அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் – சுந்தரபெருமாள்

நிலத்தடிநீர்மட்டம்

நீர் எனபது அனைத்து உயிர்களும் உயிர் வாழ்வதற்கு முக்கிய காரணம் ஆகும். நீர் இன்றி அமையாது உலகு என்று ஒரு முதுமொழி உண்டு .

சிக்கல்கள் ;
*********************

நீர் எனபது மிகமிக இன்றியமையாதது . இன்றைய காலகட்டத்தில் நீர் கோடைகாலத்தில் அரிதாகிவிடுகிறது. நிலத்தடி நீர் மட்டம் கீழ சென்று விடுகிறது . இதனால் கோ டை காலங்களில் மக்கள் குடிநீருக்கும் கிராமங்களில் விவசாயம் நடைபெறுவதற்கும் மிகவும் கஷ்டப்பட வேண்டியதாகிவிட்டது .மக்கள் தொகை பெருகி விட்டதால் நீரின் தேவை அதிகரிக்கிறது.

இதற்க்கான அறிவியல் தீர்வுகள் ;
*************************************************

நீரின் சிக்கனம் தேவை இக்கணம் என்பதுபோல நீரை நாம் சிக்கனமாக பயன்படுத்தவேண்டும் . குடிநீர் குழாயை அனாவசியமாக திறந்து விடுவதாலும் , குடிநீர் சிந்தாமல் சிதறவிடாமல் செயல்படுத்தினால் குடிநீரை சேமிக்கலாம்.

அந்தகாலகட்டங்களில் கிணறுகள் குளங்கள்,ஏரிகள் மட்டுமே இருந்தது .அதனால் நீர்பற்றாக்குறை இல்லை . எதிர்வரும் காலங்களில் நீர்பற்றாக்குறை அதிகரிக்கும் என்று தெரியவருகிறது . இதனை நாம் எவ்வாறு தடுப்பது அல்லது பாதுகாப்பது எனபது பற்றி பார்ப்போம். மழைகாலங்களில் பெய்துவரும் பருவமழை அளவு சிலவருடங் களில் பொய்த்துவிடுகிறது. எனவே மழைஅளவு அதிகமாக பெய்யும் பொழு து அதனை கடலுக்கு அனுப்பி விடாமல் அந்த நீரினை ஏரி குளங்களில் ஆழத்தினை அதிகப்படுத்தி கரைகளை பலப்படுத்தி தண்ணீரை சேமிக்க வேண்டும். இதனால் குளம் குட்டை களில்உள்ள நீரினால் நீர்கசிவு ஏற்ப்பட்டு பூமி வறட்சி அடைவது தவிர்க்கப்படுகிறது .

இரண்டாவதாக பூமி வெப்பம் அடைந்துவிட்டதாக அறிவியலர்கள் கூறுகின்றனர். மரங்களை அதிகமாக வளர்ப்பதினால் மழை பொழிவு அதிகரிக்கும் .இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். போர் வெல் ஆழமாக போடுவதை தவிர்க்கவேண்டும் .நீரினை அதிகம் செலவழிக்காமல் சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் நீரைசேமித்து நீர்மட்டதினை உயர்த்தலாம். மழை நீர் சேகரிப்பு மூலமும் நாம் எதிர் காலத்தில் சந்திக்கவிருக்கும் நிலத்தடி நீர் மட்ட த்தினை குறைக்கலாம்.

மழை நீர் சேகரிப்பு மிகமிக முக்கியம் . இல்லந்தோறும் அது எல்ல வீடு களுக்கும் மழை பெய்யும் பொழுது பூமியில் ஐந்து அடி ஆழத்திற்கு குழி வெட்டி அந்த நீரை குழிக்குள் விழும்படி செய்யவேண்டும் . குழிக்குள் விழுந்த நீரானது பூமிக்குள் சென்று விடுகிறது .இதனால் நீர் விரயமாவது தடுக்கப்படுகிறது . நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு இருக்கிறது .

விவசாயத்திற்குபோர் வெல் குழாய்அமைத்து நீர் பாசனம் செய்கின்றனர் . பாசனம் செய்யும்பொழுது அதிகமான நீர் விரயமாகிறது .வாய்க்கால் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதால் உடைப்பு ஏற்ப்பட்டு நீர் விரயமாகிறது .நீரை குழாய்கள் மூலம் பாய்ச்சுவதால்நீர் சேமிப்பு ஏற்ப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் குறைவது தடுக்கப்படுகிறது .

நிலத்தடி நீர்மட்டத்தின் குறைவினை தடுப்பதற்குபாச னங்களை கீழ் கண்ட முறைப்படி பயன் படுத்தலாம். சொட்டுநீர்பாசனம் தெளிப்பு பாசனம் ஆகியமுறைகளை பயன்படுத்தி நீரை சேமித்து சிக்கனப்படுத்தலாம்.

முடிவுரை;
*****************

மேலே கூறிய கருத்துக்களை செயல் படுத்துவதானால் அருகிவரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களை அறிவியல் பூர்வமாக தீர்க்கலாம்.

Advertisements
This entry was posted in 2010, அறிவியல், நிலத்தடி நீர் சிக்கல்களும் அறிவியல் தீர்வும். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s