அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்க இருக்கும் சிக்கல்களும், அறிவியல் தீர்வும் – ஜெ சுந்தரமூர்த்தி

பஞ்ச பூதங்களில் ஒன்றான நீர் மிகவும் முக்கியமான ஒன்று. இது இல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியாது. தாயை கழித்தாலும் தண்ணீரை கழிக்கக்கூடாது என பழமொழி உண்டு. அதாவது பெற்றத் தாயே காட்டிலும் அதிகமாக போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய திரவம் என்பதால் மேற்படி பழமொழி உருவானது. அந்தளவிற்கு பழந்தமிழர்கள் நீருக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள். இன்றைய தமிழர்கள் இதை உணரவில்லை.

மழையோ, வெயிலோ மிதமாக இருந்தால்தான் மகிழ்ச்சியாக இருக்கும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். ஆனால் அளவுக்கு அதிகமாக பெய்யும் மழை நீரை முறையாக சேமித்து வைத்தால் நன்மையோ நன்மைதான். ஆக, அளவுக்கு மீறினாலும், தகுந்த திட்டங்கள் தீட்டப்பட்டால், மழை வெள்ளமும் அமிர்தமாகும்.

அந்த வகையில் தண்ணீரை அதிகமாக சேமித்து வைக்க வழிசெய்யும் அற்புதமான ஒரு தீர்ப்பை ஐகோர்ட்டு அளித்துள்ளது. இப்போதெல்லாம், நமது நீதிமன்றங்களில் அளிக்கப்படும் தீர்ப்புகள் சமுதாய கடமைகளை நிறைவேற்ற வைக்கும் தீர்ப்புகளாகவும், எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் தீர்ப்புகளாகவுமே இருக்கின்றன. சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.யூசுப் இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அளித்துள்ள ஒரு அருமையான தீர்ப்பு, செழிப்பான தமிழ்நாட்டை உருவாக்கும் கதவுகளை திறந்து விட்டிருக்கிறது.

நமது மாநிலத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் அடையாளம் கண்டு, அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உடனடியாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அந்த நீர்நிலைகள் அனைத்தும் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட வேண்டும். இதன்மூலம் குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்கமுடியும் என்றும் நீதியரசர்கள் கூறியுள்ளனர். எவ்வளவு அருமையான சமுதாயத்துக்கு பலன் அளிக்கும் தீர்ப்பு இது!. இனி இந்தப் பொறுப்பு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கும், அதிகாரிகளுக்கும்தான் இருக்கிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் யாராவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் அவ்வளவுதான். இந்த உத்தரவை நிறைவேற்றுவதில் ஏதாவது தொய்வு ஏற்பட்டால் கஷ்டம்தான் என்பதை உணர்ந்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையைத் தொடங்கிவிடவேண்டும்.

தமிழ்நாட்டில், சிறியதும் பெரியதுமாக மொத்தம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இதில் 100 ஏக்கருக்கும் குறைவாக பாசன வசதி கொண்ட 26 ஆயிரத்து 300 குளங்கள், உள்ளுர் பஞ்சாயத்துக்கள் கட்டுப்பாட்டிலும், 100 ஏக்கருக்கும் அதிகமான பாசன வசதி கொண்ட 13 ஆயிரத்து 702 ஏரிகள், பெரிய குளங்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளன. இந்த நீர்நிலைகள் அனைத்திலுமே காலங்காலமாக ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. எல்லா குளங்களிலும் ஆகாயத் தாமரை செடிகள் தொடர்ந்து பரவி உள்ளதால், குளங்கள், ஏரிகள் மேடிட்டுவிடுகின்றன. இது ஆக்கிரமிப்பாளருக்கு ரொம்ப வசதியாகப் போய்விடுகிறது. கோடையில் தண்ணீர் வற்றும்போது இந்த ஆகாயத் தாமரை செடிகளை கரையில் இழுத்துப் போட்டு விடுகிறார்கள். பின்பு அதே இடத்தில் அதற்கு மேல் குப்பை கூளங்கள், கற்கள், கழிவுகளை போட்டு கரையை தள்ளிவிட்டு விடுகிறார்கள். பிறகு என்ன, அந்த இடத்தில் வீடு கட்டிவிடுவதுதான். இப்படி எத்தனையோ ஏரிகள், குளங்கள், தெருக்கள் குடியிருப்புகளாக மாறிவிட்டன. இது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. ஆண்டாண்டுகளாக இதுதான் நடந்து வருகிறது. இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. பாதி பயம்தான். காரணம் இந்த காரியங்களை செய்பவர்கள் தாதாக்கள், அரசியலில், சமுதாயத்தில் செல்வாக்கு படைத்தவர்கள்.

சந்ததிகள் சந்திக்க இருக்கும் சிக்கல்கள்:

நிலத்தடி நீர் குறைந்தால் நாட்டின் உணவு உற்பத்தி குறையும். விலைவாசி உயரும். நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படுவர். பணக்காரர்கள் எப்படியோ, சாமானியர், பூமியின் மேற்ப்பரப்பு அதாவது நிலம் அதிக வெப்பத்தை பெறும். அதனால் புதிய வகை நோய்கள் உணவுப் பயிர்களை தாக்கலாம்.

அறிவியல் தீர்வு:

இப்போது காலம் மாறிவிட்டது. நீதிமன்றத் தீர்ப்பு என்பது கையில் கிடைத்துள்ள பெரிய ஆயுதம். அரசு தயவு தாட்சண்யம் பார்க்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். வருவாய்த்துறை ஆவணங்களில், ஒவ்வொரு குளம், ஏரிக்கு என எவ்வளவு நிலப்பரப்பு? உள்ளது என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். அந்த எல்லையை துரிதமாக கணக்கிட்டு, கல் போடவேண்டும். அந்த எல்லைக்குள் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளையெல்லாம் உடனடியாக அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்புகளில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் எவை? என்பதை அறிவித்து அந்த கட்டிடங்களுக்கு மின்சார இணைப்பு, கழிவு நீர் இணைப்பு, சாலை வசதிகளை துண்டிக்க வேண்டும். இனி இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்த்து யாரும் கோர்ட்டுக்கு போனாலும் எளிதில் தடை வாங்கிவிட முடியாது. இப்போது வழங்கப்பட்டுள்ள நமது நீதியரசர்களின் தீர்ப்பே கவசம் போல இருக்கும். ஏற்கனவே யாராவது தடை வாங்கி இருந்தாலும் உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை அதிகாரிகள் செய்யாததில்தான் ஊழலே இருக்கிறது.

அதனால் சமூக மக்களாகிய நாமும், அரசியல்வாதிகள் மாவட்ட ஆட்சியர், நீதிமான்கள், காவல்துறை போன்ற எல்லாத் துறை மக்களும் இன வேறுபாடு பார்க்காமல் முழு ஒற்றுமையுடன் செயல்பட்டு இயற்கை வளத்தை பாதுகாத்தால் நாடு வளம் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

Advertisements
This entry was posted in 2010, அறிவியல், நிலத்தடி நீர் சிக்கல்களும் அறிவியல் தீர்வும். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s