இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் 

     எந்த ஒரு பொருளாக இருப்பினும் அது இலவசமாக வருவதைக் காட்டிலும் ,உண்மையான உழைப்பின் விளைவாக வருவதாய் இருப்பின் அதன் மதிப்பு மேலும் கூடும் என்பதில் ஐயமில்லை.அதிலும் அதி முக்கியமாக அது நமது சொந்த உழைப்பாக இருத்தல் வேண்டும்!     
                                                அரசாங்கம் எந்த ஒரு இலவசத் திட்டத்தைச் செயல்படுத்தும் போதும் மாற்றங்கள் நிச்சயமாக உருவாகும்.ஆனால் அந்த மாற்றங்களின் நன்மை தீமைகள் தான் என்ன?உதாரணமாக நமது தமிழக அரசின் இலவசத் திட்டங்கள் எண்ணிலடங்காதவை !
(1) இலவச வண்ணத் தொலைகாட்சிப் பெட்டி
(2)இலவச மருத்துவக் காப்பீடு
(3)இலவச வீட்டு வசதித் திட்டம்
(4)விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ,இலவச மோட்டார்
(5)மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி
(6)இலவச மதிய உணவு
(9)இலவச பேருந்துப் பயணச்சீட்டு
இன்னும் பல .          
  இவற்றின் நன்மைத் தீமைகளையெல்லாம்    விவாதிக்கும் முன், இத்திட்டங்களுக்கெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது ? அறிந்தோ அறியாமலோ(!) நாம் செலுத்தும் வரிகள் தான் இத்தகைய இலவசங்களாய் உருவாகியுள்ளன .இருப்பவர்களிடம் வாங்கி இல்லாதவர்களுக்குக் கொடுப்பது நலமே.ஆனால் அது உண்மையாகத் தேவையுடவர்களுக்குத்தான் பயன்படுகிறதா?இத்திட்டங்கள் யாவும் அவசியம்தானா ? என்பது பலருக்கும் கேள்விக்குரியாகவே இருந்துவருகிறது.
                                                   வறுமைக் கோட்டிற்க்குக்கீழ் வாழும் மக்களுக்கு உதவவே இத்தகைய இலவசங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பலரும் எண்ணுகின்றனர்.வறுமைக் கோட்டிற்குக் கீழ் மக்கள் எதனால் தள்ளப்படுகின்றனர்? அவர்களின் குடும்ப அடையாள அட்டையின்  நிறத்தினால் அல்ல !   அடிப்படைக் கல்வியும் நிரந்தரமான வேலை வாய்ப்பும் இல்லாததாலேயே.இந்த அடிப்படைக் கல்வி இல்லா நிலையை ஒழிக்கவே மத்திய அரசின் ”சர்வ சிக்ஷா அபியான்” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.மேலும் இந்த (2010) ஆண்டு அனைவருக்கும் கல்வி உரிமை என்ற சட்டமும் நடைமுறையில் வந்துள்ளது.எல்லாம் சரியே.இவற்றின் மூலம் கிராமப்புற ஏழை மாணவர்கள் கல்வி கற்க முடியும்.இது முதல் நிலை.அந்த மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் முறையாக கற்பிக்கக்கூடிய ஆசிரியர்களும் போதுமான வசதிகளும் இருக்கின்றனவா? அனேக இடங்களில் இல்லை .ஒன்றை இலவசம் என்று அறிமுகப்படுத்துவதோடு அரசின் பணிகள் முடிந்துவிடுவதில்லை .(இலவசங்களை அறிமுகப்படுத்துவது அரசின் பணியும் இல்லை ! ) அவை முறையாக முழுமையாக மக்களைச் சென்றடைகிறதா என்பதையும் அரசு தானே கவனிக்க வேண்டும் ?
                                                  அடுத்ததாக மதிய உணவுத் திட்டம்.அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் பசியைத் தீர்க்க அரிமுகப்படுத்தப்பட்டதே இலவச மதிய சத்து உணவுத் திட்டம். நன்று. உண்மையிலேயே அது சத்துணவாகத்தான் இருக்கிறதா? யாரறிவார்? அது எப்படி, எந்த ஒரு திட்டத்தைச் செயல்படுத்தினாலும் ,உண்மையான தொகையைக் காட்டிலும் , அதிகமாகக் காட்டி, தனக்கு இலாபம்
வருமாறு தற்காத்துக் கொள்ளவே பலரும் விழைகிறார்கள்?     
                                                  “காணி நிலம் வேண்டும் பராசக்தி ” என்றார் பாரதி.அதன் உண்மையான  பொருள் , தன் உழைப்பில் தனக்கென செழிப்பான காணி நிலமாவது வேண்டும் என்பதே.ஆனால் இந்த இருபதாம் நூற்றாண்டிலோ ,வறுமைக் கோட்டிற்க்குக் கீழ் வாழும் மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது.முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.சில பல காகித ஆவணங்களை மட்டுமே வைத்துக் கொண்டு இத்தகைய இலவசங்களை அனுபவிப்பவர் தான் எத்தனை பேர் ?அது இருக்கட்டும்.வீட்டு வசதி வாரியம் சமூக சேவகர்களுக்காக ஒதுக்கும் வீடுகளை, தன் குடும்பத்தைச் சேர்ந்த மருத்துவர் ரத்த தான முகாம்களில் கலந்து கொண்டதாலேயே “சமூக சேவகர் ஆகி விட்டதாகக் காட்டி அவர் பெயரில் வீட்டு வசதி வாரியத்தின் கீழ் வீடு வாங்கும் பெருந்தலைவர்கள் இருக்கும் வரை யார் செய்த குற்றமும் யாருக்கும் பெரிய தவறாகத் தெரியப்போவதில்லை ! இலவச நிலத்தைத் தருவதற்கு மாற்றாக, பயன்படுத்தப்படாத அரசின் நிலங்களை விவசாயிகளுக்கு குத்தகைக்குக் கொடுத்து அதில் விளையும் பயிர்களை விவசாயிகளையே எடுத்துக் கொள்ளச் சொன்னால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்?
                                                   மழை,வெள்ளம் வரும்போது இரண்டாயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கியது அரசு .சாலைக்குச் சரி சமமாக வீட்டின் வாசலையும் உயர்த்தி வீட்டிற்குள் சொட்டுத் தண்ணீர் நுழையாமல் பார்த்துக் கொண்டவரில் எத்தனை பேர் வரிசையில் நின்று அந்த இரண்டாயிரம் ரூபாயை வாங்கினார்கள் என்று யார் அறிவார் ?அடுத்தது வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி.தொலைக்காட்சிப் பெட்டி  இல்லாதவர்களெள்லாம் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவராகி விடுவாரா என்ன ? உண்மையிலேயே தொலைக்காட்சிப் பெட்டி இல்லாதவர்கள்    அதைப்பெற்றால் சரி. அதையே ‘சரி’ என்று கூருவது ‘தவறு ‘ ! ஒரு அத்தியாவசியப் பொருளை (இன்றைய நிலையில் அது அத்தியாவசியம் என்றே வைத்துக் கொள்வோம்), தன் குடிமகன் வாங்க முடியாமல் போவதற்குக் காரணம் என்னவென்று நோக்கி அதைத் தன் பங்கிற்கு முடிந்தால் சரி செய்து ,அவன், தன் தேவைகளைத் தானே பூர்த்தி செய்து கொள்ளுமாறு “நேர் வழியிலான”, வாய்ப்புகளை மட்டுமே அவனுக்கு அரசு ஏற்படுத்திக் கொடுக்கலாமே அன்றி அந்தப் பொருளையே அவனுக்கு இலவசமாக அளிப்பது எவ்விதத்தில் சிறந்ததாகும் ?
                                                     எனவே இலவசங்களால் நன்மையும் உண்டு தீமையும் உண்டு .அரசு , இலவசத்  திட்டங்களைச் செயல்படுத்தியபின் அந்த இலவசங்கள் உரியவர்களைத்தான் சென்றடைகிறதா  , அந்த இலவசத்தைப் பெற அவர் உரியவர்தானா? என்பதை அந்தந்த இடங்களைச் சேர்ந்த சமூக சேவகர்களிடம் விடுவது சிறந்ததாக இருக்கும்.  
– M.Nishanthi  

Advertisements
This entry was posted in இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் - நன்மை தீமைகள். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s