ஈழம் -நேற்று இன்று நாளை

முன்னுரை : ஒரு சாமனிய இந்திய,தமிழ்க் குடிமகனின் பார்வையில் இந்தக் கட்டுரையை சமர்ப்பிக்கின்றேன்.ஏறத்தாழ 37 வருட காலமாக,1970களில் இந்தியா வந்து சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் முதல்(அகதியாக அல்ல),கடந்த மாதம் இலங்கைக்கு சென்றது வரையிலான என்னுடைய பார்வையில் இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து எழுத விழைகிறேன்.புள்ளி விவரங்களைக் கொடுப்பதில் அல்ல என் நோக்கம்.இணைய தளத்தில் தேடினால் அது அளவிற்க்கு அதிகமாகவே கிடைக்கும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து 1976-ம் வருடம் வேளாங்கண்ணிக்கு புணிதப் பயணம் செய்த்தது ஒரு ஈழத் தமிழ்க் குடும்பம்.யாழ்ப்பாணத்தில் கடிகாரக் கடை வைத்திருப்பதாகச் சொன்னார்கள்.இரண்டு மகன்களும் ஒரு மகளும் பெற்றோருடன் வந்திருந்தார்கள்.சிறிய அழகான குடும்பம்.எங்கள் குடும்பத்துடன் மிக நெருங்கி பழகினார்கள்.சுமார் ஐந்து நாட்களுக்குள் மிக நெருக்கமாகி விலாஸங்களைப் பெற்றுக் கொண்டு பிரிந்தோம். 1976 கிரிஸ்மஸுக்கு அவர்களிடம் இருந்து வாழ்த்து மடல் கிடைக்கப் பெற்றோம்.அதன் பின் போர் வெடித்தது.அவர்களைக் குறித்த எந்த தகவலும் இல்லை.அந்த குடும்பத்திற்க்கு என் சமர்ப்பணம்.

போர்க்கு முன் போரட்டமாக ஈழத்தமிழன் :

ஆங்கிலேயர் காலத்திலே ஆங்கிலம் கற்று ,தெற்க்காசியா முழுவதும் நல்ல உயர் பதவி வகித்து வந்த காலங்கள் துவக்கமாக இருந்தன.எப்போதும் இந்தியத் தமிழனும்,வம்சாவளியாக வாழ்ந்த தமிழனும் சிங்களனுக்கு ஒன்றாகத்தான் தெரிந்தான் போலும்.
250 ஆண்டுகளுக்கு முன் குடியேறி,அந்நாட்டின் குடிமகனாகவே மாறிய அவனுக்கு ,1948 ல் சுதந்திரம் கிடைத்த பின்னும் உள் நாட்டுப் போருக்கு முன்னும் அங்கே வாழ்ந்த வந்த அவனுடைய இனத்திற்க்கு – நிறைவான வாழ்க்கை கிடைக்கவில்லை.கிடைத்து இருந்தால் அவன் ஏன் போராடப் போகிறான்.படிப்பறிவில் கை வைத்து,அடிப்படை உரிமைகளைப் பறித்து, கல்வியிலேயும் அவர்களுக்கான உரிமைகள் குறைக்கப் பட்டு நேற்றும் கல்வியில் முன்னேறாத ஒரு சமுதாயத்தை சிங்களன் உருவாக்கினான்.

முதல் தவணையாக இந்தியா வந்த அவனின் மன நிலை,இலங்கையை அவன் மண்ணை அவனை விட்டு பிரிக்கவே முடியா நிலை…!நொடிக்கொருதரம் அவன் நாட்டின் பெருமையை, தான் காணும் தமிழ் நாட்டு தமிழனிடம் எல்லாம் சொல்லி கொண்டே இருப்பான்.”நீங்கள் கதைப்பது சரி இல்லை.நாங்கள் குழந்தைகளையும் மரியாதையாகத்தான் அழைப்போம் …”இது போல இன்னும் பல…..பல….கதைகளையும் கதைத்துக் கொண்டே இருப்பான்.
சொல்லப் போனால் கல்வியில் அவர்களுக்கு உரிய உரிமைகளும்,வாய்ப்புகளும் தரப் பட்டிருந்தால்,உலகில் தமிழன் என்றால் கல்வியாளன் என்று தலை நிமிர்ந்து சொல்லும் வாய்ப்பை தந்திருப்பர்கள்.உலகம் முழுவதும் உள்ள தமிழ்க் கணிணி வலைத் தளங்களில்,பெரும் பான்மை அவர்களுக்கு உரியதுதான்.

தஞ்சம் அடைந்து…கிடைக்கும் வேலையை… அது எவ்வளவு கஷ்ட்டமானலும் சஹித்துக் கொண்டு,அதில் கிடைக்கும் தன் வருமானத்தில் தன் இனத்திற்க்கு உதவ எதாகிலும் ஒரு வழி கிடைக்காதா…?என ஏங்கும் மனத்திற்க்கு சொந்தக்காரன்….!நேற்றைய இலங்கைத் தமிழன்.தனது அடுத்த தலை முறையாவது சொந்த நாட்டில்… நல்ல கல்வி கற்று, சமத்துவ சமுதாய நிலை பெற்று,உலகெங்கும் அகதியாக உள்ள தன் இனம் சுற்றுலாவுக்கும்,தொழிலுக்கும் மட்டுமே வெளிநாடுகளுக்கு செல்லவும்,தன் குடும்ப விஷேசங்களுக்கும்,மத இன விழாக்களுக்கும் கௌரவமாக கலந்து கொள்ளும் கனவுகளில் வாழ்ந்தவன் அவன்….! நிறைவேறாத கனவுகளுடனே நிறந்தர நித்திறையைக் கைகொண்டவன் அவன்.

இன்று ஈழத்தமிழன் :2,00,000 ஈழத்தமிழர்கள் கனடாவில் நல்ல நிலையில் வாழ்கிறார்கள்.100,000 பேர் அகதி முகாம்களிலும் 50,000 வெளியிலுமாக இந்தியாவில் வழ்கிறார்கள்.மற்றும் உள்ளவர்கள் ஐரோப்பிய நாடுகளிலும் வசிக்கிறார்கள்.ஒரு சமூகத்தின் மக்கள் தொகையைப் பிரித்து பிரித்து மட்டுமே சொல்ல முடிவது என்பது கொடூரமான விஷயம்.”எனக்கு நாடில்லை….” எனக் கூறும் கொடுமையான சூழலில்தன் இன்றைய ஈழத்தமிழன் இருக்கிறான்.
திபெத்திலிருந்தும்.பர்மாவில் இருந்து வந்த அகதிகள் இந்தியர்களைப் போலவே சாதாரண வாழ்க்கை வாழ….நம் சகோதரன் மட்டும் திறந்த வெளிச் சிறை போன்ற அகதி முகாமில் வாழ்கிறான்.
நம் நாட்டுல் அகதியாக அவன் வாழும் சித்திரவதையான வாழ்க்கை முறை கண்டும்,மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்ந்த போதும், ஸ்ரீலங்கன் ஏர்வேஸில் எகனொமிக் வகுப்பில் ஏறும்போதும் இன்றைய தமிழனின் நிலை பற்றி அறியும் வாய்ப்பு கிடைத்தது.பெரும்பாலும் தொழிளாலர்களாய்,வீட்டு வேலை செய்யும் பெண்களாயும்,ஒன்றிரண்டு உயர் பதவியில் இருப்பவர்கள் என எல்லோரையும் காணலாம் அங்கு.

நம்பிக்கை இருக்கிறது….என யாருக்கு காண்பிக்க என புரியவில்லை…பெரும்பாலான படிப்பறிவில்லாத தொழிளாலர்கள் பலரின் பனியனிலும் புலியின் படங்கள்.பேச்சுக்கள் பெரும்பாலும் புலம்பல்களாகத்தான் வெளி வருகின்றன.அவர்களின் நிலையை பயன்படுத்தி ஏமாற்றி இரத்தம் உறிஞ்சும் கழுகுகளிடம் இருந்து தப்பிப்பதற்க்கான வழிகளைப் பற்றியதாகத்தான் அவர்களின் பேச்சு இருக்கும்.

என்ன செய்வது எனப் புரியாமல், வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தில் யார் அழைத்தாலும் வேலைக் கிடைத்தால் போதும் என வந்து அவர்கள் படும் பாடு சொல்லி மாளாது.கேட்பதற்க்கு ஒரு அரசு இல்லை.வெளியில் சொல்லவும்,தீர்வு காணவும் முடியாமல் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.சரியான உணவு இல்லை,உறக்கம் இல்லை வேலை பளு அதிகம்,சம்பளம் குறைவு……சொந்த நாட்டில் உறவுகளின் நினைப்பு….நிம்மதி என்பதே அறியாமல்,எதைப் பார்த்து பயப்படுகிறோம் என்பது தெரியாமலே பயந்து நடுங்கிக் கொண்டு……என்னக் கொடூரமான நிலையில் வாழ்கிறான் இன்றைய ஈழத் தமிழன்!

பெண்களின் நிலை இன்னும் கொடுமை.ஆப்காணில் வேலை பார்த்து இப்போது அபுதாபியில் எஞ்சினியராக பணியாற்றும் நண்பரிடம்,”உயிருக்கு பயமாக இல்லையா?”என கேட்ட போது சொன்னார் ”எங்கே இருந்தாலும் சுடுவான்….பின்ன என்ன?”என விரக்தியுடன் கூறிய பதில்தான் இப்போதைய ஈழத்தமிழனின் நிலை.

சம்பாரித்து என்ன செய்வது…..? என் நாடு…என கம்பீரமாக சொல்லும் நாட்களைத் தொலைத்தது போல கண்களில் ஒரு வெறுமை.எதை குறித்து கனவு காண்பது என்பது தெரியாமல் ஒரு வாழ்க்கை.கொஞ்சம் பணம் சேர்த்து ஸ்பாணஸர் யாராவது கிடைத்தால் ஆஸ்த்ரேலியா போய் செட்டில் ஆகலாம்.அல்லது கனடா போகலாமா…?வறண்டு போன பாலைவனமான மணத்துடன் இலக்கில்லாத வாழ்க்கை.

போரின் உக்கிரத்தால் சின்னாபின்னமான ஒரு சமூகம்,மனத்தளவில் கடுமையான பாதிப்புகளும்,வறுமையும் போதாதற்க்கு தன் நாட்டிலேயும் தன் பாதுகாப்பற்ற நிலை என சகலவித்திலும் வாழ்க்கையையும் கணவுகளையும் தொலைத்து நிற்க்கிறது இன்றைய ஈழத்தமிழ்ச் சமுதாயம்.

நளைய வாழும் ஈழத்தமிழன்:கொழும்பு ஏர்போர்ட்டில் போய் இறங்கியது முதலே தெரிய ஆரம்பிக்கின்றது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்க்கான முயற்ச்சிகள்.நாட்டின் முக்கிய வருமான வழிகளான டீத்தூள்,சுற்றுலா மற்றும் முத்துக்கள் ஏற்றுமதி இம் மூன்றும் வெகு விரைவில் சரியாகும் சரியாகும் சூழ்நிலை தெரிகின்றது.

கண்டி வரையிலான பாதையில் இயற்க்கையின் அழகில் மனம் மயங்கினாலும்,மக்களின் வாழ்க்கத் தரத்தில் வறுமைதான் தெரிகின்றது.பெரும்பாலும் சிங்களர் வசிக்கும் பகுதிகள் அவை.போரின் பாதிப்பு நாடு முழுவதும் கொட்டிக் கிடக்கின்றது.உலகப் பொருளாதார வீழ்ச்சியும் அந்நாட்டை கடுமையாக பாதிதுள்ளது.

போருக்கு உயிரின் மதிப்பும் மக்களின் இன பேதமும் இல்லை.பாதிப்பு எல்லோருக்கும்தான்.மீசை முளைக்கு முன் ஜவான்கள் கையில் ஏ.கே.47 திணித்து விடப் படுவதை பார்க்க முடிகின்றது.உயிர் இழப்பு அங்கேயும் தெரிகின்றது.ஒரு அழகான நாடு சின்னபின்னமானதை கண்கூடாக காணும் போது மனது வலிக்கின்றது.

சிங்களர்களின் மன நிலை எவ்வளவு இளக்கமாகி இருக்கிறது எனத் தெரியவில்லை.ஆனால் கொழும்பில் ஒரு டாக்ஸியில் ஏறிய போது அதன் ஓட்டுனர் மிகவும் நடு நிலையோடு பேசினார்.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என நினைக்கிறேன்…!

“இந்தியா உதவி இல்லாமல் போர் நிறுத்தம் இங்கு சத்தியமே இல்லை.இலங்கை அரசு முன்பே தமிழர்களுக்கு சமத்துவம் மற்றும் சலுகைகளைக் கொடுத்து மதித்து நடத்தி இருந்தால் போரே இருந்திருக்காது.தமிழர்களும் கொஞ்சம் இறங்கி வந்திருக்க வேண்டும்.அரசும் இறங்கி வந்திருக்க வேண்டும்.இப்போது ஓரளவிற்க்கு எல்லாம் சரியாகி வருகின்ற்து…..ரணில் விக்ரமசிங்கே உலக அரங்கில் ஒரு நல்ல கௌரவத்தை எங்கள் நாட்டிற்க்கு தந்தார்.ஆனால் இப்போதோ ஒரு ரௌடி நாடாக எங்களின் நாடு மாறிப் போய் விட்ட்து.”இது அந்த ஓட்டுனரின் வாக்கு மூலம்.
வளமான எதிர்காலம் கணடிப்பாக உண்டு.கொஞ்சம் திட்டமிட்டால் போதும்.வெளிநாடுகளில் குடும்பம் குழந்தைகளுடன் வாழும் ஈழத்தமிழர்கள்,தங்கள் குழந்தைகளுக்கு நல்ல படிப்பை கொடுப்பதோடு தன்னம்பிக்கயும் தருவதும் ஒரு வழி.தோல்விகளை மட்டுமே சொல்லி வாழ்வில் மிரட்சியைத் திணிக்காமல், ஆக்கப் பூர்வமான எதிர்காலத்திற்க்கு வழி காட்டுதல் முக்கியம்.கிடைக்கும் பணத்தை எதிர்கால சமுதாயம் ஆரோக்கியமான ஆக்கப் பூர்வமான வழியில் வளர உதவுங்கள்.இளம் சமுதாயம் ஆரோக்கியாமான உடல் – மன நலத்துடன் வளர உங்கள் பணத்தைச் செலவிடுங்கள்.
எங்களுக்கு இருக்க இடம் உணவு மட்டுமல்ல நல்ல தரமான உயர் கல்வியும் கட்டாயம் வேண்டும் என் தமிழகத்தில் கேளுங்கள்.உங்களை வைத்து அரசியல் லாபம் பார்க்கும் அரசியல் வியாபாரிகளுக்கு இதைச் செய்வது கஷ்ட்டம் இல்லை.அவரவர் வீட்டு அப்பன் வீட்டு சொத்திலிருந்து அல்ல,இந்த மண்ணின் மைந்தர்களின் வரிப் பணத்திலிருந்துதானே கேட்கிறீர்கள்.கண்டிப்பாக கல்வியுடன் கூடிய ஆரோக்கியமான இளம் சமுதாயமே நல்ல சிறப்பான ஈழம் உருவாக வழி வகுக்கும்.
இப்போது கொஞ்சம் போராட்ட எண்ணங்களை மற்றி வைத்து விட்டு சாமானியனின் வாழ்வையும் அவன் இழந்த நாட்களையும் கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பாலஸ்தீன நிலையைப் பார்த்து, அதை வளைகுடா நாடுகள் கையாளும் விதத்தைக் கண்டால் இன உணர்வு என்பதன் அர்த்தம் புரியும்.அமெரிக்காவை பகைத்துக் கொண்டு ஏதும் உலகறிந்து செய்ய முடியவில்லை.அறியாமல் எவ்வளவு செய்கிறார்கள்.பாலஸ்தீன இளைஞர் ஒருவருக்கு போதிய கல்வித் தகுதியோ,அனுபவமோ இல்லையானாலும் அவரைக் காட்டிலும் அனுபவுமும்,கல்வித் தகுதியும் கொண்ட மற்ற இனத்தவரை விட அவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பல மடங்கு சம்பளமும் அளிக்கப் படுகின்றது.இது கண்கூடான உண்மை.
ஈராக் மாணவர்கள் அமீரகத்தில் படிக்க அணைத்து வசதிகளும் செய்து தரப் படுகின்றது.

யூதர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.இதற்க்கெல்லாம் முன்னோடி அவர்கள்.உலகில் எந்த மூலையில் ஒரு யூதன் பாதிக்கப் பட்டாலும் ஓடி வருவார்கள்.முன்னேரும் ஒவ்வொரு யூதனின் பின்னும் அவனின் இன நிழல் இருக்கும்.யூத சமுதாயம் ஒரு காலகட்டத்தில்,நாடிழந்து சிதறிக்கிடந்த நேரத்தில் அவர்கள் சத்தமில்லா புரட்சியாக கல்வியைத்தான் எடுத்தார்கள்.என்னை விட எவ்வளவோ படிப்பாளிகள்,அறிவாளிகள் நிறைந்த ஈழச் சமுதாயத்திற்க்கு நான் சொல்வது புதிது அல்ல எனத் தோன்றும்.இருக்கும் சூழ்நிலையைப் பயன்படுத்தி கொண்டு ,சிறப்பான எதிகாலத்தைத் திட்டமிடல் ஒன்றே வழி.

ஒற்றுமைக்கு பெயர் போனவர்கள் ஈழத்தமிழர்கள்.புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் உணர்வுகள்,ராஜபக்‌ஷேவை ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலை கழகத்தில் பேச விடாமல் திருப்பி அனுப்பிய போது உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.இன்னமும் அவர்களின் மனதில் அக்கினிக் குஞ்சொன்று சுடர் விட்டு ஒளிர்வதை உலகம் கண்டு மிரண்டது.
சரியான திட்டமிடல் இருந்தால்தான் இருபது வருடத்திற்க்கு அப்புறமாவது போர் ஸூழ்நிலை மறக்கடிக்கப்பட்ட ஆரோக்கியமான மன நிலையுள்ள,மகிழ்ச்சியான ஈழச் சமுதாயத்தை உறுவக்கக் கூடிய சமுதாயம் கிடைக்கும்.இழப்புகளின்றி.

முடிவுரை: எங்கெங்கோ இருக்கும் ஈழத்தமிழர்கள் தன் சமுதாயத்தை நினைத்துக் கொண்டிருக்கையில் இங்கே ஒற்றுமைக் குறைகிறதோ என எண்ணத் தோன்றுகின்றது.துன்பத்தில் ஒன்றுபட்டு எழுதப் பட்ட நிலை மாறி அவரவர்க் கருத்துக்களை வெளிப்படுத்தும் வேகம் மட்டுமே காணப் படுகின்றதோ என தோன்றுகின்றது.ஒரு வேளை அது என்னுடைய பிரமை என்று மட்டும் இருந்தால்…சந்தோஷம்தான்.
மனத்தில் வேதனையுடன்,இளய சமுதாயத்தில்,என் மகனின் வயதை ஒத்த பிள்ளைகள் தொலைத்த வாழ்க்கையை, அனுபவிக்கும் வெறுமையையும் காணும் போது எனக்கு தோன்றிய கருத்துக்கள் இவைதான் என் சிறிய அறிவுக்கு இதை தவிர ஏதும் தெரியவில்லை.தவறுகள் இருந்தால் பொறுத்தருள வேண்டுகிறேன்.

ஜீவாஃப்லோரா(As per passport Anjammal jeevanantham)

Advertisements
This entry was posted in ஈழத் தமிழர் நிலை நேற்று இன்று நாளை. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s