அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் – திருநாவுக்கரசு சோணாச்சலம்

முன்னுரை:

1. உலக அளவில் நாளுக்கு நாள் நிலத்தடி நீர் வளம் அருகி வருவது கண்கூடு. பெரும்பாலான மக்கள் நிலத்தடி நீர் எடுக்க எடுக்க குறையாத வளம் என்ற மனப்பான்மையில் உள்ளனர்.” இறைக்கிற ஊற்றே சுரக்கும்” என்ற நம்பிக்கையில் அனைத்து பயன்பாட்டிற்;கும் நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி இன்று அழிவுப்பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் மனித இனம் கடந்த பாதையை திரும்பிப் பார்த்து கற்கவேண்டிய பாடம் ஏராளம்.

2. இக்கட்டுரை இந்தியாவின் தென்முனையில் உள்ள தமிழ்நாட்டின் நீர் வளம் பற்றி மட்டுமே ஆய்ந்தறிய முற்படுகின்றது. தமிழ்நாட்டில் 98 விழுக்காடு மேற்பரப்பு நீர் வளம் பயன்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், வருங்காலத்தில் தமிழகம் பெரும்பாலும் நிலத்தடி நீரையே நம்பியாக வேண்டிய கட்டாயம் உள்ளது.

3. தமிழகமும் நிலத்தடி நீரும்: தமிழ்நாட்டில் ‘மாநில நிலத்தடி நீர் மற்றும் மேற்பரப்பு நீர்வள தகவல் மையம்” என்கிற அரசு அமைப்பு நீர்வளம் பற்றிய முழுமையான தகவல்களை சேகரிக்கிறது. இந்த அமைப்பு தமிழகத்தில் சென்னை நீங்கலாக 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் 1746 கிணறுகளில் மாதாமாதம் நீர்மட்ட விவரம் சேகரிக்கின்றது. இத்துடன் மழையளவு, அடிமண் வகைகள், ஏரிகள், குளங்கள், நீர்த்தேக்கங்கள், வானிலைத் தகவல்கள், ஆற்றில் ஓடும் நீரின் அளவு போன்ற பல்வேறு தகவல்களை திரட்டி வருகிறது.

4. திரட்டப்பட்ட தகவல்களை ஆய்ந்து நடுவண் அரசின் நீர் வள அமைச்சகத்தின் கீழ் உள்ள ‘மைய நிலத்தடி நீர் வாரிய” வழிகாட்டியின்படி, நிலத்தடி நீர் வளத்தை கணக்கிடுகின்றது. 1984 முதல் இருந்த நிலத்தடி நீர் மதிப்பீடு வழிகாட்டுதல்கள் 1997 முதல் திருத்தியமைக்கப்பட்டு அதன்படி தகவல்கள் சேகரிக்கப்படுகின்றது.

விளக்க உரை:

1. தமிழகத்தில் நிலத்தடி நீர்தாங்கிக்குச் செல்லும் நீரின் அளவு சனவரி 1998 ல் உள்ளபடி 26338.86 மில்லியன் கன மீட்டர் (மி.க.மீ) என கணக்கிடப்பட்டுள்ளது. (ஆனால் மைய நிலத்தடி நீர் வாரியம் இது 22380 மி.க.மீ எனக் கூறியுள்ளது). இதே காலகட்டத்தில் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீர் 15249.36 மி.க.மீ என்றும,; இன்னும் பயன்படுத்தக்கூடிய அளவு 6906.328 மி.க.மீ என்றும் கூறப்பட்டது.
2. தமிழகத்தில் 1992 மற்றும் 1998 ல் மாநில நில நீர் மற்றும் மேற்பரப்பு நீர்வள தகவல் மையம் தயாரித்த நிலத்தடி நீர்வள நிலைமை பற்றிய விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

1992 சனவரியில் நிலத்தடி நீர் நிலைமை:

1. கணக்கெடுக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள் : 384
2. கருமை நிற ஒன்றியங்கள் ( பயன்பாடு 85மூ முதல் 100மூ வரை) : 89
3. சாம்பல் நிற ஒன்றியங்கள் ( பயன்பாடு 65மூ முதல் 85மூ வரை) : 86
4. வெண்மை நிற ஒன்றியங்கள் ( பயன்பாடு 65மூ க்குக் கீழ்) : 209

குறிப்பு: நிலத்தடி நீர்தாங்கிக்குச் செல்லும் நீர் 100மூ எனக்கொள்க.
1998 சனவரியில் நிலத்தடி நீர் நிலைமை:
திருத்தியமைக்கப்பட்ட நிலத்தடி நீர் மதிப்பீடு வழிகாட்டியின்படி,

1. கணக்கெடுக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள் : 385
2. அளவுக்கதிகமாக உறிஞ்சப்பட்ட ஒன்றியங்கள்
(பயன்பாடு; 100மூ க்கு மேல்) : —
3. ஆபத்தான நிலையில் உள்ள ஒன்றியங்கள்
( பயன்பாடு 90மூ க்கு மேல்) : 87
4. ஓரளவுஆபத்தான நிலையில் உள்ள ஒன்றியங்கள்
( பயன்பாடு 70மூ முதல் 90மூ வரை) : 83
5. பாதுகாப்பான ஒன்றியங்கள்
( பயன்பாடு 70மூ க்கு கீழ்) : 215

குறிப்பு: நிலத்தடி நீர்தாங்கிக்குச் செல்லும் நீர் 100மூ எனக்கொள்க.

3. ஆனால் 2003 ல் உள்ளபடி 377 ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு நம்மை பயத்தின் விளிம்பிற்கே கொண்டு செல்கிறது.
2003 சனவரியில் நிலத்தடி நீர் நிலைமை:

1. கணக்கெடுக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள் : 377
2. அளவுக்கதிகமாக உறிஞ்சப்பட்ட ஒன்றியங்கள்
(பயன்பாடு; 100மூ க்கு மேல்) : 138
3. ஆபத்தான நிலையில் உள்ள ஒன்றியங்கள்
( பயன்பாடு 90மூ க்கு மேல்) : 37
4. ஓரளவுஆபத்தான நிலையில் உள்ள ஒன்றியங்கள்
( பயன்பாடு 70மூ முதல் 90மூ வரை) : 105
5. பாதுகாப்பான ஒன்றியங்கள்
( பயன்பாடு 70மூ க்கு கீழ்) : 97

1998 முதல் 2003 வரையிலான காலத்தில் 138 ஊராட்சி ஒன்றியங்களில் நிலத்தடி நீர்தாங்கிக்குச் செல்லும் நீரை விட அதிகப்படியான நீர் உறிஞ்சப்பட்டிருப்பது நம்மை அதிர வைக்கிறது. சனவரி 2011 ல் தற்போதைய நிலத்தடி நீர் நிலைமை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அறிக்கையும் நம்மை மகிழ வைக்கப்போவதில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது.

4. நிலத்தடி நீர்வளம் அருகி வருவதற்கான காரணம்:
1) மழையாலும் மேற்பரப்புத்தேக்கங்களாலும் ஆற்று நீரோட்டத்தாலும் நிலத்தடி நீர்த்தாங்கிகளுக்குச் சென்றடையும் நீரை விட அதிகப்படியான நீரை நம் பல்வேறு பயன்பாடுகளுக்கு வெளியே எடுத்தல்.
2) பெருகி வரும் பாசனக்கிணறுகளின் எண்ணிக்கை. 2008 ஆம் ஆண்டு வரை 1872734 பாசனக்கிணறுகளிலிருந்து மின் இறைப்பான்கள் மூலம் அளவுக்கதிகமாக உறிஞ்சப்படும் வேளாண் தேவைக்கான நீர்.
3) அறிவியல் சார்பற்ற முறையில் நிலத்தடி நீரை உறிஞ்சுதல்.
4) பயிர்களின் தேவைக்கு அதிகமாக தண்ணீரை பாய்ச்சுதல்.
5) பாசனத்திறன் மிகவும் குறைவாக இருப்பது ( கால்வாய் பாசனத்தில் 60மூ , கிணற்றுப்பாசனத்தில் 75மூ).
6) ஆறுகளில் ஓடும் நீரின் அளவு குறைந்து வருவது.
7) மழைப்பொழிவு குறையவே இல்லை என்று இந்திய வானிலைத்துறை கூறினாலும் மழைப்பொழிவின் பாங்கு பெரிதும் மாறி உள்ளமை.
8) ஏரி, குளங்கள், நீர்த்தேக்கங்கள் இவற்றில் வண்டல் படிந்துள்ளதால் குறைந்துள்ள கொள்ளளவு.
9) ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருதல்.
10) வேளாண் தேவைக்கான மின் இறைப்பான்களுக்கு அரசு மானியம் வழங்குவது.
11) இவை எல்லாவற்றுக்கும் மேலாக பெருகி வரும் மக்கள்தொகை, தொழிற்சாலைகள்.

5. மேலே உள்ள நிகழ்வுகள் தொடருமானால் தமிழகம் மெதுவாக பாலைவனமாக மாறும் நிலை உருவாகும். நிலத்தடி நீர் வளம் பெருக வேண்டுமானால் மேற்பரப்பு நீர்வளமும் பெருகவேண்டும். நிலத்தடி நீர்தாங்கிகளுக்குச் செல்லும் நீருக்கான காரணிகளாவன:

1) மழைப்பொழிவு
2) மேற்பரப்புத்தேக்கங்களிலிருந்து ஊடுருவல்
3) ஆற்று ஓட்டத்திலிருந்து உட்புகும் நீர்
4) கால்வாய்களிலிருந்து கசியும் நீர்
5) பாசன நீரிலிருந்து உட்புகும் நீர்

6. அறிவியல் தீர்வு:

நிலத்தடி நீர் பெருகக்காரணமான பல்வேறு காரணங்களில் மேற்பரப்பு நீர்வளத்தின் பங்கு மிகமிக முக்கியமானதாகும். குறிப்பாக தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் இருந்துவரும் ஏரிகளின் பங்கு மிக இன்றியமையாதது. இதை வலியுறுத்துவதே இக்கட்டுரையின் முக்கிய குறிக்கோள். இணைப்பு 1 ல் மாவட்ட வாரியாக ஆண்டு சராசரி மழைப்பொழிவும் நிலத்தடி நீர்வளம் பாதுகாப்பாக உள்ள ஊராட்சி ஒன்றியங்களின் விழுக்காடும் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் அதிகமாக மழை பொழியும் சில மாவட்டங்களில் பாதுகாப்பான ஒன்றியங்களின் விழுக்காடு குறைவாகவும், குறைவான மழைப்பொழிவு உள்ள சில மாவட்டங்களில் பாதுகாப்பான ஒன்றியங்களின் விழுக்காடு கூடுதலாகவும் உள்ளது கண்கூடு. ஆகவே நிலத்தடி நீர்வளம் நீடிக்க தேவையான ஏனைய காரணிகளை ஒதுக்கிவிட்டு மழைப்பொழிவை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால் மழைப்பொழிவிற்கும் பாதுகாப்பான ஒன்றியங்களுக்கும் குறிப்பிடும்படியான தொடர்பு இருப்பதாய் சொல்லமுடியவில்லை. நீலகிரி மாவட்டம் மக்கள் தொகை குறைவான பகுதி என்பதையும் இணைப்பு 1ல் இணைத்துப்பார்க்கவேண்டும்.

இணைப்பு 2 ல் 10 சதுர கிலோ மீட்டரில் மாவட்ட வாரியாக ஏரிகளின் அடர்த்தியும், பாதுகாப்பான மற்றும் அதிகம் உறிஞ்சப்பட்ட ஒன்றியங்களின் விழுக்காடும் பட்டியலிடப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்வளம் பெருகத்தேவையான மற்ற காரணிகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், ஏரிகளின் அடர்த்திக்கும் பாதுகாப்பான ஒன்றியங்களின் விழுக்காட்டிற்கும் ஓரளவு தொடர்புள்ளது தெளிவு. தொடர்பு எதிராக உள்ள வேலூர், கரூர், தருமபுரி, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்@ர் மாவட்டங்களில் கிணற்றுப் பாசனம் பன்மடங்கு பெருகி உள்ளமையே தொடர்பின்மைக்குக் காரணம். காஞ்சிபுரம், திருவள்@ர் இரண்டும் சென்னை மாநகரின் புறநகர்ப்பகுதிகள் என்பதால் அதிகப்படியான தேவைகளின் காரணமாக தொடர்பு தெளிவாக இல்லை. திருவள்@ரின் பெரும்பான்மையான நிலத்தடி நீர் சென்னை மாநகருக்கு கொண்டு செல்லப்படுவது அனைவரும் அறிந்ததே. திண்டுக்கல், தேனி இரண்டும் அடிமண் பாறையாக உள்ள பகுதி. தேனி புதிய மாவட்டம். அதில் ஏரிகளின் அடர்த்தி கிடைக்காத நிலையில் மதுரை மாவட்ட அடர்த்தியே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நோக்குங்கால் நிலத்தடி நீர்வளத்திற்கும் ஏரிகளின் அடர்த்திக்குமான தொடர்பை உணரலாம்.

முடிவுரை:

1. விளக்க உரையிலுள்ள விவரங்களின்படி நிலத்தடி நீர் மேம்பாட்டிற்கும் ஏரிகளின் அடர்த்திக்குமான தொடர்பை உணரலாம். ஆனால் இன்று இத்தகைய ஏரிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஆக்கிரமிப்பினாலும் கொள்ளளவு குறைந்துவிட்டதாலும் தேக்கிவைக்கும் நீரின் அளவும் குறைந்துவிட்டது. இதனால் நிலத்தடி நீர்தாங்கிக்குச் செல்லும் நீரின் அளவும் குறையத்தான் செய்யும். நிலத்தடி நீர் பற்றிய எந்த ஆய்வும் மேற்பரப்பு நீர் வளத்தைச் சார்ந்தே உள்ளது. தமிழகத்தின் 79 நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 6895 மி.க.மீ. ஆனால் 39000 ஏரிகளின் கொள்ளளவு 9840 மி.க.மீ. ஆகவே, இந்த ஏரிகள் அழிந்தால் நிலத்தடி நீர் குறைவதோடு பாசனம், குடிநீர் ஆதாரம், சுற்றுச்சூழல் இவை கடுமையாக பாதிக்கப்படும். தமிழ்நாடு மெல்ல மெல்ல பாலைவனமாகும் என்பது உறுதி.

2. நிலத்தடி நீர்வளம் குறையாமல் இருக்க சில பரிந்துரைகள்:
1) அறிவியல் ரீதியாக வேளாண்மை செய்து நீரின் தேவையைக் குறைக்கவேண்டும்.
2) பாசனத்திறனை அதிகரிக்கவேண்டும்.
3) வருங்காலங்களில் தேவையான இடங்களில் மட்டுமே கிணறுகள் தோண்டப்படவேண்டும்.
4) ஏரி, குளங்களில் படிந்துள்ள வண்டலை முழுமையாக அகற்றி, அவற்றை பழைய கொள்ளளவுக்குக் கொண்டுவரவேண்டும்.
5) நிலத்தடி நீர்வளம் குறைந்து வரும் இடங்களில் மழை நீரைச் சேமிக்க தடுப்பணை, கசிவு நீர்க்குட்டை, ஏரி போன்றவற்றை உருவாக்கவேண்டும்.
6) கடலுக்கு அருகாமையில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதைக் கட்டுப்படுத்தி உப்பு நீர் ஊடுருவலைத் தடுக்கவேண்டும்.
7) பயன்படுத்த இயன்ற இடங்களில் பயிர்களுக்கு தெளிநீர்ப்பாசனம், துளி நீர்ப்பாசனம் செய்து நித்தடி நீர் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும்.
8) தொழிற்சாலைகள் நல்ல நீரைப்பயன்படுத்தாமல் கழிவு நீரை சுத்தம் செய்து பயன்படுத்த முன்வரவேண்டும்.
9) விளை நிலங்களை மற்ற பயன்பாடுகளுக்கு உட்படுத்தக் கூடாது.
10) ஏரி, குளம், கால்வாய், ஆறுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றைப் பாதுகாக்கவேண்டும்.
11) அரசே ஏரிகளை ஆக்கிரமித்து கட்டடம் கட்டும் செயலை நிறுத்தவேண்டும்.
12) வீடுகளில் மழை நீர் சேமிப்பு நல்ல பலனைத் தந்துள்ளதால், அதை எல்லா இடங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
13) எல்லாவற்றிற்கும் மேலாக பெருகிவரும் குறைத்து நிலைப்படுத்த வேண்டும்.

பார்வை:
1. புள்ளியியல் கையேடு 1993, வெளியீடு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, தமிழ்நாடு.
2. தமிழ்நாடு நீர்வளப்பெருக்கம் மற்றும் மேலாண்மை மீதான நிபுணர் குழு அறிக்கை, தொகுதி ஐஐ, 2003.
3. அரசாணை எண் 51, பொ.ப.து நாள் 11.02.2004 ன் இணைப்பு.

இணைப்பு 1

வ.எண் மாவட்டம் ஆண்டு சராசரி மழையளவு மி.மீ. பாதுகாப்பான ஊராட்சி ஒன்றியங்கள் (மூ)
1. நீலகிரி 1693.2 100.0
2. நாகப்பட்டினம் 1380.8 0
3. கடலூர் 1220.6 23.08
4. காஞ்சிபுரம் 1215.5 15.39
5. கன்னியாகுமரி 1173.9 100.0
6. திருவாரூர் 1166.4 25.0
7. திருவள்@ர் 1082.9 17.14
8. விழுப்புரம் 1076.1 4.55
9. திருவண்ணாமலை 1046.2 11.11
10. சேலம் 1034.3 5.0
11. தஞ்சாவூர் 1014.1 35.71
12. பெரம்பலூர் 1011.3 50.0
13. திண்டுக்கல் 933.1 7.14
14. வேலூர் 925.7 0.0
15. புதுக்கோட்டை 921.6 92.31
16. திருநெல்வேலி 877.3 52.63
17. சிவகங்கை 875.4 75.0
18. மதுரை 874.5 38.46
19. தருமபுரி 855.3 11.11
20. திருச்சி 824.3 28.57
21. இராமநாதபுரம் 816.2 63.64
22. விருதுநகர் 813.3 45.46
23. தேனி 793.9 0.0
24. நாமக்கல் 782.8 13.34
25. கோயம்புத்தூர் 699.7 0.0
26. ஈரோடு 697.6 20.0
27. தூத்துக்குடி 670.7 0.0
28. கரூர் 656.5 12.5

இணைப்பு 2

வ.எண் மாவட்டம் ஏரிகளின் அடர்த்தி
ஃ10 ச.கி.மீ. பாதுகாப்பான ஒன்றியங்கள் (மூ) அளவுக்கதிகமாக உறிஞ்சப்பட்ட ஒன்றியங்கள் (மூ)
1. நீலகிரி 0.02 100 0
2. ஈரோடு 0.06 20.0 15.0
3. கோயம்புத்தூர் 0.10 0 57.9
4. தஞ்சாவூர் 0.52 35.71 14.29
5. திருவாரூர் 0.52 25.0 12.5
6. நாகப்பட்டினம் 0.52 0 80.0
7. சேலம் 0.95 5.0 70.0
8. நாமக்கல்; 0.95 13.34 53.33
9. தூத்துக்குடி 1.35 0 58.34
10. வேலூர் 2.23 0 80.0
11. விருதுநகர் 2.27 45.46 0
12. திருச்சி 2.31 28.57 21.43
13. பெரம்பலூர் 2.31 50.0 40.0
14. கரூர் 2.31 12.5 25.0
15. தருமபுரி 2.42 11.11 61.11
16. கடலூர் 2.46 23.08 0
17. விழுப்புரம் 2.46 4.55 59.09
18. திருவண்ணாமலை 2.91 11.11 50.0
19. திருநெல்வேலி 3.19 52.63 21.05
20. மதுரை 3.69 38.46 23.08
21. தேனி 3.69 0 62.5
22. இராமநாதபுரம் 4.32 63.64 0
23. காஞ்சிபுரம் 4.62 15.39 15.38
24. திருவள்@ர் 4.62 17.14 42.86
25. திண்டுக்கல் 4.75 7.14 71.43
26. புதுக்கோட்டை 10.59 92.31 0
27. சிவகங்கை 11.22 75.0 0
28. கன்னியாகுமரி 15.38 100.0 0

Advertisements
This entry was posted in 2010, அறிவியல், நிலத்தடி நீர் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் and tagged , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s