உள்ளது.

நிலத்தடி நீர் பெரும்பாலும் நாம் விவசாயத்திற்கு பயன்படுத்துகிறோம். ஆனால் பல இடங்களில் குடிநீராகவும் சுத்தபடுத்தாமல் பயன்படுத்துவது அபாயகரமானது. இருபத்து ஐந்து சதவீதம் ஆர்செனிக் என்ற நச்சுப்பொருள் கலந்துள்ளது . இதனால் பாதிக்கப்பட்ட நகரம், அமெரிக்காவிலுள்ள லவ் கனல் என்ற இடம். 1978 -ஆம் ஆண்டு அந்நகரத்தில் வாழும் மக்களுக்கு நிலத்தடி நீரை குடிநீராக பயன்படித்தியதால் புற்று நோய், மற்றும் பிறப்பில் ஊனம் கண்டறியப்பட்டுள்ளது.

” சிறு துளி பெரு வெள்ளம் “, – நாம் அனைவரும் அறிந்த பழமொழி. அதற்கேற்ப நாம் அனைவரும் கூட்டு முயற்சியுடன் நீரை சிக்கனமாக செலவழித்தால் ஒழிய, தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. சமீபத்தில் கோவையில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அன்பர் ஒருவர் பொதுமேடையில் ஐந்து லிட்டர் நீரில் குளித்து சாதனை புரிந்து, நீரின் தேவையை அனைவரும் புரிந்து கொள்ள வலியுறுத்தினார். அவர் தொழில் ஆடு மேய்ப்பது, அரசாங்கம் மக்களுக்கு இது போன்ற தண்ணீரின் அத்தியாவசத்தைப் பற்றி கொண்டு செல்ல வேண்டும்.

நீரானது நமக்கு போதுமானதாக உள்ளது. ஆனால் அதை பயன்படுத்தும் முறை தான் நமக்குத் தெரிவதில்லை. நீரை சுத்தப்படுத்தி உபயோகிக்கும் முறை பல இருந்தாலும், முக்கியமான சிலவற்றைப் பார்ப்போம்.

1 . கடல்நீரை குடி நீராக்கும் முறை.
—————————————————————–

பெரும்பான்மையான நீர் தேவைப் படும் போது, இம்முறை மிக முக்கியமான ஒன்று. இந்தியாவும், சீனாவும் தற்போது இம்முறைக்கு அதிக கவனம் கொண்டுள்ளது கவனிக்க வேண்டிய ஒன்று. நாம் நீருக்காக ( ரா வாட்டர் ) காசு செலவளிக்கவேண்டியது இல்லை. ஆனால் இதில் முதலீடு அதிகம். நதிநீர் இணைப்புக்கு ஆகும் செலவை விட இது ஒன்றும் அதிகமல்ல. நம் தமிழ்நாட்டில் அரசாங்கம் அதிக கவனம் கொண்டு முயற்ச்சித்தால் தண்ணீர் தட்டுப்பாடே இல்லாமல் செய்ய முடியும். உலகிலேயே மிகப்பெரிய கடல் நீரை குடி நீராக்கும் நிலையம் ஐக்கிய அரபு நாட்டில் உள்ளது. கடல் நீரை சுத்தப்படுத்தும் முறை, வளர்ந்த நாடுகளான குவைத், பக்ரைன், கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் , ஓமன் , மற்றும் சவுதி அரேபியாவில் உள்ளது.

௨. சுழற்சி முறை.
——————————-

நாம் உபயோகித்த நீரை வீணாக்காமல் சுழற்சி முறையில் நீரை சுத்தப்படுத்தி குடி நீராகவும் , விவசாயத்திற்கும் பயன்படுத்தலாம். புதிய அறிவியல் நுட்பத்துடன் கூடிய தண்ணீரை சிக்கனமாக உபயோகிக்கும் முறைகளைப் பார்ப்போம்.

1. விவசாயத்திற்கு ட்ரிப் இர்ரிகசன் எனப்படும் சொட்டு நீர் பசன முறையைப் பயன்படுத்தினால் பெருமளவு நீரை சேமிக்கலாம். தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் பெரும்பான்மையான விவசாயிகள் சொட்டு நீர் பாசன முறைக்கு மாறி இருப்பது வரவேற்க்கத்தக்கது . மேலும் இம்முறையில் , குறைந்த அழுத்த நீர் பீய்ச்சி அடிக்கும் முறை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகளின் கூற்றுப்படி ஒருவருக்கு , ஒரு நாக்கு ஐம்பது லிட்டர் நீர் தேவைப் படுகிறது. அதாவது , குடிக்க , சமைக்க , துணி துவைக்க. நீர் தேவையை அதிகப்படுத்த நாம் குறைக்கவேண்டியது ஜனத்தொகைப் பெருக்கத்தை. இவ்விசயத்தில் நம் அரசாங்கம் பெருமளவு அக்கறை எடுத்துக்கொண்டுள்ளது குறிப்படத்தக்கது.

அடுத்து , வரும்முன் காப்போம் என்ற திட்டத்தின்படி , மழை வரும் முன் ஏரி , குளங்கள் ஆகியவற்றை தூர் வாரி தயார் நிலையில் வைத்திருந்தால் , வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தி , நீரை சேமித்து சுத்தப்படுத்தி உபயோகிக்கலாம். ஆனால் , நம் தமிழ் நாட்டில் ஏரி , குளங்கள் அரசியல்வாதிகளின் தலையீட்டால் தற்போது வீடு, மற்றும் தொழிற்சாலைகள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.

நான் சரித்திர படத்தில் அசோகர் சாலை முழுவதும் நிழல் தரும் மரங்களை நட்டார் – என படித்ததோடு சரி. தற்போது ஏரி, குளங்களை பார்க்க முடிவதில்லை. மழை காலங்களில் , அவசர நடவடிக்கை , போர்கால நடவடிக்கை என வந்தபின் கையை பிசைந்து , வேடிக்கை பார்பதைவிட , முன்னெச்செரிக்கையாக வருமுன் திட்டத்தை தமிழ்நாடுஅரசு கவனத்தில் கொண்டால் நல்லது.

இனி அசுத்தமான குடி நீரால் ஏற்படும் விளைவுகளைப் பாப்போம் .
—————————————————————————————————-
உலக வங்கி 88 சதவீத நோய்கள் அசுத்தமான குடி நீரால் தான் உண்டாகிறது என வலியுறுத்துகிறது.
அதாவது,
1 . நான்கு பில்லியன் மக்கள் டியார்ரிய – என்ற பாதிக்கப்பட்டுள்ளனர் .
2 . 300 மில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3 . ௬ மில்லியன் மக்கள் *த்ரோகோம *என்ற நோயால் பார்வை இழந்துள்ளனர்.

உநெஸ்கோ- எச்சரிக்கைப்படி வருடத்திற்கு 500 மில்லியன் டன் உலோகங்கள் , சால்வென்ட் , toxic sludge தண்ணீருடன் கலக்கிறது. 70 சதவீத தொழிற்சாலைக் கழிவுகள் நதிகளிலும் , ஏரிகளிலும் கலந்து நீரை அசுத்தப்படுத்துகின்றன . அரசாங்கம் மிக முனைப்புடன் செயல்பட்டு எதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அடுத்த ஐம்பது ஆண்டுகளில் உலக ஜனத்தொகை மேலும் 40 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் உயரும் என எதிர் பார்க்கப்படுகிறது. அதோடு தொழிற்சாலை , மற்ற துறைகளின் வளர்ச்சி என கணக்கெடுத்தால் நீர் தட்டுப்பாட்டுதேவை -அபாயகரமானதாக இருக்கும்.

Advertisements
This entry was posted in 2010, அறிவியல், நிலத்தடி நீர் சிக்கல்களும் அறிவியல் தீர்வும். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s