பார்பனியக் கூட்டுச் சுய அரசியலும் அடிமை மனநிலைச் சித்தாந்தமும்

பார்பனியக் கூட்டுச் சுய அரசியலும் அடிமை மனநிலைச் சித்தாந்தமும்

இந்திய தேசியத்தின் அடையாளம் அடிமைகளால் கட்டமைக்கப்பட்டது அடிமைகளாகத் தங்களைப் எண்ணிக் கொள்கின்ற சமூகக் கூட்டமே தனது பின்புலத்தில் ஏராளமான உன் முரண்களைக் கொண்டு திகழ்கின்றது. ஆண்டான் ஒ அடிமை, முதலாளி ஒ தொழிலாளி, மேல்வர்க்கம் ஒ அடித்தட்டு வர்க்கம் இறைவன் ஒ மனிதன் என்கின்ற ஒன்றிலிருந்து வேறாகாத ஒன்றை மீறி மற்றொன்றில் தொடருகின்ற முரணியங்கியல் கொண்ட மனோநிலையில் தேசியம் உருவாகியது.

பொது உடைமைச் சித்தாந்தத்தின் தொடக்கக் காலத்தில் இயற்கை அடிமையாகக் குழுமத்தில் ஒன்றிணைந்து இருந்த மனிதனின் சிந்தனைக்குள் மதம், சாதி,வர்க்கம், வர்ணம், பிறப்பு தொழில் ஆகிய ஒவ்வொன்றிலான ஆதிக்கமும் தொடர்ந்து விழுந்து உறைந்து போன நிலையில் தன்னையறியாமல் தன்னை விட மேலானதொரு சக்தி தன்னைக் கண்காணிப்பதாகவும் அடைக்கலத்தில் நிழலில் சுதந்திரமான சூழலியக்கைதியாகவும் தன்னைத் தனிமனிதன் தீர்மானித்து விடுகின்றான். இது ஒருவகையான மாறுபட்ட உளநிலை ஆழ்நிலை உணர்வில் தன்னைப்பற்றிய இத்தகைய எண்ணம் பயம் கலந்த சமூக இயங்கியலுக்குள் மனிதனை இழுத்து நிறுத்துகிறது.

துனிமனிதன் தன்னை பலகீனமானவனாக உணருதலின் பிடியில் இருந்து மனதளவில் விலகவும் சுகந்திர வாழ்தலின் நுழைத்துக் கொள்ளவும் வேண்டி இயக்கங்களுக்குள்ளும் அடையாள அரசியலுக்குள்ளும் தன்னை அந்நியப்படுத்தித் தொலைந்து போகின்றான்.

ஆயினும் தனிமனிதக் கூட்டுப்புத்தியின் விளைவாக உருவாகின்ற எதனுள்ளும் போலிமையானதொரு மையம் கட்டமைக்கப்படுகின்றதே தவிர தொடர்ந்து ஒட்டு மொத்த சமூகத்தில் அவ்அடையாளமும், இயக்கமும் பிறிதொன்றினால் கட்டப்பட்டுக் கிடப்பதை நாம் உணரமுடியும்.

ஒன்றை மற்றொன்று கட்ட வேண்டும் என்று நினைப்பதும் கட்டப்பட்டுக் கிடப்பதாகவும் அதை மீட்டெடுக்கப் போராடுவதிலும் இன்பங்காண்பதும் பார்ப்பணியக் கூட்டுச் சுயத்தால் உருவாக்கப்பட்ட மனோநிலை. மதம் தன்னை ஏற்றுக் தொண்டவர்களை எவ்விதம் தன்னில் தொலைத்து விடுகின்றதோ அதைப்போல பார்பணியக் கூட்டுச் சுயத்தில் விழுந்த சமூகமும் தன்னை இழந்து போகின்ற தன்னிலை இழக்கின்ற நிலைக்கு தள்ளப்படுகின்றது.

பார்ப்பனக் கூட்டம் தன்னை முதன்முறையாகச் சதவீதத்தில் மிகவும் பிற்பட்டதுவாக எண்ணிப்பார்த்தபொழுது எழுந்த பயம் அதனால் உண்டான மனோநிலை இவற்றை மதம் (அ) தெய்வம் என்பதோர் கூட்டுச்சக்தியால் சாதித்துக் கொண்டது.

இன்றைக்கு ஒவ்வொரு இனச் சமூகத்தின் மீதும் சாதியின் தாக்கம் தன்னைத் தனித்துவப்படுத்திடவும் பார்ப்பனவெளியை இட்டு நிரப்பவும் வேண்டிய
செயல்களில் பரவிக் கிடக்கின்றது.

சொல்லில் நடத்தையில், உடையில் மேலைத்தேய மரபை நாகரீகமாகக் கொள்ள வேண்டிய அவசியம் பார்ப்பனக் குழுமத்திற்து அரசியல், பொருளாதார ரீதியில் தேவைப்பட்டது.அதே போல பார்பபனர்களின் சொல்லையும்(உச்சரிப்பு)உணவு, உடை,பழக்கவழக்கம்(நடத்தை) ஆகியன நாகரீகம் என்றெண்ணிப் பின்பற்றப்படுவது தன்னை மேல் சாதியினனாகக் காட்டுக்கொள்ள மட்டுமின்றித் தன்னுள் இருக்கும் ஒடுக்கப்பட்ட மனநிலையைத் திருப்தி செய்வதற்காகவும் தான்.

இத்தகைய பிரயத்தனங்களும் சிரத்தைகளும் தன்னைச் சமூகத்தின் கண்களில் புதிய அடையாளத்தில் பொதிந்து வைத்துக் கொள்ளவே தவிரவும் தன்னை மேல் வர்க்கம் ஆளுவதை வெளிப்படுத்திக் கொள்ள இயலாத சிந்தனையும் ஆகும்.

ஏனெனில் இந்திய தேசியத்தின் சமூக இயங்கியல் மற்றும் அது சார்ந்து சுழற்சி உள்முரண்களால் முடுக்கிவிடப்பட்டதாகும். இத்தகைய உள்முரண்கள் ஒன்றையொன்று எதிர்க்கவும், ஈர்க்கவும் செய்கின்றன. சமூக இயக்கத்தை இழுத்துவ் செல்வனவும் இவைகள் தான்.

ஆகப்பெரும் சிந்தனையிலிருந்து நாம் கருதுவது பாரதூரமான பார்பனியத்தின் வேர்கள் பரவிக் கிடக்கின்ற தேசியத்தினுள் தனிமனிதச் சுயம் என்பது ஒன்றில்லை. இங்கிருப்பது பார்ப்பனியத் தேசியம் உருவாக்கத் தந்த பார்ப்பனியக் கூட்டுச் சுயமே.

பேரியார் ,அம்பேத்கார், அயோத்திதாள், போன்றோர் இகப் பார்ப்பனியக் கூட்டுச் சுயத்தில் கட்டுண்டு யாந்திரீகக் கட்டுக்குள் கிடந்த தனிமனிதசி சுயத்தை மீட்டெடுக்கப் போராடினாலும் அந்த வெளியை சாதியும், மதமும் இனவெறியும் அடைத்துக் கொண்டன.

இன்றைக்கு இயக்கங்களால் மேற்கொள்ளப்படுகின்ற சாதிய அடையாள அரசியலுள் எங்கேனும் ஒரு தொடக்கப்புள்ளியில் பார்ப்பனியக் கூட்டுப் புத்தி நிரவிக்கிடக்கும் என்பதில் ஐயமில்லை.

காலனியத்துவ ஆட்சியைக் கடந்து வந்துள்ள இந்திய தேசியத்தினுள் காலனிய அடையாளங்கள் வென்றெடுக்கப்பட இயலாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டுக் கிடப்பதைப் போன்நு எல்லாச் சாதிகளும் தன்னை பார்ப்பனியக் கூட்டு மனநிலைக்குள் இணைத்ததால் எழுந்த அடிமன அடிமைத்தனச் சிந்தனா சக்தியை மாற்றுவது(அ) சிதைப்பது மற்றொரு தேசியத்தைக் கட்டி எழுப்பும் வரை சாத்தியமாகப் போவது இல்லை.

-Jees Center

Advertisements
This entry was posted in எல்லாச் சாதிகளும் ஒடுக்கப்பட்ட உணர்வு கொண்டிருப்பது ஏன் ?. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s