இந்தியகூட்டமைப்பில் தமிழரின் நிலை-போளூர் தயாநிதி-அ.ச

முன்னுரை

இன்றைய நிலையில் இந்தியகூட்டமைப்பில் தமிழரின் நிலை வருந்ததக்க நிலையில் உள்ளதெனலாம்.தமிழுக்கோ ,தமிழருக்கோ எந்த உயர்வுமில்லை ,பலனுமில்லை. தமிழர்கள் நலன்காக்கப்படுவதுமில்லை.அவரிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதுமில்லை. இந்தியனின் கண்களில் வாக்குசேகரிக்கும்போது வாக்காளனாகவும் இந்தியசந்தையில் தமிழன் நுகர்வோராகவும் கிடக்கிறான். தமிழனுக்கு என்று ஒரு மொழி, பண்பாடு, தனியான வரலாறு உள்ளதை பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.

மொழியும் கலைகளும்

உலகில் முதல் முதலில் தோன்றியவன் தமிழன் எனவும், முதலில் தோன்றிய மொழி தமிழ் மொழிதான் என்பதை பாவாணர் முதற்கொண்டு பல்வேறு ஆய்வாளர்கள் சான்று காட்டுகின்றனர். உலகின் கலைகளுக்கொல்லம் தமிழன் உரியவனாகிறான் என்பதும் பல்வேறு சான்றுகளில் காட்டப்படுகிறது.இவைகள் எல்லாமே படித்தவர்கள் முதற்கொண்டு பாமரர்கள் வரையிலும் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்.

மகளீர்

தமிழகத்தில் இப்போது பெண்களுக்கு அதிகம் தேவைப்படுவது முட்டாள்கள் பெட்டிதான் (தொலைக்கட்சிபெட்டிதான்) பழமை பற்றியும் பண்பாடுபற்றியும் கவலைகொள்வதில்லை. தொலைக்கட்சிகளில் காட்டப்படும் தொடர்களில் மூழ்கிப்போகின்றனர், அந்த பண்பாட்டு சீரழிவுதான் இன்றைய நாகரீகமாக மாறிப்போனது. இதனால் குடும்பங்களில் பல்வேறு சண்டைகள், வழக்குகள், திருமணமுறிகள் என் செய்வேன் தமிழ்சாதியே?

இன்றைய இளைஞ்சர்கள்

முறையில்லாத உணவுப் பழக்கத்தினால் தேவையில்லாத நோவுகள். அதைப்பற்றி சிந்திப்பதில்லை நோவுக்கு மருந்து அதுவும் கொலைமருந்துகளை நாடிவிழுகின்றனர் .பொருளாதார சூழளிர்கேற்றபடி அடிமைக் கல்வியை ஏற்கின்றனர் . நோவுகளோடு பொத்தக சுமையும்வேறு. இதற்க்கு மேடையில் தமிழ் தமிழ் முழங்குகிறவர்களும் விதிவிலக்கல்லர்.அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் நம்பும் படியாகஇருக்கும். இப்படிதொடங்கும் கல்விமுறை ஒருசில காலங்களில் இந்த இளைஞ்சர்கள் எந்த கட்டுப்பாடுகளுக்கும் உட்படுவதில்லை,இது அனைவருக்குமானது அல்ல என்றாலும் பெரும்பான்மை இளைஞ்சர்கள் இப்படித்தான் என உறுதியாக சொல்லலாம். பத்தாம் வகுப்பு படிக்கும் போதே மயக்கப் பொருட்களுக்கு(மது) அலைகின்றனர். அரசு மக்களின் பசியை நீக்குகிறதோ இல்லையோ குடிக்காமல் இருந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளது. அதனாலதான் ஊர்தோறும் சாராய கடைகள் மக்களுக்கு சேவை செய்கிறது. பள்ளிகளிலேயே குடிபழக்கம் தொடங்குகிறது இவர்கள் மக்களைப்பற்றியே சிந்திப்பதில்லை இவர்களின்எதிகாலம் ? முறையில்லாத வாழ்க்கை முறைதான். இவர்களை பற்றி அரசோ, ஆன்மீகமோ ,எவரும் கவலைப்படுவதில்லை .அனால் சில இளைஞ்சர்கள் மொழி ,இனஉணர்வு கொண்டுவிட்டால்? அதுதான் இவர்களுக்கு சங்கடமே. இவர்களை எப்படி மழுங்கடிப்பது என்பது இவர்களின் வேலையாக போய்விடும்.

வேலை வாய்ப்புகள்

தமிழகத்தில் இன்று பணம் உள்ளவனுக்கே வேலை பணம் இல்லைஎன்றால் வேலை இல்லை. பணம் கொடுத்துவிட்டால் தகுதிபற்றியெல்லாம் நாம் கவலைகொள்ளத் தேவைஇல்லை. இதில்கூட தமிழ்படித்துவிட்டேன் வேலை கொடுங்கள் என்று எல்லாம் கேட்டுவிடக்கூடது .அப்படி கேட்டுவிட்டாலோ மொழி ,இனபற்று கொண்டுவிட்டலோ அவன்தான் தீவிரவாதி. தமிழகத்து பக்கத்து மாநிலங்களில் எல்லாம் அந்தந்த மாநில மொழி படித்தவர்களுக்குதான் பணிவாய்ப்பு அதெல்லாம் தமிழகத்தில் இல்லை தமிழன் ஆண்டால்தானே?

வேளாண் தொழில்கள்

தமிழகவேளாண்மையை சீரழிக்கவே வேலை உறுதியளிப்பு திட்டம் என்ற நூறுநாள் வேலைவாய்பு திட்டம்.இது வேளாண்மையை அழிக்க வந்த திட்டமெனலாம்.கூலியே கொடுக்காமல் சம்பளம் என்றால் வருவார்களா? ,வேலைக்கு ஆட்களும் கிடைப்பதில்லை போதியவருவாயும் கிடைப்பதில்லை ஒருபக்கம் விளை நிலங்களெல்லாம் விலை நிலங்கலாகிப்போனது இருந்த நிலங்களை விற்றுவிட்டு நுகர்வு பண்பாட்டினால் முறையில்லாத செலவுசெய்து அழித்துவிட்டு நாடும் இல்லாமல், சொந்த வீடும் இல்லாமல் நீலமலை (நீலகிரி) மக்களைப்போல் வந்தேறிகளுக்கு விட்டுவிட்டு அடிமை வாழ்க்கை வாழ போவதுதானே மிச்சம்.

ஆற்று நீர் சிக்கல்கள்

இன்றைய தமிழகத்தைப் பொறுத்தவரை வானம்பார்த்த நிலமாகிப்போனது வீட்டுமனைகள்,அடுக்குமாடி கட்டிடங்கள் ,பன்னாட்டு தொழிற்சாலைகள் இவர்களுக்கு போனதுபோக மீதமுள்ளநிலங்கள் நீரின்றி வறண்டுபோகிறது, காரணம் நீர்வரும் வழிகலான கர்நாடகவில் இருந்துவரும் காவிரியும்,கேரளாவில் இருந்துவரும் முல்லைபெரியாரும்,ஆந்திரத்தில் இருந்துவரும் கிருட்டினாவும் நீர்வராமல் வறண்டுபோனது. இந்தியதேசியம் பேசி சீரழிப்பவர்கள் தமிழ் நாட்டுக்கு வரவேண்டிய நீர்பங்கீடு பற்றி பேசுவதேயில்லை.ஆனால் தமிழர் நலன் என்று வந்துவிட்டால் அவற்றைசிரழிக்கவே கங்கணம் கட்டிக்கொண்டு வந்துவிடுகின்றனர். இப்படிதமிழுக்கும் தமிழருக்கும் எந்த பலனும் இல்லாமலே கொலேசுகிறது இந்தியஅரசு. தமிழ்மொழி ஆட்சிஇலுமில்லை. தமிழன் இன்று அடிமையாகவே கிடக்கின்றனர்.

Advertisements
This entry was posted in இந்தியக் கூட்டமைப்பில் தமிழர் நிலை, மணற்கேணி 2010. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s