இந்தியக் கூட்டமைப்பில் தமிழர்நிலை – சோம இளங்கோவன்

பழையன பேசி பயன்கள் இல்லையெனினும் பழையதைப் புரிந்துகொள்வது முக்கியம்.சில உண்மைகளைப் புரிந்துகொள்வதுமிகவும்முக்கியம். இந்திய விடுதலைக்குப் போராடியவர்களில் தமிழர்களுக்குப் பங்குண்டு என்பதே பெரிதும் மறைக்கப்பட்டுள்ள உண்மையாகும். தஞ்சை மாவட்டத்திலே மட்டுமே ஒவ்வொரு கிராமத்திலும் எத்தனை பேர் இந்திய விடுதலைக்காகப் போராடிய “தியாகிகள்” என்று பார்த்தால் நாமே மூக்கு மேல் விரல்வைத்து ஆச்சரியப் படவேண்டும்.தங்கள்பொருள்,பெருமை,வாழ்வு அனைத்தையும் இழந்த கப்பலோட்டிய தமிழர் வ.ஒ.சிதம்பரனார் போன்றோர் அடைந்த பெருமை என்ன? தனது வாழ்க்கையையே அர்ப்பணித்த பலர் திரு.வி.க போன்றோர் முதல் காமராசர் வரை அவமானப்படுத்தப்பட்டனர். காமராசரையே காந்தியார் மதுரை வந்தபோது ஓரங்கட்டி ராசகோபாலாச்சாரியார் அவமானப்படுத்தினார். ஆனால்தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் பலரும் இந்திய விடுதலையால் பயன்பெற்றனர். பெரியபட்டியலே பதவிகளில் அமர்த்தப்பட்டனர். பண்டித நேருவிற்குப் பிடிக்காதவர்கள் கூடப் பார்ப்பனர் என்ற காரணத்தினால் பதவிபெற்றனர்.

அரை நேரக்கல்வி,அரை நேரம் குலத்தொழில் கற்றுக்கொள்ளுங்கள் என்று தமிழர்களின் முன்னேற்றத்தின் அடிவயிறானப் படிப்பிலே ஆச்சாரியார் கை வைத்தார் .அதை எதிர்த்து என்றும் அமைதி காத்துப்போராடிய,அடுத்தவர்கள் சொத்துக்கோ,அரசின் சொத்துக்கோ எந்தக்கேடும் வரக்கூடாது என்று தன்வாழ் நாளெல்லாம் போராட்டங்கள் நடத்திய பெரியார் மண்ணெண்ணையும் ,தீக்குச்சியும் கையில் தயாரக வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் நான் சொல்லும் வரைக்காத்திருங்கள் என்ற அறிவிப்பை விட்டபின்னர் தான் ஆச்சாரியார் முதலமைச்சர் பதவிவிலவேண்டும் என்று அக்கிரகாரங்களே கட்டாயப்படுத்தி விலகவைத்தனர். தனக்குப் படிப்பில்லையே என்று தயங்கிய காமராசரைப் பெரியார்,வரதராசுலு போன்றோர் கட்டாயப்படுத்தி அறிஞர் அண்ணா ,மற்றபல தமிழர்கள் துணிவு கூறி முதலமைச்சர் ஆக்கி, குடியாத்தம் தொகுதியில் வெற்றி பெறவும் வைத்தனர்.தமிழர்களின் பொற்காலமாய் காமராசர் ஆட்சி திகழ்ந்தது. ஆச்சாரியார் மூடிய பள்ளிகளையெல்லாம் நீங்கள் திறக்கின்றீர்களே அது ஏன் என்று பத்திரிக்கையாளர் கேட்ட போது காமராசர் அவர் எந்த காரணங்களுக்காக மூடினாரோ அதே காரணங்களுக்காகத்தான் திறக்கின்றோம் என்றுசொன்னார். அந்தப் பொற்காலத்தைக் கனவாக்கித் தமிழகத்தை இருட்டடிக்க வந்த்ததுதான் “கே” என்ற காமராசர் திட்டம். சீனப்போர், காங்கிரசின் ஊழல்வெடிப்பு போன்ற பல தொந்தரவுகளில் மாட்டிக்கொண்ட நேரு பெருமானைக் காப்பாற்றக் காமராசர் தன்னையே காவு கொடுத்துப்பதவி விலகினார். எந்தக் காரணத்தைக் கொண்டும் தனது ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளை மாற்றாத பெரியார் அத்துணை நிகழ்ச்சிகளையும் ஒதுக்கிவிட்டு உடனே சென்னைபுறப்பட்டார். உடனே தந்தி கொடுத்தார் “இது தமிழ்நாட்டிற்கும், தங்களுக்கும் செய்துகொள்ளும் தற்கொலையாகும்” என்று. காமராசர் காங்கிரசு தலைவரானார். இந்தியாவின்பிரதமர் பதவி திணிக்கப்பட்டபோது வேண்டாம் என்றார். பின்னர் தோல்வி மேல் தோல்வி, இந்திராகாந்தியால் அவமானம் என்று சிறிது சிறிதாகக் கொல்லப்பட்டார்.

அவரது பின் பலத்திலே டில்லியிலே இருந்த சில தமிழ்நாட்டு அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்குத் தொழில் திட்டங்கள்,கல்வி நிறுவனங்கள் என்று கொண்டுவந்தனர். தமிழகத்தின் சரித்திரம் மாறியது. அறிஞர் அண்ணா வெற்றி கண்டார். ஆனாலும் காமராசர் வெற்றி பெற்று டில்லி சென்றிருந்தால் தமிழ்நாட்டிற்கு எவ்வளவோ செய்திருப்பார் .நாம் இப்போது ஆட்சிக்கு வந்து என்ன சாதித்து விடமுடியும்,விடுவார்களா என்றே கேட்டராம். அவர் முதலமைச்சர் ஆனதும் சப்பானுடன் ஒரு ஒப்பந்தம். சேலம் இரும்பு உருக்காலையை சப்பானியர் முழுவதும் கட்டி, சேலத்திற்கும் சென்னைத் துறைமுகத்திற்கும் ரயில் பாதையையும்போட்டு வரும் இரும்பில் ஒரு பகுதியை சப்பான் வாங்கிக்கொள்வது மீதி இந்தியாவிற்கு என்று. இதில் செலவே இல்லாமல் இந்தியா அடையும் பயன்ஏராளம். எவ்வளவோ முயன்றும் இந்திராகாந்தி இதை நடக்கவிடவில்லை. இதை முழுவதும் அறிந்த, அண்ணா கூடவே இருந்த இன்றும் வாழும் உயர்திரு சொக்கலிங்கம் என்ற் தனிச்செயலாளர் சொன்ன உண்மை. அண்ணா அவர்கள் மனமுடைந்து என்னய்யா இந்த பதவி இருந்து என்ன பயன்,அதிகாரம் முழுதும் அங்கேதானே என்றாராம். உருப்படியான எந்த முன்னேற்றத்தையும் தமிழ்நாட்டில் கொண்டுவர முடியவில்லை.ஆகவே இன்றைய நிலை ஆட்சியில் தமிழன், மறத்தமிழன், வீரத்தமிழன் என்றுபல பட்டங்கள் வாங்கிய யார் தமிழ் நாட்டிலிருந்தாலும் தமிழரின் சிண்டு இருப்பது டில்லியில்தான், இதைத் தமிழர்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். இன்று சாதனைகளாகப் பேசப்படுபவையனைத்தும் புதுடில்லியின் பிச்சை என்பதுதான் உண்மை. சில அமைச்சர்கள் டில்லியிலே இருந்தபோது துணிச்சலாகச் செயல்பட்டுச் சில திட்டங்களை, அதுவும் பல் எதிர்ப்புக்களைத்தாண்டிதான் கொண்டுவந்துள்ளனர் என்பது மறைக்கப்படமுடியாத உண்மை.

பல தமிழரின் வேதனைகளும் புதுடில்லியின் அதிகாரத்திமிரினாலும், அங்குள்ள தமிழின எதிரிகளின் வெறியினாலுந்தான். மேலே அமைச்சர்கள் என்றிருந்தாலும் புதுடில்லியின் ஆதிக்கம் முழுதும் அங்குள்ள அதிகாரிகளின் கொட்டங்களாகத்தான் திகழ்கின்றன்.தமிழ்நாட்டிலேயிருந்து ஒருவர் சென்று ஆச்சார்யப்பெரியவாள் {காஞ்சிசங்கராச்சாரி} நேரே உங்களைப் பார்த்துப் “பிரசாதம்” தரச்சொன்னா என்று கூறிப் பலச்சலுகைகளைப் பெற்று வந்துள்ளது தான் இன்றையவரலாறு. “வேதம்புதிது” படமெடுத்த இயக்குனர் திலகம் பாரதிராசாவிடம் “படத்தைக் காஞ்சிமடத்துலே காண்பித்துவாருங்கள்” என்று சொன்னபோது இந்திய அரசின் தலைநகரம் புதிடில்லியா, காஞ்சிமடமா” என்று கேட்டதுதான் இந்தியக் கூட்டமைப்பில் தமிழரின்நிலை.

ஈழப்போராட்டத்திலே கொட்டும் மழையிலே உலகே கண்டிராத கைகோர்த்தப் போராட்டத்தின் நீளம்,மற்ற எத்துணை எத்துணை அமைதிப் போராட்டங்கள் அனைத்துத் தமிழர்களும் நடத்தினர்? மற்ற மாநிலங்களைப் போல எரித்தும்,கொழுத்தியும் போராடியிருக்க முடியும்,நடந்த ஆட்சி மட்டும் தமிழன் ஆட்சியாக் இல்லாதிருந்தால்,அப்போது புதுடில்லிப் பணிந்திருக்க்லாம். எங்கோ ஒரு குசராத்தியோ மற்ற இந்தியனோ கொல்லப்பட்டால் குதித்தெழும் இந்தியா எத்துனைத் தமிழ் மீனவர்கள் சுட்டுக் கொள்ளப்படார்கள் என்ற கணக்கையாவது கண்டதுண்டா? இதுதான் இந்தியக் கூட்டமைப்பில் தமிழரின்நிலை.

சம்சுகிருதத்திற்குக் கோடிகள், செம்மொழியானத் தமிழுக்குக் கோவணம் இதுதான் இன்றைய நிலை. சேது சமுத்திரத்திட்டம் என்ற கனவை நனவாக்க எத்துணை எத்துணைத் தடைகற்கல், கடைசியிலே ராமன் வந்து உச்ச அநீதிமன்றத்திலே வில்லை உடைக்கக் காத்திருப்பதுதான் இன்றையநிலை.பிரிவினை தான் கைவிடப்பட்டுவிட்டதே இன்னும் அந்தப்புலம்பலால் என்ன பயன் என்று கேட்பது காதில்விழுகிறது .ஆகவே நிகழ்காலத்திற்கு வந்து பின்வருங்காலத்திற்குச் செல்வோம். தமிழ்நாட்டில், இந்தியா, இந்திய அளவிலே,தமிழ்நாட்டைத் தாண்டிச் செல்லவேண்டும் என்ற விழிப்புணர்வெல்லாம் மிகக்குறைவு. இப்போதுதான் கொஞ்சம் தலை தூக்கியுள்ளது. இதனால் நடந்ததென்ன? இப்போதுதான் தமிழர்கள் சிலர் இந்திய அளவிலே நினைக்கவும் ,செயல்படவும் ஆரம்பித்துள்ளோம். ஆனால் அத்ற்குள்ளே அங்கே மலையாள,மற்ற வடமாநில அதிகாரிகள் குவிந்துள்ளனர். தமிழர்கள் பலர் தமிழ்நாட்டிலேயே வேலை செய்யவும், வாழவுந்தான் விரும்பியிருந்தனர். தமிழர்கள் பலசந்தர்ப்பங்கள் இருந்தும் புதுடில்லியையோ, அங்கேயேயிருந்து பெரிய பதவிகளையோ அடைய விருப்பமில்லாமல் முயற்சி எடுக்காமல் கோட்டைவிட்டுவிட்டனர்.

இராமநாதபுரத்துத் தமிழன் சென்னையில் வாய்ப்பில்லாமல் வாழ்வது போலத் தமிழர்கள் புதுடில்லியில் வாய்ப்பை இழந்துள்ளனர். அடுத்துத் தமிழர்கள் நீதித்துறையிலும் சரி, மற்ற இலக்கியத்துறைகளிலும் சரி தமிழர் முன்னேற ,விருதுகள் பெற மற்ற தமிழர்கள் வளரட்டும் ,வாழட்டும் என்று நினைக்காமல் பலரின் முன்னேற்றத்தைத் தடுத்துள்ளனர். ஆணானப்பட்ட சிவாசி கணேசணுக்கே ஒரு முறைகூடச் சிறந்த நடிகர் விருது கிடைக்கவில்லை.(கடைசியிகிடைத்தச் செருப்புவிருது சிறப்புவிருது என்றழைக்கப்பட்டது) பலருக்குச் சாகித்ய விருதுகள் கிடைக்கவில்லை. இதில் பெரிய வேதனை என்னவென்றால் இவர்கள் சரியாகப்ப ரிந்துறைக்கப் படவில்லையென்பது தான். பலமாநிலங்களில் பலர் சிறுவயதிலேயே நீதிபதிகள் ஆக்கப்பட்டு உச்சநீதிமன்றத்திற்குச் சென்றுவிடுகிறார்கள்.இன்றும் ஒரு தமிழன் மற்றொரு தமிழனைப் பாராட்டுவது தனக்குப் பதவியோ, உதவியோ வேண்டுமென்பதற்காகத்தானே! அனைவரும் சிங்கைத்தமிழர்கள் போல இந்த மாதிரிப் போட்டி வைத்து அழைத்துப் பாராட்டி விருந்து வைக்கும் நாள் தாய்த் தமிழகத்தில் வரும் என்று சொல்லவோ, ஏன் நினைக்கவோ கூடமுடியுமா? அப்படியே நடந்தாலும் அது எப்படி நடக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதானே !

வருங்காலத்திற்கு நம்பிக்கையுடன் வருவோம்!

குண்டு சட்டிக்குள் குதிரையோட்டுவது முதலில் ஒழியட்டும் குறி இந்தியா,புதுடில்லி,உலகத்தமிழர் என்று உயரட்டும்.நமது இளைய தலைமுறைக்குச் சரியான பயிற்சிகள் தருவோம். வெறும் மருத்துவர், பொறியியல் ,கணினி என்றில்லாமல் அவரவர் விரும்பும் துறையில் செல்ல ஊக்குவிப்போம். யூத இனத்திலே ஒரு கொள்கை உண்டு. நீ என்ன செய்கிறாய் என்பதல்லக் கேள்வி, நீ எது செய்தாலும் செருப்பு தைத்தாலும் உன்னைவிட அதை வேறொருவர் நன்றாகச் செய்யமுடியாது என்ற அளவிற்குச் செய்து பெருமை வாங்கு என்பது.அந்தக் கொள்கை வளர ஒவ்வோரு தமிழ் நெஞசத்திலும் உறுதியேரட்டும்.ஒரு தமிழர் இன்னொரு தமிழரை மனமாரப் பாராட்டுவோம்.குறைகளை நேரிலே தனிமையிலும், நிறைகளைப் பொதுவிலே பாராட்டியும் பேசுவோம்.தமிழன் என்று மட்டும் சொல்லி புதுடில்லியை ஒருகாலும் அசைக்க முடியாது. இதை அனைவரும் உணர்ந்துகொள்வோம். மற்ற மாநிலத் தாழ்த்தப்பட்டப், பிற்படுத்தப்பட்டோரை ஒன்றிணைப்போம். இன்று இந்தியாவிலே இதைச்செய்து விட்டால் எந்தஅ திகாரியோ, ஆட்சியாளரோ ஒன்றும் எதிர்த்துச் செயல்படமுடியாது. பாராளுமன்ற உறுப்பினர்கள், வழக்குறைஞர்கள், பேராசிரியர்கள் என்ற பல்துறை வல்லுனர்களும் சேர்ந்து ஒரு சமூகநீதி மன்றம் புதுடில்லியிலே அமைப்போம். அதில் பொதுவான சாதியொழிப்பு,சமுதாய உரிமைகள், மறுக்கப்பட்டு வரும் சட்ட, கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள் இவைகளை நிலைநாட்டி அனைதிந்திய அளவிலே ஒன்று கூடுவோம். பொதுவான நதிநீர், மின், அறிவியல் பங்களிப்பில் அனைத்திந்திய அளவிலே செயல்பட்டு அனைவரும் முன்னேறும் வழிகாண்போம்.

அனைத்து மொழிகளும் வளர, அறிவு பூர்வ மொழியாராய்ச்சிகள் ஒற்றுமைகளை வெளிக்கொணர்ந்து ஒன்றாகச் சிந்திப்போம். நமது மொழியைப் பற்றி நாமே பேசியோ, கல்தோன்றி மண்தோன்றாத காலத்துப் பெருமை பேசியோ காலத்தை வீணாக்க வேண்டாம். ஆராய்ச்சிகள் ஆழமாகட்டும் ,அது அனைத்திந்திய, அகில உலக அளவிலே விரியட்டும். உலக அளவிலே தமிழ், தமிழாராய்ச்சி பல உயர்ந்தபல்கலைக் கழகங்களிலே நடக்கட்டும். உலகு உணரும் போது இந்தியாவும்தானாகவே உணரட்டும். இதிலே மற்றத் திராவிடமொழியினரும் பங்கேற்கட்டும். அவர்களது பெருமைகளையும் ஆராயட்டும். புதுப்படைப்புக்கள் மொழி பெயர்க்கப்பட்டு ஒற்றுமை உண்டாக்கட்டும் உலக அளவிலே தமிழகள் பரந்துபட்டு வாழ்கின்றார்கள்.அவர்கள் அனைவரும் தாய்த் தமிழகத்திற்கு வந்துபோகவும், குழந்தைகள் வந்து பயிலவும், குடும்பங்கள் வந்து தங்கி தமிழ், தமிழுணர்வு பெறவும் வழியமைப்போம். ஒவ்வொரு யூதரும் “ஒருநாள்செரூசலத்திலே” என்று சொல்வது வழமை.ஒவ்வொரு தமிழ் வழியினரும் ஒரு முறையாவது தமிழகம், முடிந்தால் பலமுறை என்று வரவழைப்போம்.தமிழ் உலகவங்கி அமைத்து இந்தியர்களில் தமிழர்கள் யாருக்கும் சலைத்தவர்கள் அல்லர் என்பதை மெய்ப்பித்துப் பெருமையடைவோம். இந்தியாவில் தமிழர் சமுதாய, மனிதநேயத்தில் மட்டுமல்ல மற்ற துறைகளிலும் வழிகாட்டுபவர்கள் என்ற புதிய தத்துவத்தை நடைமுறைப்படுத்தி வாழ்வோம், உயர்வோம்.அப்போதுதான் நாம் பேசி வந்த பெருமைகள் உண்மையடையும். தமிழனும் இந்தியனாக மதிக்கப்படுவான்.

Advertisements
This entry was posted in இந்தியக் கூட்டமைப்பில் தமிழர் நிலை, மணற்கேணி 2010. Bookmark the permalink.

2 Responses to இந்தியக் கூட்டமைப்பில் தமிழர்நிலை – சோம இளங்கோவன்

  1. pirabuwin சொல்கிறார்:

    தமிழரின் நிலையை நினைத்தால் கண்ணிலிருந்து ரத்தம் தான் வருகின்றது.
    சுயநலவாத அரசியல் தலைமைகள் சிந்திக்கட்டும்.

  2. chandrasekhar R சொல்கிறார்:

    தமிழனுக்கு இந்தியாவின் சர்வ அதிகாரமும் கொடுக்கப்ப்ட்ட போது தனக்கும் தன் குடும்பத்திற்கும் வசதிகளை தேடிக் கொண்டவனை, கண்டறிந்து சொல்லும் பண்பும் அல்லது அவனை எதிர்க்கும் பண்பும் இல்லாமல் போய்விட்டதை குறிப்பிட்டு இருக்கலாம். வாய்ப்பு கொடுத்தாலும் பயன் படுத்திக் கொள்ளவில்லை. கொடுத்த வாய்ப்பை பயன் படுத்தாத துரோகிகளை பற்றிய குறிப்பும் இல்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s