இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் நன்மைகள் – தீமைகள்

இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள்
நன்மைகள் – தீமைகள்

நன்மைகள்:

வறுமையில் உள்ள ஏழைகளின் வாழ்வு மலர அரசு பல திட்டங்களை வகுத்துள்ளது. உண்மையிலேயே வறுமையில் வாடும் ஏழைகள், இலவச கேஸ் அடுப்பு (1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, இலவச கலர் டிவி பெற்று ஓரளவிற்கு திருப்திபட்டுக் கொள்கின்றனர். அவ்வளவுதான் வசதி படைத்தவர்களும் இத்திட்டத்தை பயன்படுத்துவதுதான் வேதனையான விஷயம்.

பொங்கல் தினத்தன்று இலவச வேஷ்டி சேலை தருகின்றனர். பொங்கல் வைக்கத் தேவையான பொருட்கள் தருகின்றனர். அன்றாடம் கூலி வேலை பார்ப்போர் கட்டிடத் தொழிலாளர்கள், விவசாயக் கூலிகள், டிரை-சைக்கிள், ரிக்ஷா ஓட்டுவோர், தெருவோரம் பிளாட்பாரத்தில் குடியிருப்போர் போன்ற ஏழைகள் இத்திட்டத்தில் பயன்பெறுகிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.

உண்மையிலேயே வறுமையில் வாடுபவர்களுக்கு இருப்பிடம் சென்று இந்த இலவச திட்ட பொருட்களை அவர்களிடம் நேரடியாக ஒப்படைத்தால் ஏழைகள் உண்மையில் சந்தோஷப்படுவர். அதற்கு அரசு முயற்சி எடுக்கவேண்டும்.

தீமைகள்:
கூலி வேலைக்கு போகாமல் உடம்மை வளைக்காமல் (உழைக்காமல்) வீட்டில் சொகுசாக படுத்துக்கொண்டு டிவி பார்த்து வீணாக பொழுதைக் கழிப்போர் எண்ணிக்கை அதிகமாகி விட்டதால் கிராமப்புரத்தில் விவசாயக் கூலிகள் கிடைப்பதில்லை. இதனால் எனது 7 ஏக்கர் விவசாய நிலம் தரிசாக (வீணாக) உள்ளது என்பதை வருத்தத்தோடு தெரிவிக்கிறேன். என்னைப் போல பல விவசாயிகள் உள்ளனர். அரசின் இலவசத் திட்டத்தால் உழைப்பாளிகள் சோம்பேறியாக மாறிவிட்டார்கள். இருபது கிலோ அரிசி வாங்கினால்
15 தினத்திற்கு போதும் என நினைக்கிறார்கள். இலவசம் கொடுப்பதற்கு பதிலாக வீட்டிற்கு ஒருவருக்கு வேலை கொடுத்தால் வீடும் நாடும் முன்னேறும்.

மத்திய அரசின் 100 நாட்கள் வேலை திட்டமும் போலியானது. உழைப்பது போல நடிப்பதற்கு ரூ.100 க்கு பதிலாக (ரூ.80) கொடுக்கிறார்கள். எனது தோட்டத்திற்கு அருகே உள்ள சிற்றோடையை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. ஆனால், யாரும் பணி செய்வதில்லை. தென்னந்தோப்பில் படுத்து நன்றாக உறங்கிவிட்டு (காலை 10 வரை 3 மணி வரை) 5 மணி நேரம் கழித்து பணம் பெற்றுக்கொண்டு வீடு திரும்புகிறார்கள்.

அரசுப்பணம் (மக்களின் வரிப்பணம்) இப்படி வீணாகிறதே என வேதனை படத்தான் முடிந்தது. உண்மையிலேயே சிற்றோடையை வெட்டி அகலப்படுத்தி, ஆழப்படுத்தி அதுபோல கண்மாய்களையும் ஆழப்படுத்தியிருந்தால் தற்போது பெய்த புயல் மழைநீர் தேங்கியிருக்கும். நீர்மட்டம் உயர்ந்திருக்கும்
2 வருடத்திற்கு மழை பொய்த்து போனால் கூட தாக்கு பிடிக்கலாம்.

போலித்தனமான சுயநலம் உள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள் இவர்களால் அரசு பணத்தை முறையாக செலவு செய்யப்பட்டவில்லை. கட்சிகள் ஓட்டுக்காக இலவசங்களை அள்ளி வீசுகின்றனர். இப்படியே
போனால் நாட்டில் உணவு உற்பத்தி குறைந்து அயல்நாடுகளிடம் கையேந்தும் நிலை உருவாகிவிடும். இதை பொது மக்கள்தான் சிந்திக்க வேண்டும். அரசியல்வாதிகள் பொதுநல தொலைநோக்கோடு பார்ப்பது காமராஜ் காலத்தோடு முடிந்துவிட்டது.

– திரு. மா.ஜெயக்கொடி

Advertisements
This entry was posted in இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் - நன்மை தீமைகள். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s