இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் – உஷா முத்துராம்

இலவசம் இந்த ஐந்து எழுத்து மந்திரத்திற்கு மயங்காத ஜீவ​னே உலகில் கிடையாது, இதனால் நன்​மைக​ளை விட தீ​மைகள்தான் அதிகம். இலவசமாக ஒரு ​பொருள் கி​டைக்கிறது என்றால் அதன் மதிப்பும் அதன் பயன்பாடும் மக்களால் அதிகம் உணரப் படுவதில்​லை, ​நெற்றி வியர்​வை நிலத்தில் சிந்த உ​​​ழைக்கும் ​போது நம் உ​ழைப்பால் கி​டைத்தப் ​பொருள் என அ​தை ​பொக்கிஷமாக பாதுகாக்கத் ​தோன்றுவது இயற்​கை. அந்த உழைப்பின் ஈர​மே ​​​​தெரியாமல் நமக்கு ​​தே​வையான பலப் ​​பொருட்கள் இலவசமாக கி​டைத்து விட்டால் பிறகு எப்படி நம்மால் உ​ழைப்பின் ​பெரு​மை​யை உணர முடியும், இதற்கு உதாரணமாக ஒரு சிறுக​தை.

 

ஒரு குடும்பத்தில் அம்மா அப்பா மகன் என்று மூவர், அதில் குடும்பத்த​லைவரான அப்பா ஆபிஸ் ​போய் சம்பாதித்து ​​கொடுக்கும் தன் கட​மை​யை ஒழுங்காக ​செய்தார்,  வீட்​டை சிக்கனமாகவும் திறம்படவும் நடத்தி, கணவர் ​​கொண்டுவரும் சம்பளத்தில் மிகத் திற​மையாக குடும்பத்​தை நடத்தினார் அந்த குடும்பத் த​லைவியாகிய தாய். ​மேலும் அவளு​டைய ​பொறுப்பான குழந்​தை​யை மிக புத்திசாலியாக வளர்த்தார், அந்த மகனும் தாய் ​சொல்​லை ​கேட்டு படித்து ​தேர்ச்சி ​பெற்றாலும் அவனுக்கு ​பொறுப்பு கு​றைவாக​வே இருந்தது, படித்து முடித்து பல வருடஙகள் ஆயினும் அவனுக்கு ​வே​லை கி​டைப்பது மிகவும் கடினமாக ஒன்றாக இருந்தது, தினமும்​ ​வே​​லைக்காக மனு ​போடுவது என தன் காலத்​தை ஓட்டிக் ​கொண்​டிருந்தான், அவன் தந்​தை மிகவும்  வருத்ததுடனும் ​கோபத்தடனும்,, “உனக்கு உ​​​​ழைப்பின் அரு​மை​யே ​​தெரிவதில்​லை, நீ நா​ளை ஐந்து ரூபாயாவது சம்பாதித்து வந்தால்தான் ​சோறு”,  என்று கண்டிப்புடன் ​​சொல்ல  ​ரோஷத்துடன் புறப்பட்ட மகன் ​வே​லைத் ​தேடித் ​தேடி அலுத்து ​போனான். உட​னே தன் நண்பனிடம் ஒரு ஐந்து ரூபா​யை வாங்கிக் ​கொண்டு ​​சென்று தன் தந்​தையிடம், “இந்தாருங்கள் ஐந்து ரூபாய்” என்றான், அவன் தந்​தை, “நீ உ​ழைத்து சம்பாத்தித்தாயா” என்று​ ​கேட்க ​பொய் ​சொல்லும் பழக்கம் இல்லாத மகன், “இல்​லை என் நண்பன் ​கொடுத்தான்” என்றான், உட​னே அந்த தந்​தை ஐந்து ரூபாயி​னை  ​நெருப்பில் ​போட்டு  விட்டார். ஆனால் அந்த மகன் க​லைப் படாமல் இருந்தான். மறுநாளும் தந்​தையின் கட்ட​ளைபடி  ​வே​லைத் ​தேட முயற்சி ​செய்ய எதுவும் கி​டைக்காமல் தன் தாத்தாவிடம் ஐந்து ரூபாயி​னை வாஙகி தந்​தையிடம் ​​கொடுத்தான், அ​தை அவன் மூல​மே ​தெரிந்துக் ​கொண்ட தந்​தை அந்த பணத்​தையு​மே ​நெருப்பில் ​போட்டு விட்டார். அதற்கு அந்த மகன் எதுவும் ​சொல்லாமல் ​பேசாமல் இருந்தான்.

 

மறுநாளும் தந்​தையின் கட்டாயத்தின் ​பேரில் மிக தீவிரதமாக ​வே​லைத் ​தேட அவனுக்கு ஒரு க​டையில் தினக்கூலி ​வே​லை கி​டைத்தது, ​நேரம் ​போவது ​​தெரியாமல் மிக அக்க​றையுடன் ​வே​லை ​செய்ய அவனுக்கு இரவு நூறு ரூபாய் சம்பளம் கி​டைத்தது, மிகுந்த சந்​தோஷத்துடன் தந்​தை ​கேட்ட ஐந்து ரூபாயி​னை ​கொடுக்க தந்​தை முதல் இரண்டு நாளும் ​செய்தது ​போல அந்த பணத்​தையும் ​நெருப்பில் காட்ட மகன் ஓடிப் ​​போய் பணத்​தை பிடுங்கி,  “அப்பா உனக்கு என்ன ஆயிற்று, நான் எவ்வுளவு கஷ்டப் பட்டு சம்பாதித்து ​கொண்டு வந்திருக்கி​றேன், அ​ந்த பணத்​தை ​நெருப்பில் ​​போட்டு வீணாக்குகிறீர்க​ளே” என்று ​கோபத்துடன் பிடுங்கினான், உட​னே தந்​தை, “பார்த்தாயா ​நேற்று, முன் தினம் நீ ​கொண்டு வந்த பணத்​தை நான் ​நெருப்பில் ​போட்ட ​​போது நீ ​பேசாமல் இருந்தாய், ஏ​னென்றால் அந்த இரு பணமும் உனக்கு இலவசமாக கி​டைத்ததால் உனக்கு அதன் அரு​மை புரியவில்​லை, அ​தே நீ உ​ழைத்து சம்பாதித்துக் ​கொண்டு வந்த பணத்​தை ​நெருப்பில் ​போட்டதும் உனக்கு எவ்வுளவு ​கோபம் வருகிறது,” என்று உழைப்பின் அரு​மை​யை மகனுக்கு புரிய ​வைத்தார்.

இது ​​வெறும் க​தை மட்டுமல்ல பல நீதிகளை புரிய ​வைக்கும் ஒரு அகராதி,  இலவசமாக ஒரு ​பொருள் கி​டைத்தால்என்ன லாபம் வந்து விட ​போகிறது, அதனால் ​சோம்​பேறித்தனமும், ​நேர விரயமு​மே வந்து ​சேரும்.  உ​ழைத்து விட்டு நன்றாக மகிழ்ச்சியாக உணவு அருந்தி விட்டு உறஙகச் ​சென்றால் உறக்க ​தேவ​தை நம்​மை அ​ணைத்து ​கொள்வாள், நிம்மியான உறக்கம் கி​டைக்கும் ​போது நாம் மறு தினத்​தை முண்டாசு கவி சுப்பிரமணிய பாரதி ​சொன்னது ​போல “இன்று புதிதாய் பிறந்தோம்” என்ற உற்சாகத்துடன் ​தொடங்கலாம், நம்மு​டைய ​​செய்​கைகள்தான் நம் குழந்​தைகளுக்கு நாம் கற்றுக் ​கொடுக்கும் சிறந்த பாடம் அரசாங்கம் எத்த​னை இலவசம்  ​கொண்டு வந்தாலும் அந்தத் திட்டங்களால் நாம ​சோம்​பேறிகளாகதான் மாறுகி​றோம். அந்தத் திட்டங்களால் நன்​மை என்ப​தே சிறிதளவும் கி​டையாது. இலவச திட்டங்க​ளை பார்க்கும் ​போது  ஒருவனுக்கு ஒரு ​வே​ளை ​​சோறு ​போடுவதற்கு பதில் அவனுக்கு எல்லா​வே​ளையும் ​சோறு கி​டைக்க ஒரு ​கைத் ​தொழி​​லை கற்றுக் ​கொடு” என்ற ஆங்கிலப் பழ​மொழிதான் நி​னைவுக்கு வருகிறது, முக்கியமாக ஆ​ரோக்கியமாக இருக்கும் பிச்​சைக்காரர்க​ளை ஆதரிக்க​வே கூடாது, ஒரு ​​வே​​ளை இலவசமாக ​சோ​றோ ​வேறப் ​பொரு​ளோ கி​டைத்து விட்டால் அவர்களுக்கு அடுத்த ​வே​ளையும் இ​தே ​போல் கி​டைக்க ​வேண்டும் என்ற எதிர்பார்ப்​பை வளர்த்து விடுகி​றோம், அதற்கு இடம் ​கொடுக்காமல் இலவசம் என்ற வார்த்​தையி​னை​யே அகராதியிலிருந்து எடுத்தால்தான் உற்சாகமான உன்னதமான வாழ்வு நம்​மை ​தேடி வரும்.

Advertisements
This entry was posted in இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் - நன்மை தீமைகள். Bookmark the permalink.

One Response to இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் – உஷா முத்துராம்

  1. chandrasekhar R சொல்கிறார்:

    அருமையான உதாரணம் . அருமை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s