இந்தியக் கூட்டமைப்பில் தமிழர் நிலை-இரா. வேணுகோபாலகிருஷ்ணன்

இந்தியக் கூட்டமைப்பில் தமிழர் நிலை

ஆங்கிலேயர் ஆட்சி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சிறுகச்சிறுக ஒன்று சேர்த்துப் பெரும் நிலப்பரப்பை ஒருங்கே ஆண்டதால் இந்தியா என்னும் பல நாடுகளின் கூட்டமைப்பு உண்டாயிற்று. பாகிஸ்தானுக்கு ஒரு ஜின்னா இருந்ததைப் போலத் தமிழ்நாட்டிற்கென ஒரு தலைவர் இல்லாது போனதால் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற பின்னர் தமிழ்நாடும் இந்தியக் கூட்டமைப்பில் இடம்பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.ஆனால் இந்தியக் கூட்டமைப்பில் இடம் பெற்றதால் தமிழரோ, தமிழ்நாடோ, தமிழ் மொழியோ நல்ல நிலைக்கு வர முடிந்ததா என்றால் அதற்கான விடை இல்லை என்பதாகவே உள்ளது.

இந்தியக் கூட்டமைப்பில் தமிழர் வடவர்க்கு இணையான நிலையில் நடத்தப் படுவதில்லை. அடிமைப்பட்டே கிடக்கிறார்கள். கேவலமான, இழிவான, இரங்கத்தக்க நிலையில்தான் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை ஒருசில சான்றுகள் வாயிலாக இங்கே அறியலாம்.

1. எல்லைகளை இழந்ததால் நேர்ந்த அவலங்கள்.

மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாட்டில் காங்கிரசுக் கட்சியின் ஆட்சி நடைபெற்றது. அன்றைக்கு ஆட்சியில் இருந்தவர்கள் தேசியம் என்னும் கபட, ஏமாற்று, சூழ்ச்சி, பித்தலாட்டத்தைப் பற்றி அறியாத அறிவிலிகளாகவும், நமது மண்ணை அடுத்தவன் கைப்பற்றிக் கொண்டு செல்கிறானே, இதைத் தடுக்க வேண்டுமே என்ற சொரணையற்றவர்களாகவும் இருந்தார்கள். இதனால் கன்னடர்களிடம் குடகு, பெங்களூர், கொள்ளேகாலம், கோலார் முதலிய பகுதிகளையும், தெலுங்கர்களிடம் திருப்பதி, சித்தூர், நெல்லூர் முதலிய பகுதிகளையும் மலையாளிகளிடம் வேலந்தாவளம், கொழிஞ்சாம்பாறை, அட்டப்பாடி, தேவிகுளம், பீர்மேடு, சிறுவாணி உள்ளிட்ட பல பகுதிகளையும் இழந்தோம். பெரியவர் சிலம்புச்செல்வர் ம.பொ. சிவஞானம் ஐயா அவர்களது போராட்டத்தால் திருத்தணியை மட்டும் மீட்க முடிந்தது.இந்த நில இழப்புக்களால் தமிழ்நாட்டிற்குச் சொந்தமான ஆறுகளை அயலவரிடம் இழந்து தமிழர்கள் தண்ணீருக்காகக் கையேந்த வேண்டியுள்ளது. காவிரியில் கன்னடர்கள் அணைகட்டித் தண்ணீரைத் தடுக்கிறார்கள். பாலாற்றில் தெலுங்கர்கள் 30 கல் தொலைவுக்குள் 32 தடுப்பணைகளைக் கட்டித் தண்ணீரைத் தடுக்கிறார்கள். பெரியாறு தமிழ்நாட்டின் எல்லையில் தோன்றினாலும் மலையாளத்தான் உரிமை கொண்டாடித் தடுக்கிறான். தமிழ்நாட்டுக்குச் சொந்தமான 20 ஆறுகள் எல்லை இழப்பினால் மலையாளிகளிடம் போய் விட்டதாக ஒரு புள்ளி விவரம் கூறப்படுகிறது.

அடுத்து அயலவர்கள் கைக்கொண்ட பகுதிகளில் வாழும் தமிழ்மக்கள் தங்கள் தாய்மொழியையோ, தாய்மொழியில் கல்வியையோ கற்றுக் கொள்ள இயலாமல் அயலவர் மொழியையும், அயலவர் மொழியில் கல்வியையும் கற்க நேர்ந்துள்ளது. இதனாலேயே அவர்கள் தமிழ்நாட்டோடு இணைய விரும்புகிறார்கள். ஆனால் இந்தியக் கூட்டமைப்பு அதற்கு இடம் கொடுப்பதில்லை. அண்மையில் தனித் தெலுங்கானா மாநிலப் போராட்டத்தின் போது ஆந்திராவிற்குள் அகப்பட்டுவிட்ட 148 ஊர்களைச் சேர்ந்த தமிழர்கள் தெலுங்கானா பிரிக்கப்படும்போது தங்கள் பகுதிகள் தமிழ்நாட்டோடு இணைக்கப்பட வேண்டுமென்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.தமிழர்களின் வட எல்லையாகவும்,தமிழர்களால் அமைக்கப்பட்டதுமான திருப்பதித் திருக்கோவில் உலகிலேயே அதிக அளவு சொத்துக்களும், வருமானமும் கொண்ட கோவில். இதன் சொத்து மதிப்பு உரூபாய் 40 ஆயிரம் கோடிக்கும் மிகுதி. இது இன்று தெலுங்கர்களின் கையில்.

2. தன் இன அழிவைத் தடுக்க இயலா நிலை.

இந்தியக் கூட்டமைப்பில் தமிழர்கள் அடிமைப்பட்டுக் கிடப்பதால் தன் இனத்தானுக்கு ஏற்படும் அழிவைத் தடுக்க இயலாத கையாலாகாத கையறு நிலையில் இருக்கிறார்கள். இன்று உலகமே கண்டித்த ஈழப் படுகொலையைத் தடுக்கத் தமிழரால் இயலவில்லை. அது மட்டுமல்ல, எந்த இந்தியக் கூட்டமைப்பில் தமிழன் அங்கம் வகிக்கிறானோ, அந்த இந்திய அரசே ஈழத் தமிழர்களை அழித்தொழிக்க சிங்கள அரசுக்கு உதவியிருக்கிறது.அதே போலத் தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது, சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப் படுகிறார்கள். சுண்டைக்காய் சிங்கள நாட்டை, வல்லரசு இந்தியா இது தொடர்பாக ஏனென்று கேட்பதில்லை. அதேவேளை, எல்லை தாண்டிவரும் சிங்கள மீனவர்களை இந்தியக் காவல்படை சுட்டுக் கொல்வதில்லை. பாதுகாப்பாகச் சிங்கள அரசிடம் ஒப்படைக்கிறது. எவ்வளவு கேவலமான நிலையில் தமிழன் இருக்கிறான் என்பதை இங்கு யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை.

இதைவிடக் கொடுமை, கர்நாடக மாநிலத்தில் அகப்பட்டுக் கொண்ட தமிழர்கள் அவ்வப்போது கன்னடர்களால் தாக்கப்படுகிறார்கள், கொல்லப் படுகிறார்கள். அவர்களது சொத்துக்கள் கொள்ளையடிக்கப் படுகின்றன. கர்நாடக முதல்வராக பங்காரப்பா இருந்தபோது, தமிழர்கள் மிகக் கொடூரமாக அடித்து விரட்டப் பட்டு அவர்கள் அகதிகளாகத் தமிழ்நாட்டிற்கு வந்தார்கள். வல்லரசு இந்தியக் கூட்டமைப்பில் தமிழர்கள் இடம் பெற்றதற்குக் கிடைத்த பரிசு இது. இதே போல மும்பையிலும் அவ்வப்போது தமிழர்கள் தாக்கப் படுகிறார்கள்.

3. அந்நிய மொழிகள் திணிப்பால் தமிழர்கள் தங்கள் அடையாளத்தை இழப்பது.

உலகிலேயே செம்மொழிக்கான தகுதிகள் அனைத்தும் கொண்ட ஒரே மொழி என மொழியியலாரால் போற்றப்படுவது தமிழ் மொழி. ஆனால், ஆங்கிலேய ஆட்சிக்குப் பின்னர்தான் தன்னிடம் இல்லாத பல சொற்களைப் பல மொழிகளிலிருந்து எடுத்துச் சேர்த்துச் செப்பம் செய்யப்பட்டது இந்தி என்னும் கீழ்த்தரமான மொழி. இந்த ஈன மொழியைப் பேசுவோர் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இருப்பதால் இதுவே இந்த நாட்டின் ஆட்சி மொழி என்றும், இதனை நாடு முழுவதுமுள்ள அனைவரும் கட்டாயமாகக் கற்க வேண்டும் என்றும் வலிந்து திணிக்கப்படுகிறது. தமிழக அரசுப் பள்ளிகளில் மட்டுமே இந்தி இல்லையே தவிர, பெருகி வரும் தனியார் பள்ளிகளில் எல்லாம் இந்தி மொழி கட்டாயப் பாடமாக உள்ளது. ஆனால் இந்தி பேசும் மாநிலங்களில் தமிழோ, பிற தென்னக மொழிகளோ கட்டாயப் பாடமாக்கப் படவில்லை. தமிழ் நாட்டிற்குப் பிழைக்க வரும் வடநாட்டான் அவனது இந்தி மொழியை இங்கே உள்ளவர்கள் படித்து அதில் அவனோடு தமிழன் உரையாட வேண்டுமென்றுதான் எதிர்பார்க்கிறான். இது ஒருபுறமிருக்க, சமயத் துறையில் இந்தி மொழிக்கு முந்தைய இழி மொழியான வடமொழியின் திணிப்பு தமிழைப் புறந்தள்ளுகிறது. அது கடவுளின் மொழியாம் (தேவபாஷை). தமிழ் நீச மொழியாம். இப்படி ஆரியக் கூட்டம் தமிழை அழிக்க வரிந்து கட்டிக்கொண்டு செயல்படுகிறது. இதற்குத் தமிழ்நாட்டிலேயே சில திருமடங்கள் துணைபோவதுதான் பெரும் கொடுமை.ஏற்கனவே சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் சேர நாட்டில் பிழைக்க வந்த நம்பூதிரிக் கூட்டம் தமிழோடு வலிந்து வடமொழியைக் கலந்துதான் மலையாளம் என்ற ஒரு மொழி தோன்றி, சேர நாட்டுத் தமிழர்கள் கேரள நாட்டு மலையாளிகளாக மாறி, தமிழனுக்குத் தமிழனே எதிரியானான்.இன்னும் எஞ்சியுள்ள தமிழகத்திலும் இந்த முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது எது தமிழ், எது வடமொழி எனத் தெரியாத அளவுக்கு வட மொழிச் சொற்கள் தமிழோடு கலந்து விடப்பட்டுள்ளன.இந்தச் சூழ்ச்சியை அறியாமலும், அறிந்தாலும் இதனையே உயர்வாகக் கருதுவதாலும் தமிழ்ப் பெருங்குடி மக்களே வடமொழிக்கு வால் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். தன் மொழியின் பெருமையை அயல்நாட்டான் அறிந்த அளவுக்குக் கூடத் தாம் அறியாதவனாகத் தமிழன் இருக்கும்போது உலகத் தமிழ் மாநாடுகளால் பயன் எதுவும் இல்லை. இம்மாநாடுகள் அரசியலுக்காகவே நடத்தப் படுகின்றன.

இவற்றிற்கு அடுத்தது ஆங்கில வழிக் கல்வி. ஆங்கில வழிக் கல்வியைத் தரும் பள்ளிகள்தான் இன்று தமிழ்நாட்டில் பெருகி வருகின்றன. அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி வந்து விட்டது. இந்தியக் கூட்டமைப்பில் இடம் பெற்ற தமிழக அரசால் தமிழ்வழிக் கல்வியைக் கட்டாயமாக்க முடியவில்லை.தமிழ் வழிக் கல்வியைக் கட்டாயமாக்கினால் எதிர்த்து வழக்குத் தொடுக்கிறார்கள். அதுவும் இங்கு குடியேறிய தமிழரல்லாதோர். ஆங்கில வழிக் கல்வியையே பெருமையானதாகவும், மேன்மையானதாகவும் தங்கள் குழந்தைகளுக்கு வடமொழியில் பெயர் வைப்பதை மிக மேம்பட்டதாகவும் கருதும் நிலைக்குத் தமிழர்களே வந்து விட்ட நிலையை இந்தியக் கூட்டமைப்பு ஏற்படுத்தி விட்டது. அது மட்டுமல்ல, தமிழ்ப்பற்று என்பது தமிழர்களாலேயே எள்ளி நகையாடப்படும் நிலையும் ஏற்பட்டு விட்டது.

4. இட ஒதுக்கீட்டில் அந்நியருக்குச் சலுகை

தமிழ்நாட்டில் அயலவர் குடியேற்றங்கள் மிகுதி. இவர்கள் அரசுத்துறை வேலைவாய்ப்புகளையும், கல்வி வாய்ப்புகளையும் தாழ்த்தப் பட்டோர் இட ஒதுக்கீடு என்னும் சலுகையால் பெற்றுத் தமிழர்களுக்கு இடமில்லாமல் செய்கிறார்கள்.இதில் அண்மையில் தமிழ்நாடு அரசு தாழ்த்தப்பட்ட பிரிவினரில் கர்நாடக, ஆந்திர மாநிலங்களிலிருந்து வந்து குடியேறிய கன்னடர்கள், தெலுங்கர்களாகிய அருந்ததியருக்குத் தாழ்த்தப் பட்டோர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்து தமிழகத்துத் தாழ்த்தப் பட்டோரின் வாய்ப்புகளைக் கெடுத்துள்ளது.

5. தமிழ்நாட்டில் அயலவர்களின் ஆதிக்கம்

தமிழ்நாட்டில் வந்து குடியேறிய தமிழரல்லாதோர் தமிழ்நாட்டு அரசியலில் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் மட்டுமின்றி அமைச்சர்களாகவும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார்கள். ஆனால் தமிழருக்கு இந்நிலை பிற மாநிலங்களில் இல்லை.தமிழ்நாட்டில் தெலுங்கர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் தொடங்கி நடத்துகிறார்கள். தமிழகத்தை ஆட்சி செய்யத் துடிக்கிறார்கள். மேலும் தமிழரல்லாதோர் தமிழகத்தில் பெரும் தொழிலதிபர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தமிழர்களிடம் செல்வம் சுரண்டிக் கொள்ளையடித்து வரும் முறை சிறிதும் அறவழியின்பாற் பட்டதாக இல்லை.மலையாளிகள் தங்கள் மாநிலத்தைக் கடவுளின் சொந்த நிலம் என்று பெருமை பேசுவார்கள். ஆனால் அந்தக் கடவுளின் மண்ணில் பிழைக்க வழியில்லை. அது வாழத் தகுதியற்றதென்று அவர்கள் தமிழ்நாட்டிலும், பிற மாநிலங்களனைத்திலும் குடியேறி வாழ்கின்றனர்.

மலையாளிகள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கித் தமிழனைச் சுரண்டி வாழ்ந்தாலும், தங்கள் தொழில் நிறுவனங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் மலையாளிகளை மட்டுமே பணியில் அமர்த்திக் கொள்கின்றனர். தமிழர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளைத் தருவதில்லை. ஏதோ கடைநிலை ஊழியர் வேலைகளைத்தான் தருவார்கள்.உணவு, உடை, பிற அடிப்படைத் தேவைப் பொருள்களெல்லாம் தமிழ்நாட்டிலிருந்துதான் கேரளத்திற்குச் செல்கின்றன. ஆனால், அங்குள்ள நன்றி கெட்ட மலையாளிகள் ஆறுகளிலுள்ள நீரெல்லாம் வீணே கடலில் கலந்தாலும் அவற்றைத் தமிழ்நாட்டிற்குத் தருவதற்கு விரும்புவதில்லை.காஷ்மீர் மாநிலத்தில் காஷ்மீரிகளைத் தவிர வேறு யாரும் ஓர் அங்குல இடம்கூட வாங்க முடியாது. அந்த அளவுக்குச் சிறப்புரிமை அந்த மாநிலத்திற்கு மட்டும் வழங்கப் பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு புறம்போக்கு நிலமாகிவிட்டது. எவர் வேண்டுமானாலும் வந்து தமிழர்களைச் சுரண்டுகின்றனர். ஆனால் இவற்றைப் பற்றித் தமிழ்நாட்டை ஆண்ட, ஆள்கிற எந்தக் கட்சியும் அக்கறை கொள்வதில்லை. இந்தியக் கூட்டமைப்பின் மைய அரசு எப்போதும் தமிழருக்கு எதிரான செயல்பாடுகளையே நடைமுறைப் படுத்தி வருகிறது. தமிழக மக்களுக்கே இவை பற்றிய விழிப்புணர்வு இல்லை.

6. தமிழர் தலைமை அமைச்சராக வழியில்லை.

இந்தியக் கூட்டமைப்பு நாடு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்று 60 ஆண்டுகளைக் கடந்தும் கூட இன்னும் ஒருமுறை கூடத் தமிழன் தலைமை அமைச்சராகவில்லை. குஜராத்தியர், கன்னடர், தெலுங்கர், பஞ்சாபியருக்கெல்லாம் அந்த வாய்ப்புக்கிடைத்து விட்டது. இந்திக்காரர்களே பெரும்பான்மைக் காலம் தலைமை அமைச்சராகப் பதவியிலிருந்துள்ளனர். தமிழரில் இதற்குத் தகுதியுள்ளவர் இல்லாது போய் விடவில்லை. தமிழனை வர விடக் கூடாது என்பது வட நாட்டாரின் எண்ணம்.

நிறைவுறை.

தமிழன் தனது மொழியின் மீது, மண்ணின் மீது, இனத்தின் மீது பற்றுதல் கொண்டால் அது குறுகிய உளப்பாங்கு, சட்டத்திற்கு எதிரான செயல். ஆனால் ஈனமொழி இந்திக்கு வால் பிடித்தால், வடநாட்டானுக்கு அடிவருடியாக இருந்தால் அது நாட்டுப் பற்று என்ற வகையில் தமிழர் நிலை இந்தியக் கூட்டமைப்பில் உள்ளது.பிற எந்த மாநிலத்தவனையும் விட மேம்பட்ட அறிவினனாகத் தமிழன் இருந்தாலும் அவன் மதிக்கப்படுவதில்லை. இதற்கு, தமிழினத்திலேயே பிறந்து விட்ட சில தறுதலைப் புல்லுருவிகளும் துணை போகிறார்கள் தமிழனுக்கு உண்மையான இன உணர்வு ஊட்டப்பட்டு இன எழுச்சி ஏற்படாதவரை இந்தியக் கூட்டமைப்பில் தமிழர்நிலை இழிவானதாகவும், இரங்கத் தக்கதாகவுமே இருக்கும்.

இந்தியக் கூட்டமைப்பில் தமிழர் நிலை பற்றிய உண்மைகளில் இக்கட்டுரை ஒரு சிறு துளிதான்.

-இரா. வேணுகோபாலகிருஷ்ணன்,

Advertisements
This entry was posted in இந்தியக் கூட்டமைப்பில் தமிழர் நிலை, மணற்கேணி 2010. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s