இலவச திட்டங்கள் ஏற்ப்படுத்தும் மாற்றங்கள். நன்மைகள் தீமைகள்

இலவச திட்டங்கள் ஏற்ப்படுத்தும் மாற்றங்கள். நன்மைகள் தீமைகள்

முன்னுரை:

இன்றைய நாகரிக உலகத்தில் “இலவசம்” என்ற சொல் எவ்வகையில் மனிதனை மாற்றியுள்ளது, இதனால் ஏற்படும் நன்மை தீமைகளை இக்கட்டுரையின் மூலம் காணலாம்.

பொருளுரை:

இலவசத்தின் வரலாறு:

இன்றைய நவநாகரிக உலகத்தில் வியாபார நோக்கத்திற்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த இலவசம். தரமற்ற பொருட்களை விற்கவும், சந்தையில் போட்டியை சமாளிக்கவும், இந்த இலவசம் பயன்பட்டன. வியாபார நோக்கத்திற்க்கு ஏற்பட்ட இந்த முயற்சி நல்ல வெற்றியை தந்தது. “தரம்” என்ற சொல்லால் மக்களை கவரலாம், என்ற எண்ணம் மாறி தற்போது இலவசம் என்ற சொல்லால் மக்களை கவர முடியும் என்று அனைவரும் நம்பினர்.

அரசியலில் இலவசம்:

முடியாட்சிக்குப் பின் தொடங்கப்பட்ட மக்களாட்சியில் மக்களை கவர இந்த “இலவசம்” நன்கு கை கொடுத்தது. ஒரு தரமான ஆட்சியின் மூலம் மக்களை தேர்தலில் சந்திக்க அஞ்சிய அரசியல்வாதிகள் எடுத்த “ஆயுதம்”தான் இந்த இலவசம். முதலில் ஒரு ஓட்டுக்கு பணம் என்ற அடிப்படையில் இலவசத்தை அரசியலுக்கு அறிமுகம் செய்தது அரசியல்வாதிகள். இதனால் பணபலம் அற்ற நல்ல நேர்மையான அரசியல் தலைவர்கள் தேர்தலை சந்திக்க அஞ்சினர். தேர்தலில் ஓட்டுக்கு பணம் என்று கூறிய அரசியல்வாதிகள் இதனை தனது “அரசியல் முதலீடு” என்று கருதினர். அந்த முதலீட்டில் அவர்கள் “ஊழல்” என்ற லாபத்தை அடைய பார்க்கின்றனர் என்று மக்கள் அறிந்து இலவசம் என்ற மகுடிக்கு ஆடும் பாம்பாக உள்ளனர்.

அரசியல்வாதிகள் ஆட்சியை தக்க வைக்க மட்டுமே இலவச திட்டங்களை ஏற்படுத்தினர். இதனால் சமுகத்தில் பலவித மாற்றங்களை ஏற்பட்டன. ஏழை, எளிய மக்கள் பயன் அடைய அரசு இத்தகைய திட்டங்களை வகுத்துள்ளது என அரசியல்வாதிகள் மேடை போட்டு சொல்கின்றனர். இதில் எத்தனை சதவீதம் உண்மை உள்ளது என மக்கள் நன்கு அறிவர். இலவச திட்டங்கள் மூலம் மக்கள் பயன் அடைந்தனர் எனபது கடலில் கரைந்த பெருங்காயம் போல் பயன் அடைந்தது சில பேர் மட்டுமே.

மக்களிடம் இலவசத்தின் பங்கு :-

பண்டைய தமிழகத்தின் பண்ட மாற்று முறை என்ற முறை இருந்தது. அதாவது ஒர் இடத்தில் விளையும் (அ) உற்பத்தி ஆகும். பொருட்களை கொடுத்து அதற்கு ஈடாக மற்றொரு பொருளை
வாங்குவது பின்பு இந்த முறை ஒழிந்து “பணம்” என்ற சொல் வந்தது. இதனால் அனைவரும் பலன் அடைந்தனர்.
வாழ்க்கை வாழ்வதற்கு தேவைப்பட்ட பொருட்கள் இப்பணத்தை கொண்டு வாங்கப்பட்டன. இத்தகைய பணம் மனிதனின் உழைப்பால் அவன் பெறும் முறையும் இருந்தது. உழைப்புக்கு ஏற்ற கூலி என்ற அடிப்படையில் அவன் தனது குடும்பம் மற்றும் உறவினர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி கொண்டான். ஆனால் இதற்கு அவன் உழைப்பு தேவைப்பட்டது.
உழைப்பால் வரும் பணத்தை விட சும்மா இருந்தால் கிடைக்கும் இலவசம் அவனை சோம்பேறி ஆக்கிவிட்ட து. ஒரு பழமொழி நம்மிடம் உண்டு, அதாவது நோகாமல் நோன்பு கும்மிடுவது என்பது இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. செக்கு மாடுகள் போல உழைத்து கிடைக்கும் செல்வத்தை விட இந்த இலவசம் மூலம் கிடைக்கும் சுகம் அவர்களுக்கு பிடித்து விட்டது. “நீர் இன்றி அமையாது உலகு” என்ற பழமொழி மாறி இப்போது ”இலவசம் இன்றி அமையாது மக்களின் வாழ்வு” என்ற புதுமொழி தோன்றியுள்ளது. வியபார நோக்கத்திற்கு எடுக்கப்பட்ட இந்த இலவசம் என்ற ஆயுதம் அரசியல்வாதியின் போர் தந்திரத்தில் முக்கிய இடம் பிடித்தது. இலவசத்தால் ஏற்ப்படும் நன்மை தீமைகளை மக்கள் அறிய முற்படும் போதும் அதனால் கிடைக்கும் இலாபம் அவர்கள் அதை அலசி ஆராயும் தன்மைக்கு முட்டுக்கட்டை போடுகிறது.

தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை கொளுத்துவோம் என்றான் பாரதி, அது இலவசத்தால் கிடைக்கக் கூடாது என்றும் அஞ்சி இருப்பான். “ஓடிவிளையாடு பாப்பா” என்று சொன்ன பாரதி “இலவசத்தை கண்டு ஓடி ஒளிந்து கொள் பாப்பா” என்றும் பாடி இருப்பார். கல்வி மனிதனை எல்லா வகையிலும் நல் வழிபடுத்துகிறதோ, அது போல் இலவசம் மனிதனை சோம்பேறி ஆக்கி விடுகிறது.

இலவச திட்டங்களின் வரலாறு:

அரசு மக்களை கவர இயற்றிய பல இலவச திட்டங்கள் அமைத்து முழுமையாக மக்களை சென்று அடைகிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி? அனைத்து தரப்பு மக்களும் வாழ்வில் முன்னேற நம் சட்டமேதை அம்பேத்கார் பல சட்ட திட்டங்களை வகுத்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் “தீண்டாமை” என்னும் இருளில் முழ்கி உள்ளதை கண்டு, அவர்கள் முன்னேற பல திட்டங்கள் அவரால் இயற்றப்பட்டன. ஆனால் அது தவறாக பயன்படுகிறது என்பது மக்களின் கருத்து. ஏழை எளிய மக்கள் தம் வாழ்வின் தரத்தை மேம்படுத்தி வாழ்வில் முன்னேற அரசு பல திட்டங்கள் வகுத்து செயல்படுத்தி வருகிறது. இதனாலும் அவர்களின் செல்வாக்கு மக்களிடம் பெருகவில்லை. எனவே அரசு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் திட்டம் என்று சொல்லி “இலவச திட்டங்களை” செயல்படுத்தி அவர்களின் செல்வாக்கை பெருக்கி கொண்டனர்.

தேர்தலில் மக்களை சந்திக்க அவர்களின் பிரச்சார பீரங்கியாக இந்த இலவச திட்டங்கள் பயன்படுத்தப்பட்டனர். இதனால் தேர்தலில் அவர்களின் ஓட்டு வங்கியை பெருக்கி கொண்டனர் என்பது நிஜம். தேர்தலில் முன்பு அக்கட்சியின் தலைவர் (அ) நிறுவனர் (அ) பொது செயலாளர் கதாநாயகன் அந்தஸ்தை பெற்று இருப்பார். ஆனால் இப்போது அக்கட்சியின் தேர்தல் அறிக்கை அதை பெற்று உள்ளது.

அத்தகைய அறிக்கை மக்களை மேம்படுத்தும் அறிக்கையாக இல்லை. அது அவர்களை சோம்பேறிகளாக்கும் அறிக்கையாக உள்ளது என்பது மறைந்துள்ள நிஜம் போட்டி போட்டு இலவச திட்டங்களை அறிக்கையாக வாயிலாக வழங்கும் அரசியல் கட்சிகள் இதனால் மக்களின் நலனில் கோட்டை விடுகின்றனர் என்பது உண்மை. இத்தகைய இலவசத்தால் மக்கள் அடையும் பயன் (அ) அவர்களின் மேம்பாடு போன்றவை கேள்விக்குறி ஆகின்றன.

அரசின் இலவச திட்டங்கள் சில. அதன் நன்மைகள், தீமைகள்:

இலவச மின்சாரம்

இன்று உலக மக்களின் பெரும் பிரச்சினை மின் தட்டுப்பாடு. இதன் உற்பத்திக்கு செலவிடப்படும் தொகை மிகவும் அதிகம், அணுப்பிளவு அனல் மின் நிலையம், காற்றாலை போன்ற தொழில் நுட்பத்தால் இம்மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தகைய விலை உயர்ந்த மின்சாரத்தை உணவு உற்பத்தியை பெருக்க அரசு இலவசமாக வழங்குகிறது. இத்தகைய மின்சாரத்தால் உணவு உற்பத்தி மேம்படும், உணவுப் பொருட்களின் உற்பத்தி செலவு குறையும் என்று அரசு நம்பியது. இதனால் விவசாயிகளின் நன்மைக்கு இலவச மின்சாரம் வழங்கியது. ஆனால் இன்று அம்மின்சாரம் விவசாயத்திற்கு மட்டுமின்றி பல செல்வந்தர்களின் ஆடம்பர வாழ்க்கைக்கும் பயன்படுத்தப்படுகிறது என்பது கொடுமை. மாநில வளர்ச்சிக்கு பெறப்படும் வரிப்பணம் இதனால் அழிக்கப்படுகிறது என்பது கொடுமை.

இலவச தொலைக்கட்சி :

தொலைக்காட்சி எனப்படும் இந்த மின்னணு சாதனம் தற்போது தொல்லைக்காட்சியாகிவிட்டது. உலகில் நடக்கும் பல அறிய தகவல்கள் அறிவு சார்ந்த நிகழ்சிகள் மக்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும் இதனால் அவர்களின் சிந்தனை மேம்படும் என்று அரசு இலவச தொலைக்காட்சி திட்டத்தை ஏற்படுத்தியதாக அரசு கூறுகிறது. ஆனால் மேற்சொன்ன எதுவும் நடைபெறவில்லை மாறாக மக்கள் தினம் தினம் தொடர்கதைகளை பார்த்து அதில் வரும் கதாபாத்திரமாக மாறி விட்டனர் என்பது நிதர்சன உண்மை.

இலவச கல்வி:

“கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சைபுகினும் கற்கை நன்றே”

என்று சொன்னார் வள்ளுவர். கல்லாமை என்னும் விலங்கு மக்களை கொல்ல வரும் முன் கல்வி என்னும் ஆயுதம் கொண்டு அதனை கொல்ல அரசு முடிவு செய்தது, அதனால் ஆரம்பிக்கப்பட்டது தான் இலவச கல்வித்திட்டம். அரசு நடத்தும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை, அரசு இந்த இலவச கல்வி திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் இதனை மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளவில்லை ஏனெனில் இதில் தரமான கல்வி தரப்படுவதில்லை என்பது மக்களின் கருத்து, இது 70% உண்மையும் கூட. அரசு இந்த இலவச கல்வித்திட்டத்திற்கு பல கோடிகள் செலவு செய்தும் இதற்கு 100% பலனளிக்கவில்லை என்பது வேதனையான செய்தியாகும்.

இலவச நிலம்:

ஆசியாவின் மிகப்பெரிய தீபகற்பம் நம் இந்தியா, பெரிய நிலப்பரப்பு கொண்ட இந்தியாவில் பல லட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளது, இதை நிலமற்ற ஏழை விவசாயிகள் பலன் பெற தொடங்கியது தான் இலவச நிலத்திட்டம். இத்திட்டத்தின் மூலம் ஏழை விவசாயிகள் தவிர அனைவரும் பயன் பெற்றனர், ஏனெனில் பண்ணை அதிபர்கள் பிடியில் உள்ள ஏழை விவசாயிகள் அவ்வாறு கிடைக்கப் பெற்ற நிலங்களை அவர்களிடம் விற்று விடுகின்றனர் இதற்கு காரணம் பருவ மழை கோளாறு, உரப் பொருட்களின் கடும் விலை ஏற்றம் போன்றவையாகும். எனவே இத்திட்டத்தால் எவ்வித பலனும் ஏற்படவில்லை.

இலவச உணவு:

கல்வியின் மூலம் மனிதன் உயர்ந்த நிலைமை அடைய முடியும் என்று உணர்ந்த சில அரசியல் மேன்மை பெற்றவர்களும் உண்டு, அதில் முக்கியமானவர் பெருந்தலைவர் காமராஜர் “பசி ” என்னும் அரக்கன் கல்வி என்னும் செல்வத்தை விழுங்கக் கூடாது என்று அஞ்சிய அவர் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் பசியை வெல்ல இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார், இதன் பிற்பாடே கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்து மக்களின் கல்வி தரம் உயர்ந்தது இத்தகைய மகத்தான மதிய உணவு திட்டம் இப்போது சத்துணவு திட்டம், முட்டையுடன் கூடிய சத்துணவு திட்டம் என்று பிற்பாடு வந்த தலைவர்கள் மூலம் மெருகேறியுள்ளது, இது இலவச உணவு திட்டத்தின் முன்னோடியாக உள்ளது.

ஏழை எளிய மக்கள் பயனடைய ஏற்படுத்தப்பட்ட இந்த இலவச உணவு திட்டத்தால் நன்மை எனினும் தீமைகளும் உண்டு. ஏனெனில் ஏழை எளிய மக்களின் குழந்தைகளின் அறிவுக்கண் திறக்க செயல்படுத்தப்பட்ட இத்திட்டம் அனைவருக்கும் செல்கிறது. இதற்கு அரசு பல மடங்கு செலவு செய்கிறது. இதனால் மக்களின் வரிப்பணம் இதற்கே அதிகம் செலவாகிறது அதிகப்படியான உணவு பொருட்கள் இத்திட்டதிற்கு கொள்முதல் செய்யப்படுவதால் சந்தையில் உணவு பொருட்களின் விலை அதிகமாக காரணமாகிறது, மேலும் அரசின் பெயரை சொல்லி விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி தரகர்களின் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர், இதனால் கள்ள சந்தை எனப்படும் (Black Market) வளர்கிறது.

பொருளாதாரத்தில் இலவசம்:

நாட்டில் ஆண்டுக்கு ஒரு முறை போடப்படும் வரவு செலவு அறிக்கையில் (பட்ஜெட்) ஒவ்வொரு ஆண்டும் வரவை விட செலவு அதிகமாக உள்ளது. இத்தகை செயலுக்கு காரணம் அரசின் இலவச திட்டங்கள் தான். இது போன்றவை நாட்டின் பொருளதாரத்தை கீழ் நோக்கி இழுத்து கொண்டு செல்கின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இது போன்ற பொருளாதார சீர்கேட்டால் இந்தியா வளர்ந்த நாடு என்னும் பெருமை அடைய வேண்டும் என்ற நமது எண்ணம் கானல் நீர் போன்று ஆகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது மக்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படையில் உலகின் தலைசிறந்த நாடுகளில் இந்தியா 88-ம் இடத்தில் உள்ளது என்று புள்ளி விவரம் கூறுகிறது இத்தகைய இலவச திட்டங்கள் மேலும் நாட்டை பின்நோக்கி இழுத்து சென்று விடும் என்பதே நமது அச்சம்.

முடிவுரை:

அரசு தமது செல்வாக்கை உயர்த்த ஏற்படுத்திய இத்தகைய இலவச திட்டங்களால் சிலர் மட்டுமே பயன் பெற்றனர் என்பது மறைக்க முடியாத உண்மை இத்தகைய இலவச திட்டத்தால் நாடு அழிவு பாதைக்கு செல்கிறது என மக்கள் உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை, அரசின் இலவச திட்டங்கள் மக்களிடம் ஏற்படுத்திய மாற்றங்கள் உ¡¢யவர்களுக்கு மட்டுமே சென்று சேர வேண்டும் என்பது நமது நியாயமான கூற்று.

நன்றி.

-G.நரசிம்மன்

Advertisements
This entry was posted in இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் - நன்மை தீமைகள். Bookmark the permalink.

One Response to இலவச திட்டங்கள் ஏற்ப்படுத்தும் மாற்றங்கள். நன்மைகள் தீமைகள்

  1. chandrasekhar R சொல்கிறார்:

    கடைத் தேங்காயை திருடி வழிப் பிள்ளையாருக்கு உடைத்து புண்ணியம் தேடிக் கொண்ட கதைதான். இலவச டிவி கொடுத்து தன்னுடைய டிவி சேனலின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தி தனது வாரிசுகளுக்கு வருமானத்தை நிலை நிறுத்திக் கொண்டதுதான் மிக்ப் பெரிய பலன்.

    நல்ல பதிவு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s