அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் – வி பழனி

காற்றும் நீரும் இன்றி மனிதனால் உலகத்தில் சஞ்சாரம் செய்ய முடியாது. மனிதனின் அத்தியாவசமான தேவைகளில் இவை இரண்டும் மிக முக்கியமானவை.

உலகில் மூன்றில் இரண்டு பகுதி கடல் நீரால் நிறைந்து இருந்தாலும், கடல் நீரை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். 95% நீர் கடல் நீராகத்தான் இருக்கிறது. நீரின் தேவை என்பது ஒவ்வொரு நாளும் அதிகமாகிக்கொண்டே வருகிறது, காரணம் கட்டுக்கடங்காத மக்கள் தொகை பெருக்கும். இந்தியாவின் மக்கள் தொகையை பொறுத்த அளவில் உலகில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், விரைவில் முதல் இடத்திற்கு வந்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தமிழ்நாட்டை பொறுத்த அளவில், இந்தியாவில் 6 ஆவது இடத்தில் இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் தண்ணீர் வரத்து என்பது ஆறு, ஏரி, குளங்கள் மற்றும் நிலத்தடி நீர். தமிழ்நாட்டில் இவை 1980 களிலிருந்தே வற்றத் தொடங்கி விட்டன. கிருஷ்ணாவை கேட்டு கேட்டு இன்னமும் கிடைத்தபாடில்லை. மற்ற மாநிலங்களை எதிர்பார்ப்பதற்கு முன், நம் மாநிலத்தில் தண்ணீரை எப்படி சேகரித்து, சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் அறிந்து, புரிந்து, அதனை செயல்படுத்தி நடக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

தண்ணீர் வறட்சிக்கான முக்கிய காரணங்கள் :

1. பருவ மழை சரியாக பொழியாமை. மரங்கள், காடுகள் அழிக்கப்பட்டு, அதனால் பருவமழை பாதிப்பு.
2. உலக வெப்பமயமாவதால் பருவமழை பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் சுற்றுச்சூழல் மாசுப்படுதல்.
3. நீர் நிலைகள் சரியாக பராமரிக்கப்படாமல், நீரை சேகரிக்க முடியாமல் போகிறது.
4. ஆறுகளின் மணற்கொள்ளை.
5. நீர் நிலைகளில் ஆக்கரமிப்பு.
6. கடல் அருகாமையில் உள்ள இடங்களில், நிலத்தடி நீர் குறைய குறைய அதனை கடல் நீர் ஆக்கரமித்து, நிலத்தடி நீரின் தன்மையை மாற்றிவிடுகிறது.
7. பெரிய தொழிற்சாலை க்கழிவுகள் தகுந்த முறையில் வெளியேற்றப்படாமல், நல்ல நீரில் தொடர்ந்து கலந்துக்கொண்டே வருவதால், மாசு கலந்து, மக்கள் பயன்படத் தகுதியில்லாத நீராக மாறி விடுகிறது.

தண்ணீர் வறட்சியால் ஏற்படும் விளைவுகள்:

1. இந்தியாவை பொறுத்த வரையில் விவசாயம் என்பது முதுகெலும்பு. நீர் பற்றாக்குறையால் முதலில் பாதிப்புக்கு உள்ளாவது விவசாயமே. விவசாயம் பாதிக்கப்படும் போது, வருமானம் கருதி, விவசாயிகள் விளை நிலங்களை, வீடு கட்டும் மனைகளாக மாற்றி விடுகின்றனர். காலப்போக்கில் இயற்கைக்கு புறம்பான இந்த ஆக்கரமிப்புகள், நமக்கே ஊடு விளைவிப்பனவாக மாறிவிடுகின்றன.

2. பயன்பாட்டு நீர் பற்றாக்குறையால், பலவிதமான நோய்கள் மனிதனை தாக்க ஆரம்பிக்கின்றன.
• உண்ண, உடுக்க, குடிக்க என தேவையான நீர் இல்லாமல் மனிதனின் சுகாதாரம் முதலில் பாதிக்கப்படுகிறது. அதாவது குளியல், துணிகள் சுத்தப்படுத்தி உடுத்த முடியாமல் போவதால், தோல்வியாதிகள், தொற்றுவியாதிகள் ஆரம்பிக்கின்றன.

• நல்ல நீர் கிடைக்காமல், தொழிற்சாலை கழிவு க்கலந்த நீர், அல்லது பயன்படுத்தக்கூடாத மாசுப்படிந்த நீரை வேறு வழியின்றி பயன்படுத்த ஆரம்பிப்பதால், cholera, typhoid fever, salmonellosis, gastrointestinal viruses,dysentery போன்ற வியாதிகள் தாக்குகின்றன. மேலும் நீர் பற்றாக்குறையால் trachoma, plague and typhus போன்ற வியாதிகள் தாக்குவது மட்டும் இல்லாமல், உலக அளவில் நீர் பற்றாக்குறையால் 80% நோய் கிருமி பாதிப்புகளினால் மக்கள் அவதிப்படுவதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

3. புவி வெப்பமயமாதல்- மக்கள் தொகை நெருக்கடி, அன்றாட வாழ்க்கை தேவைகள் என்ற பல்வேறு காரணங்களால் நாம் சுற்றுப்புறத்தை எல்லாவித்ததிலும் மாசுப்படுத்தி வருகிறோம். அதிக அளவு மாசுப்படுத்தலின் காரணமாக பூமியின் வெப்பநிலை பலமடங்கு அதிகமாகி பல எதிர்மறை விளைவுகளை மனித உயிர்களுக்கு இயற்கையே கொடுக்க ஆரம்பித்துவிடுகிறது.

நீர் வளத்தை அதிகமாக்க தீர்வுகள் :
1. இயற்கை வளங்கள் குறையாமல் அழியாமல் பாதுகாக்க வேண்டும்.

• மரம் வளர்த்தல், காடுகள் அழியாமல் பாதுகாத்தல் போன்றவை மிக முக்கியமானவை.
• தொழிற்சாலை, வாகனங்கள் மூலம் வெளியிடப்படும் மாசுக்களைக் கட்டுபடுத்த மரங்கள் அவசியம்.. தாவர எண்ணெய் அல்லது விலங்குக் கொழுப்பு மூலப்பொருட்களின் மூலம் தயாரிக்கப்படும் பயோ டீசலை அதிகளவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.

• நம் அன்றாட தேவைகளுக்கு சூரிய மின் ஆலையை நிறுவுவதோடு ஒவ்வொரு வீட்டிலும் சூரிய ஒளியில் பெரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். அரசாங்கம் இதற்கு தேவையான வசதி வாய்ப்புக்களை மக்களுக்கு செய்துத் தரவேண்டும்.

• வீடுகளிலும், ஆலைகளிலும் தேவைப்படும் எரிவாயுவிற்கு பதிலாக வேப்பங்கொட்டைகள் (Azadirachata indica), புங்கம் (Pongamia pinnata) ஆமணக்கு (Ricinus communis), காட்டாமணக்கு (Jatropha curcas) போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் உயிரி எரிவாயுக்கனைப் பயன்படுத்த வேண்டும்.
மேற்கண்டவற்றால், சுற்றுச்சூழல் மாசுப்படுவது தவிர்க்கப்படுகிறது. உலகம் வெப்பமயமாதல் சுற்றுச்சூழல் மாசுப்படுவதால் மட்டுமே ஏற்படுகிறது. மாசுப்படுத்தல் குறைக்கப்படும் போது, பூமியின் வெப்பம் கட்டுக்குள் இருக்கும், தட்பவெப்பநிலை மாற்றங்கள் சீராக இருக்கும் போது, பருவ மழை பொழிய எல்லாவிதமான வாய்ப்புகளும் இயற்கையாக ஏற்படுகின்றன.

2. நிலத்தடி நீரின் அளவை உயர்த்த வழிகள்:
• மழை நீர் சேகரிப்பு மிகவும் அவசியமாகிறது. ஏரி, குளம், கிணறு போன்றவற்றை பாதுகாத்து, மழைக்காலங்களில் நீர் தேக்கங்களில் தூர்வாரி, நீரை சேமித்துவைக்க ஆவன செய்ய வேண்டும்.

• மேலும் சின்ன மற்றும் பெரிய அளவிலான நீர் தேக்கங்களை தேவைப்படும் இடங்களில் உருவாக்க வேண்டும்.

• வீடுகளில் மழை நீர் வீணாகாமல், நேரடியாக கிணற்றிற்கு அதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வடித்தொட்டிகளின் மூலம் பூமிக்கு மழைநீர் செல்ல வழிவகைகள் செய்யலாம்.

A. வீடு B. மழைநீரை சேகரித்து வரும் குழாய், C & D நீரை சுத்தப்படுத்தும் வடித்தொட்டி, E. கிணறு, .F சமையல் + குளியல் அறை நீர் கழிவுகள் செல்லும் குழாய், .G. தோட்டம்
• வீடு மற்றும் அலுவலகம், தொழிற்சாலை நீர் கழிவுகளை வீணாக்காமல், கழிவு நீரை சுத்தகரித்து, சுழற்சி முறையில் அவற்றை திரும்ப பயன்படுத்தக்கொள்ள முடியும். சுத்தப்படுத்தப்பட்ட இந்த நீர், பயிர்கள், தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்.

3. புதிய தொழிநுட்பங்களை ப்பயன்படுத்தி, சுற்றுப்புறத்தை பாதுக்காத்துக்கொள்ளுதல்.
• புவியியல் தகவல் முறைமை (Geographic information system -GIS) யை பயன்படுத்தி, நம் சுற்றுச்சூழலின் நிலையை தேவைக்கேற்ப அவ்வப்போது அறிந்து, அவற்றை ஆய்ந்து, பகுத்து, தேவைக்கேற்ப, சரியான முன்னேற்பாடுகளையும், மாற்றங்களையும் செய்துக்கொள்ள இந்த முறைமை பெரிதும் உதவுகிறது. வள மேலாண்மை, சுழல்சார் தாக்க மதிப்பீடு, (Environmental Impact Assessment),நகர்ப்புறத் திட்டமிடல் போன்ற துறைகளில் இது பெரிதும் பயன்படக்கூடியது. எடுத்துக்காட்டாக, இயற்கை அழிவுகளின் போது, அவசரகால உதவிகள் அணுகுவதற்கான கால அவகாசங்களை எளிதில் கணிப்பதற்கு, அவசரகாலத் திட்டமிடுபவர்களுக்கு இது உதவும். சூழல் மாசடைதல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான இடங்களைத் தேர்வு செய்வதிலும் புவியியல்சார் தகவல் முறைமைத் தொழில்நுட்பம் பங்காற்ற முடியும்.

• Eco Friendly System: இந்த முறையில் வீடு, தொழிற்சாலைகள், அலுவலங்களை அமைத்து, நீர் மற்றும் காற்றினால் சுற்றுப்புறம் மாசுப்படாமல் பாதுக்காத்து க்கொள்ள முடியும். கழிவு நீரை சுத்தகரித்து, நீரை சிக்கனமாக பயன்படுத்த இந்த முறை அதிகம் பயனளிக்கிறது. நீரை சுழற்சி அடிப்படையில் மீண்டும் பயன்படுத்தும் போது, தேவைப்படும் நீரின் அளவு கணிசமான அளவு கட்டுப்படுத்தப்படுத்தப்பட்டு சேமிக்கப்படுகிறது. அதே போன்று காற்றில் கலக்கும் தேவையற்ற மாசும் சுத்தகரிக்கப்பட்டே வெளியேற்ற படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதுக்காக்கப்படுகிறது.

4. பொதுமக்களை நேரடியாக சுற்றுச்சுழல் நடப்புகளில் ஈடுப்படுத்தல்.

• அரசாங்கம், சுற்றுச்சூழல் நிர்வாகத்தின் மூலம், குழுக்கள் அமைத்து, சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி, அதில் அவர்களை நேரடியாக ஈடுபடசெய்ய வேண்டும்.

• பொது மக்களும், தாங்கள் வழிக்கும் இடங்களில் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை உடனுக்குடன் State Pollution Control Board (SPCB) – India Environment Portal க்கு அறிவித்து, அவற்றை பாதுக்காக்க ஆவன செய்ய வேண்டும்.

• SPCB தவிர்த்து அரசாங்கத்தின் மற்ற சுற்றுச்சூழல் மற்றும் தண்ணீர் சம்பந்த ப்பட்ட நிர்வாகங்கள் அனைத்தும், ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட்டு, சுற்றுச்சூழலை நல்ல முறையில் பாதுக்காக்க எல்லா நடவடிக்கைகளும் காலத்தாமதமின்றி எடுக்கவேண்டும்.

இவற்றை தொடர்ந்து சில ஆண்டுகள் செய்து வந்தாலே போதும், நமக்கு தேவையான நீரை நாம் சேகரித்துக்கொள்ளவும், சிக்கனமாக பயன்படுத்தவும் கற்றுக்கொள்வோம். மேலும், நிலத்தடி நீரும் குறையாமல், நம் தேவைகளை தீர்க்கும் அளவுக்கு இருக்கும்.

நன்றி : கூகுல் மற்றும் கூகுலின் மூலம் சென்ற வெவ்வேறு தளங்கள், விக்கிப்பிடியா & SPCB

Advertisements
This entry was posted in 2010, அறிவியல், நிலத்தடி நீர் சிக்கல்களும் அறிவியல் தீர்வும். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s