மெல்லத் தமிழினி வாழும் – கோகிலவாணி

முன்னுரை :

வாழும் அனைத்து கலைகளையும் தோற்றுவித்து ஊக்குவித்த மொழி தமிழ். புவி மீது மொத்தக் கலைகளும் சுவடின்றி அழிந்தபின்னும், அழிந்துபோன கலைகள் என்று அவைகள் புத்தகத்திலேனும் பெயர் பெற்றிருப்பது திண்ணம். உலகின் பல மொழிகளிலும் கலைச்சொற்களைக் கொண்டது மொழி. தொன்மைகளுள் எல்லாம் தொன்மையான தமிழ் அழிவது ஒருபோதும் இல்லை. ஏன் என இனி காண்போம்.

தமிழ் வானம் :-

காற்றுக்கு ஏற்ப கடந்த செல்லும் மேகங்களுக்கு இடையே வானம்போல் நிற்கும் மொழி நம் மொழி. ஹீப்ருவும், சமஸ்கிருதமும், கிரேக்கமும், தமிழும் உலகின் தொன்மொமிகள் ஹீப்ரு பயன்பாட்டில் இல்லை என்பதும், சமஸ்கிருதமும், கிரேக்கமும் பயன்பாட்டை இழக்கும் மொழிகள் என்பதும் ஆய்வறிக்கை. தமிழ் மட்டுமே புதிய பரிமாணத்துடன் தொண்மையை இழக்காமல் நிமிhந்து நிற்கிறது. அழியும் மனிதர்கள் படைத்த அளவுகோல்கள் அனைத்தையும் நிறைவு செய்த ஒரே மொழி என்ற சிறப்புடன் செம்மொழி பட்டத்தை சூடி நிற்கிறது.

இடைப்பட்ட சில காலங்களில் ஆங்கில் கலப்பு பேச்சு மொழியில் வந்ததும், கல்வியறிவில் ஆங்கிலம் அவசியமாக்கப்பட்டதுமே தமிழுக்கு சவால். மேகம் பொழிந்தால் வானம்தானே. தற்போது தாய்மொழிகல்வி வளர வழி புலப்பட்டுள்ளது. சிலர் அதை மறுக்கத்தான் செய்கின்றனர். அவர்கள் பசுவில் கிடைக்கும் பாலை நினையாமல் வாலில் நிற்கும் பேனை சிந்திப்பவர்கள். ஆங்கில ஆதிக்கம் நிறைந்த இந்த 21ம் நூற்றாண்டிலும் பல நாடுகளில் மக்கள் தாய்மொழி கல்வியே பெறுகின்றனர். ருஷ்யாவின் மருத்துவம் ருஷ்யமொழியில்தான். அவர்களுக்கு ஆங்கிலம் ஒரு சிறு கருவி. உபயோகித்தபின் கீழே வைப்பது அவர்கள் வழக்கம்.

தாயாகி தமிழானாள் :-

எந்தமொழி பேசுபவனுக்கும், சிந்தனையின்வேர் தாய்மொழி. அதை மறைக்க இயலாது. ஆங்கிலமும், பிரெஞ்சும் வேறு எதுவுமே பேசும் மொழியென்றாலும் அவன் அதை புரிந்து கொள்ள போவது தாய்மொழியில். வேறொரு மொழியில் புலமை பெற்று விட்டாலும் கூட அம்மொழியை ஒருவன் கற்றது தாய்மொழியின் தளவில்தான். எனவேதான் ‘பிற மொழிக்கு வாழ்வளிப்பவன் தன் மொழிக்கு தாய்மையளிக்கிறான்” என்ற கூற்றை ஒப்புக் கொள்கிறது உலகம். அவ்வகையில் பார்த்தால் தமிழ் பலரின் பன்மொழித்திறனுக்கு தாயானவள் பல மொழிகளுக்கும் தாயல்லவா அவள்?

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு மொழியே பேசியறியாத பல தேசங்கள் காணக்கிடைக்கையில், 2000 ஆண்டுகளுக்கு முன்பே காப்பியம்படைத்து, காப்பியத்தின் இலக்கணம் படைத்து இன்றும் அவற்றை கண்களாய் வணங்கும் தேசம் இந்த தமிழ்தேசம். இலக்கியங்களாலேயே உலக இயல்பை உணர்ந்தவர்கள் தமிழர்கள். அறம், அருள், அரசு, ஆண்மை, பொருள், இழப்பு, காமம், கருணை., இன்னும் எத்தனையோ அத்தனையையும் 133 அதிகாரத்துள் அடக்கி உலகம் முழுமைக்கும் பொதுமறை எனப் பெயர் பெற்று புகழின் சிகரத்தை சிறப்பு செய்யம் குறள் ஒன்றே தமிழின் பெருமையை பறை சாற்றும், சுருங்க சொல்லி விளங்கச் செய்வதானால் குறள் கூறும் நல்லுலகம் உள்ளவரை தமிழ் மொழிக்கு இறுதில்லை.

மெல்லத் தமிழின் வாழும் ?

ஒரு கருத்தை சொல்ல விளைகிறேன் இவ்விடததில், கட்டுரையின் தலைப்பு பற்றியது இக்கருத்து. “மெல்லத் தமிழின் வாழும்? எனில் இதுகாறும் தமிழ் வாழவில்லையா? என ஒரு வினா கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்;தோன்றிய மூத்த தொல்குடி நம்குடி. குடி வளர்த்த தமிழ் வாழாமல் இருப்பதாவது? வினாவின் விளக்கம் இதுதான்.

நறுமணத்தை சுகிக்கும் முதல் மூன்று நிமிடங்கள்தான் அதை உணரமுடியும். பழகியபின் சுகந்தம் தெரிவதில்லை. இதுபோல்தான் தமிழின் சிறப்பு உலகெங்கும் வியாபித்தபின் அந்த சிறப்பிலேயே உலகத்தை உணர்ந்துவிட்டோம். எனவேதான் மலர்க்குவியலுக்குள் மணமறிய முடியாத நாசியுடன் தமிழின் சுவையை உணர்ந்தே பிறபவன் கானல்நீரை சிந்திப்பது போலல்லவா? விருட்சத்தின் விழுதுகள் செழித்த தமிழ் பழம்பெருமை வாய்ந்த பல மொழிகள் காணாமல் போனாலும் தமிழ் சிறந்து நிற்க காரணம் அது கன்னித்தமிழ். மழலையிடம் கிள்ளை மொழி பேசும் அன்னையாய் அது பிள்ளைத்தமிழ். மூத்த மொழியாதாலால் அது பழந்தமிழ். இப்படி பல பெயர் பெற்றாலும் மார்க்கண்டேயனின் இளமைக்கு போட்டி தமிழின் இளமை. ஆகவேதான் அதன் ‘சீரிளமைத் திறம்வியந்த செயல்மறந்த வாழ்த்துகிறோம்.” இங்கே வினா தமிழின் வாழ்வு பற்றியல்ல தமிழனே. அதன் வளர்ச்சி பற்றியது.

தமிழின் வளர்ச்சியும் தமிழின் பங்கும் :-

தோன்றிய காலம்முதல் பல மாற்றங்களை எய்தியிருந்தாலும் தமிழின் ஒரு பகுதியையே பிற மொழிகளுக்கு கொண்டு சேர்த்திருக்கிறோம். பாரதியின் மீசையையும், புதுமைப்பித்தனின் வேட்டியையும், காசி ஆனந்தனின் துருத்திய நெஞ்செலும்பையும் பிற மொழியினர் அறிவர். முழுதாக அவர்களையும், அவர்கள் அடியொட்டியவர்களையும், அவர்களை அடியொட்டியவர்களையும் பிறமொழிக்கும் வரும் தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது மிக அவசரமான அவசியம். புதுத் தமிழ்நடையினை நம்மில் பலர் சினிமாவில் மட்டுமே உணர்வது கொடுமை. வாசிப்பு வழக்கம் இங்கே குறைந்துவிட்டது. மாற்றுத்தாயிடம் பாலருந்தும் நாகரிகம் பரவியுள்ளது. இலக்கிய வாசனையை ஆங்கிலத்தில் கற்கிறார்கள். அதுவும் நல்லதான். அவர்கள் தமிழ் இலக்கியங்களை புரிந்தால் அதன் பெருமையை உணர்வார்கள், மாறாக ஆங்கிலக்கிணற்றிலேயே தவiளாயா இருந்தால் தமிழ்கடலை கண்டறிவது எப்படி?

மொழிபெயர்ப்புகள் கட்டாயம் வேண்டும். மாபெரும் காவியங்கள் இராமாயணமும், மகாபாரதமுமே மொழி பெயர்ப்புகள்தானே. வாசிப்பு பழக்கமின்றி உழல்கின்றனர். வரும் தலைமுறையை உருப்படச் செய்ய வேண்டுமானால் சிறுவர் இலக்கியங்களில் புதுமையை புகுத்தினால் வளரும் தமிழர்கள் தமிழை வளர்த்துவார்கள். தெனாலிராமன் கதையும், பரமார்த்தகுரு கதையும் வாய்மொழியாகவே முடிந்துவிடும். (இல்லையெனில் டிவியில் கார்ட்டூனாக முடிந்துவிடும்) எனவே புதிய சிறுவர் இலக்கியங்கள் அவசியம்.

தமிழ் வலைதளங்களை பரவலான பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். தமிழ்மொழி கற்கும் பிற மொழியினர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். வீரமாமுனிவரையும், தேவநேயப்பாவணரையும் அவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். திருக்குறள் முதல் சிலம்பு தொடங்கி தமிழ்நதியின் கவிதையுடன் தப+சங்கர், மதன்கார்க்கி வரை அனைவரையும் அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும். துரிதகதியில் செயல்திட்டம் நிறைவேற்றம் வேண்டும்.

முடிவுரை:-

வண்தமிழ், கொடுந்தமிழ் அதுவே மென்தமிழ் தாய்த்தமிழ் நம்தமிழ். அது வளர நாம் செய்யவேண்டியவைகள் இவைதான்.

1. புதுதமிழ் நடையை ஆதரிப்போம்.
2. பழந்தமிழ் நூல்களுடன், புதுத்தமிழையும் பிற மொழிகளில் சேர்ப்போம்.
3. பிற இலக்கியங்களை தமிழ் மொழியில் பெயர்ப்போம்.
4. தாய்மொழிக்கல்வியை போற்றுவோம்.
5. தமிழை தொழில்நுட்பத்தில் புகுத்துவோம்.
6. குழந்தை இலக்கியங்கள் படைப்போம்.

கடைசிதுகள் எஞ்சிநிற்கும் வரை மிச்சமிருக்கும் ஒரே மொழி தமிழ் என உணர்த்துவோம்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

Advertisements
This entry was posted in இலக்கியம், மணற்கேணி 2010. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s