ஈழத்து தமிழர் நிலை நேற்று , இன்று , நாளை

ஈழத்து தமிழர் நிலை நேற்று , இன்று , நாளை

ஈழம் பல வகையான இயற்கை வளங்களை கொண்ட நலப்பரப்பை தன்னகத்தே கொண்ட ஓர் அழகிய நாடு. ஓரு நாடு அங்கு வாழும் மக்களால் தான் பெருமையடைய வேணைடும். இங்கு பௌத்தம், இந்து, முஸ்லீம், கிருஸ்த்து, என்று பல மதங்களை உள்ளடக்கிய மக்கள் தமிழர்கள், சிங்களவர்கள் என இரு பிரிவினராக வாழுகின்றார்கள். பெரும்பாண்மையான மக்கள் சிங்களவர்கள், ‘ சிறிலங்கா’ என்ற பெயரில் உலகால் இன்று அறியப்படுகிறது. சிங்களம், தமிழ், ஆட்சி மொழிகளாக உள்ளது. சிறிலங்காவின் தென், மத்திய பகுதிகளில் சிங்களவர்கள் அதிகமாக வாழுகின்றார்கள். அவர்களுடன் இந்தியாவிலிருந்து வந்த ‘இந்தியவம்சாவளித்தமிழர்கள்’ கலந்து வாழ்கின்றார்கள். வடக்கு, கிழக்கு, பகுதியில் தொன்னூறு சதவிதம் தமிழர்களெ வாழுகின்றார்கள்.

பிரச்சனையின் வேர்கள்

இலங்கை என்ற பேரில் அங்கிலேயரால் ஆளப்பட்டப்போது, தமிழர் சிங்களவர் இவ்விரு இனத்தவர்களும் சமமானவர்களாகவே மதிக்கப்பட்டார்கள், நாடும் சுதந்திரம் அடைந்தது. கூடவே பிரச்சனைகளும் வளர்ந்தது. பெரும்பான்மையான மக்கள், ஆட்சி அதிகாரம் சிங்களவர்கள் கைக்கு போனது. சிங்களவர்களைப்போலவே தமிழர்களும் அங்கு பூர்வீக குடி மக்களே ஆனால் அவர்களுக்கு ஆட்சியில் உரிய பங்கு கிடைக்கவில்லை. இரண்டாம் தர குடி மக்கள் போல் நடத்தப்பட்டார்கள் நாளடைவில் தமிழர்களை பலவீனப்படுத்த என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்த்து சிங்கள அரசு, அரசின் மக்கள் ‘நலத்திட்டங்கள்’ யாவும் தமிழ் மக்கள் வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகளில், பெயரளவில்தான் நடந்தது. மாணவர்களை கல்வி தரப்படுத்தல் என்ற முறையில் சீரளிக்கப்பட்டனர். வசதியுள்ள சொற்ப மாணவர்கள் வேளிநாடுகளில் படிப்பை மேற்கொண்டனர் ஏனைய வளரும் தலைமுறை இளைஞர்கள் பெரும்மளவு விரக்த்தி அடைந்தார்கள். தமிழர்கள் சமமாக நடத்தப்படவில்லை. இதை எதிர்த்து எவ்வளோவோ குரல் கொடுத்தார்கள் எதுவும் எடுபடவில்லை. ‘பெரும்பான்மை நாங்கள்’ என்ற ஓன்றையே இதக்கேல்லாம் உலகிற்கு பதிலாக காட்டினார்கள்.

அரசியலிலுதம் தமிழர்கள் வேறும் பொம்மையாகவே செயல்பட முடிந்தது. பாராளுமன்றத்திலும் தமிழர் பிரதிநிதிகள் வாதாடினார்கள், வெளிநடப்பு செய்தார்கள், எந்த பலனும் கிடைக்கவில்லை. காலங்கள் ஆக பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. ஆங்காங்கே எதிர் குரலும் போராட்டமும் அரம்பித்ததும் சிங்கள அரசு அடக்குமுறையாக வன்முறையை ஏவினார்கள் பல உயிர்கள் கொல்லப்பட்டது இளம் தலைமுறையினர் மேற்படிப்பும் படிக்க வழியின்றி, வேலைக்கு செல்லவும் வழியின்றி செய்வதறியாது குழம்பி நின்றனர். இந்நிலையில் வன்முறையையும் கட்டவிழ்த்துவிட்ட சிங்களரசை எதிர்க்க துணிந்தனர் தம் மக்களை நாமே காப்போம் என்று அங்குள்ள இளைஞர்கள் ஆயூதம் ஏந்த தாயாரானார்கள் போராட்டம் உருவானது தமிழ் போராளிகள் உருவானார்கள் சிங்கள அரசின் போலீசையும் இராணுவத்தையும் திரும்பி அடித்தார்கள், இரு தரப்பிலும் உயிர்பலிகள் தொடர்ந்தது. தழிழ் போராளிகளால் சிங்கள இராணுவம் அதிகம் உயிர் பலியான வேலைகளில், சிங்களவர் மத்தியில் கலந்து வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்களை சிங்களமக்கள் தாக்கி, அவர்கள் உடமைகளைகொள்ளையடித்து, வன்முறையில் ஈடுபட்டனர் இங்கேயும் தமிழர்கள் கொல்லப்பட்டனர் சிங்களவர் மத்தியில் வாழும் தமிழர்கள் எப்போதுமே பயவுணர்வோடுதான் வாழவேண்டியிருந்து. தமழ்ப்போராளிகள் தங்கள் பலத்தை அதிகரித்துக்கொண்டே போணார்கள். அங்குள்ள இளைஞர்கள் போராட்டத்திலுள்ள நியாயத்தினாலும், வேறு வழியின்றியும் இப் போராட்டத்தில் தீவிரமானார்கள். போராட்டங்கள் வலுப்பெற்றது இரு தரப்பிலுமே உயிர் பலிகொண்டு இரத்த ஆறு ஓடியது. பிழைப்பு கேள்விக்குறியானது. இந்திய வழி தமிழர்கள் பலர் இந்தியாவில் புகலிடம் தேடினர் வடக்கு , கிழக்கு மக்கள் பிழைப்புக்கா மேலை நாடுகளுக்கு புலம் பெயர்ந்தனர் இன்று உலகேங்குமே பரந்து ,விரிந்து வாழும் தமிழ் மக்கள் தங்கள் தாயகத்தை நெஞ்சில் சுமந்த வண்ணம் வாழ்கின்றார்கள்.

இந்திய வம்சாவழித்தமிழர் நிலை

ஆங்கிலேயர்களாரல் இலங்கை ஆளப்பட்டபோது, அங்கு இரப்பர், தேயீலை தோட்டங்களில் வேலை செய்வதற்க்காக,இந்தியாவிலிருந்து கப்பலில் அழைத்து வரப்பட்டவர்கள்தான் இந்திய வம்சாவழியினர். இவர்கள் அடிப்படை வசதிகளை மட்டும் அனுபவித்துக்கொண்டு நாட்டை வளப்படுத்தினார்கள். ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டுச்சென்ற பிறுகு இந்தியத்தமிழர் நிலைமையும் படிபடியாய் மோசமானது ஓட்டுரிமையில் சிங்கள அரசை நிர்ணையம் செய்யும் ஓட்டு வங்கியாக தமிழர்கள் இருந்தார்கள். இதை தடுக்கும் பொருட்டு சிறிமா சாஸ்த்திரி ஓப்பந்தம் என்று சொல்லி விரும்பினால் தாயகம் திரும்புவர்கள் திரும்பலாம் என திட்டம் தீட்டி அநேக மக்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பபட்டனர் பெருவாரியான தோட்டத்தொழிலாலர்கள் இந்தியா சென்றார்கள் அங்கே சென்ற மக்களுக்கு ஓப்பந்தப்படி உதவிகள் அமையவில்லை. அங்கேயும் கஷ்ட்டப்பட்டார்கள் ஓட்டுவங்கியை கருத்தில் கொண்டுவரும் சிங்கள அரசாங்கம் தமிழருக்கு ஓரு மதிப்பை வழங்கிக்கொண்டிருந்தது. தமிழர் பலம் குறைய குறைய அதுவும் மறைந்தது.

ஈழத்து தமிழர் நிலையும் அயல்நாடுகளும்

இந்தியா பாக்கிஸ்த்தான், சீனா போன்ற நாடுகள் இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகுகின்றது, மற்றும் சில நாடுகளும் உதவி செய்கின்றன. இங்கே தொடர்ந்து வரும் சண்டை, மற்றும் இனக்கலவரங்களால் நாடு நலிவடைந்து கிடந்த நிலையில் இந்தியா, நார்வே போன்ற நாடுகள் பேச்சு வார்த்தை மூலம் பிரச்சனைகள தீர்க முயன்று தோற்றுப்போனது. இந்திய அரசு இலங்கை அரசுடனான வர்த்தக தொடர்பு நிலையை அனுசரித்தே பேசுவதாக பட்டது, பிரச்சனைகளின் மூலம் ஏது என்று உணராதது போல் பாவனை செய்கின்றார்கள். அத்துடன் அவர்கள் பெரும்பான்மையின மக்கள் அரசு சொல்லவதை கேட்டுக்கொள்வதுதான் நியாயம் என்கிறாரகளா? தெரியவில்லை. சமரசம் பேசவரும் நாடுகள் மத்தியில் ஓன்றைப்பேசும் சிங்கள அரசு நடைமுறையில் அதற்க்கு மாறாகவே நடந்து கொள்ளும். உலக நாடுகளுக்கு தமிழர்களை நாங்கள் மிக சமமாகவே நடத்துகிறோம் என்று கூறிக்கொள்ளும் சிங்கள அரசு, தமிழ் போராளிகளால்தான் நாட்டில் அமைதியும் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது இதனால் அவர்களை ஓடுக்க உலக நாடுகளின் ஓத்துழைப்பு தேவை பிரச்சாரம் செய்து அவர்கள் உதவியைப் பெற்றது. வகுப்பில் இரு மாணவர்கள் சண்டைபோட்டு அடித்துக்கொண்டு கிடந்தால் வகுப்பில் நுழையும் ஆசிர்யர் இவர்கள்பிரச்சனையை கேட்டு ,யார் சொல்லவது சரி என்று மூன்றாவது நபரான ஏனைய மாணவர்களை கேட்ப்பார். உண்மை விளங்கும், அதற்கேற்ப நடவடிக்கை மேற்கொள்வார் அனால் இங்கே இருப்பதே இரு மாணவர்கள் மட்டும்தான் என்றால் அசிரியர் யாரிடம் தெளிவு படுத்திக்கொள்வார் சிரமம்தானே இதைப்போல் இங்கு சமாதானத்தீர்வு பேச வரும் நாடுகள் உண்மையை தெளிவாக உணரவேண்டும் தமிழ், சிங்களவர் இவ்விரு இன மக்களிடையேதான பிரச்சனை மூன்றாவது மொழி பேசும் மக்கள் அங்கு இல்லை.

ஆட்சி அதிகாரம் சிங்கள மொழி பேசும் சிங்களவர் கையில் அப்போது யார் பாதிக்கப்படுவார்க்கள் என்பது உள்ளங்கை நேல்லிக்கனி. மனித உரிமை, மனசாட்சி, மனிதாபிமானம், என்பதேல்லாம் உலக மக்களுக்கே பொதுவானது. இவையனைத்தும் மீறப்பட்டு தமிழ்மக்கள் படும் துயரம் உலகத்தின் கவனத்தை திருப்பவில்லை. காரணம் வலிமைப்பெற்ற பெரிய நாடான இந்தியா அயல் நாடாக அமைந்ததால், இவர்களைத்தாண்டி வேறு நாடுகள் தலையிட விரும்பவில்லை. இந்தியாவும் மறைந்த முன்னாள் பிரதமர் திரு, ராஜீவ் காந்தி படு கொலையில் தமிழ் போராளிகள் சம்பந்தபட்டார்கள் என்று காரணம் காட்டி, பயங்கரவாதிகள் ஓழிப்பு என்ற போர்வையில் சிங்கள அரசுக்கு நேசக்கரம் நீட்டினார்கள். மறைமுகமாய் தமிழ் போராளிகளை ஓழிப்பதற்க்கு எல்லா உதவிகளையும் இந்தியா வழங்கியது. இந்தியாவிலுள்ள தமிழ் நாட்டில் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து கிழர்ச்சி செய்தார்கள். அவர்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு பொறுப்பான பதிலோ பயனோ கிடைக்கவில்லை.

ஈழத்தமிழர் போராளகளின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

இரண்டாம் தர குடி மக்களாக வாழப்பிடிக்காத தமிழ் இளைஞர்கள் அநீதியை எதிர்த்து போராட துப்பாக்கி ஏந்தினார்கள் விடுதலை புலிகள் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதற்கு திரு. பிரபாகரன் என்ற இளைஞன் தலைமை பொருப்பேற்றார். அவர் நெஞ்சுரம் கொண்ட நிகரில்லா தலைவனாக விளங்கினார். இயக்கம் நல்ல தலமையின் கீழ் மேலும் மேலும் வளர்ச்சியடைந்து சிங்கள அரசின் இராணுவ பலத்துக்கு ஈடுகொடுத்து அவர்களை கதிகலங்க செய்த்து. தொடர்ந்த யுத்ததினால் மக்கள் பிழைப்பு கெட்டு வாழும் வழி தேடி உலகெங்கும் அங்காங்கே பல நாடுகளில் அகதியாய் புகலிடம் கொண்டு வாழ்ந்தார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் என்றாவது ஓரு நாள் விடுதலை புலிகள் இயக்கம் தங்கள் பூமியை மீட்டு சுதந்திர தாயகமாக மாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களுக்கு பண உதவிகள் செய்வதை கடமையாகவும் கட்டளையாகவும் செய்தார்கள். நாளடைவில் வடக்கு கிழக்கு பிரதேசங்களை தாங்களே ஆட்சி செய்யும் அளவுக்கு தன்னிறைவு கண்டார்கள். வான்படை, தரைப்படை, கடற்படை, என முப்படைகளையும் நிறுவி வெற்றி கொடி நாட்டினார்கள். போர் பல கட்டங்களாக நடந்தது. தமிழ் சமுதாயமே இவர்களின் வீரத்தையும் திறமையையும் பெருமித்ததுடன் கவனிக்க தொடங்கியது. இதற்கேல்லாம் தமிழ் மக்கள் கொடுத்த விலையோ அளப்பெரியது. எத்தனை ஆற்றல் கொண்ட இளைஞர்களின் உயிர்கள் பலியாயின. தந்தை, மகன் சகோதரன், மாமன் மச்சான், என்று எத்தனை உறவுகளை குடும்பங்கள் இழந்தன. குடும்பங்கள சிதறுண்டு அனுவித்த துயரங்கள் அளவில்லாதது, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களொ உடல் அங்கேயும் உயிர் ஈழமண்ணிலுமாய் நினைவுகளோடு வாழ்ந்தார்கள் இந்த காலக்கட்டங்களில் நடந்த சம்பவங்கள் நடவடிக்கைகள் போன்றவைகள் தமிழர் சரித்திரத்தில் பெரும் வரலாற்றுசுவடுகளாய் பதிவு பெறும். அவற்றையெல்லாம் தெளிவாக விளக்கி எழுதினால் அவை மகா பாரததிற்க்கு ஓப்பான கதைகளாய் நீளும். நியாமான உனர்வுகளால் உயிர் கொடுத்து உருவான இவ்வியக்கத்தை வெற்றி கொள்ள சிங்கள அரசு வெளிநாடுகளின் துனையை நாடியது. வெளிநாடுகளின் ஆயூதப்பலத்தால் முறையாக போர் செய்யாமல், இன்று உலகால் தடை செய்யப்பட்ட போர் நடவடிக்கைகள் மேற்கொண்டு தாக்கினார்கள். நச்சு வாயு கொண்ட குண்டுகளை விமானம் மூலம் தினமும் வீசினார்கள். போராளிகளோடு சேர்த்து மக்களையும் அழித்தார்கள். பாடசாலைகள், வைத்தியசாலைகள, ஆலயங்கள் என எல்லா இடங்களிலும் விதவிதமாய் ஸெல் அடித்தார்கள். இறுதியில் நிலப்பரப்பு முழுதும் சுடுகாடாக்கி விட்டு ஓய்தார்கள்.

இன்றைய ஈழத்து தமிழர் நிலை

போர் முடிந்ததும் எஞ்சி யுள்ள தமிழ் குடும்பங்களை முகாம் என்ற பெயரில் கைதியாய் வைத்திருக்கின்றார்கள். மக்களொ அதிர்ச்சியிலும் விரக்த்தியிலும் பேசுவதற்கே திராணியற்று கிடக்கிறார்கள். இவர்களைக்காட்டி சிங்கள அரசு வெளி நாடுகளில் அபிவிருத்தி என்ற பெயரில் பெரும் நிதியுதவிப்பெற்று தங்களுக்கு வேண்டிய இடங்களை அபிவிருத்தி செய்வார்கள். கண் துடைப்பாக அவ்வப்போது சில உதவிகளைச் தமிழ் மக்களுக்கு செய்வார்கள். அடுத்த நடவடிக்கையாக தமிழ் மக்களின் அடையாளங்களான ஆலயங்கள், கலாச்சார சின்னங்கள், விடுதலை புலிகளின் நினைவுத்தூண்கள், போன்றவற்றை அழித்து அங்கே தங்கள் சிங்கள மக்களின் அடையாளங்களை பதிக்க துவங்கிவிட்டார்கள். அங்குள்ள தமிழ் ஊர் பெயர்களை சிங்கள பெயர்களாக மாற்றுகின்றார்கள். இதையெல்லாம் எதிரப்பதற்கும் கேட்பதற்க்கும் நாதியில்லை இவர்களுக்காக நிதியுதவி செய்யும் நாடுகளும் அந்த உதவிகள் தமிழ் மக்களுக்கு போய் சேருகிறதா அறிந்து கொள்ள முயல்வதில்லை. சீனாவும் இந்தியாவும் இலங்கையில் தங்கள் வர்த்தக மையங்களை நீறுவுவதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். துவங்கிய நிலையில் பிரச்சனைகள் எப்படியிருந்தனவோ அவை அப்படியேயுள்ளது.

நாளைய தமிழர் நிலை

போர் குற்றம் செய்த இலங்கை அரசை தண்டிப்பதால் பிரச்சனைகள் தீர்ந்து விடாது. உலக சமுதாயம் முன்னெடுத்து இம் மக்ககளுக்கு ஓர் தீர்வை தேடித்தர வேண்டும் மறுபடீயும் போர் என்று ஓரு போதும் அனுமதிக்ககூடாது. சிறுபான்மையினமக்கள் தம் சொந்த மண்னிலேயே ஓடுக்கப்படுவதை ஓவ்வோரு நாடும் எதிர்க்கவேண்டும்.

-ஜோதிராணி குமாராசாமி

Advertisements
This entry was posted in ஈழத் தமிழர் நிலை நேற்று இன்று நாளை. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s