மெல்லத் தமிழினி வாழும் – பொ. காந்திமதி

தமிழ்தாய்க்கு என் வணக்கம்:
தமிழே! என்னுயிரே! சுவை
அமிழ்தே! தாய்த்தமிழே! உலகில்
முன்னே தோன்றிய மூத்தவளே!
முத்தமிழாய் இனிக்கும் தேன்தமிழே!
பொன்னின் ஒளி! பூவின் எழில், இவை
தன்னிலும் மென்மையில், என்றும் இளையவள் நீ!
பன் எனும் பாட்டில், ஏட்டின் எழுத்தில்,
பழமையில் முதிர்ந்த செந்தமிழ் நீ! என்
கண்ணில் ஒளிதந்து கருத்தில் பொருள் தந்து
கரங்களில் உனை எழுத சக்தி தா இன்று

இரண்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த பொய்யாமொழிப்புலவர் என்னும் திருவள்ளுவரால் திருக்குறள் எழுதப்பட்டது. உலகில் வாழும் அத்தனை இனமக்களின் கருத்துக்கும் ஏற்ப எம்மதமும் எம்மொழியும் சம்மதம் என்று சொல்லக்கூடியதாய் அவர்களின் வாழ்வில் ஒத்துக்போகக்கூடிய ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்துக்களை கொண்டிருந்ததால் இந்நூலுக்குத் தெய்வீகத் திருநூல் என்னும் பெயரும் உண்டு. இதிலிருந்தே தமிழ்மொழியின் சிறப்பு வானளாவிய உயர்வுபெற்றிருந்தது அன்றே.

இவர் காலத்திற்க்குப்பின்பு தமிழ்ப்புலவர்களாம் உயர் கம்பர், இளங்கோ அடிகள், மாணிக்கவாசகர், ஜோதி ராமலிங்க அடிகள், திருமூலர், அருணகிரிநாதர், மகாகவி பாரதியார், பாரதிதாசனார், படிக்காதமேதை காமராஜர், அறிஞர் அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி இன்னும் இவர்களைப்போன்ற பல அறிஞர்களால், புலவர்களால், காப்பிங்களும், காவியங்களும், சிறு குன்றாய்க்குவிந்து, தமிழ்மொழியை, உலகிலேயே மிக உச்சநிலையைக் காணவைத்து அன்பும் நற்பண்பும், தொண்டும் இறைவழிபாடுமே அகிலத்தின் உயர் அமைப்புக்கும் அமைதிக்கும் அஸ்திவாரம் எனும் கொள்கைக்கு வழிவகுத்ததே தமிழ்மொழிதான். ஆன்மீகத்தையும் அறநெறிகளையும் இருகண்களைக்கொண்டு தமிழர்களை வாழவைத்ததே தமிழ்மொழிதான். இயல் இசை நாடகம் எனும் முத்தமிழ்ச்சங்கம் அமைந்ததும் தமிழ்மொழியால்தான். இதிலிருந்தே தமிழ்மொழியின் சிறப்பு பரவியவிதம் கண்கூடாகத் தெரிகின்றதல்லவா?
தமிழர்கள் இன்று உலகெங்கிலும் கலைஞர்களாய், கவிஞகர்களாய், அறிஞராய், விஞ்ஞானியாய், யோகியாய், ஆசிரியராய், வழக்கறிஞராய், தொழில் நிபுணராய், தொழிலதிபராய், மருத்துவராய், மாழுமியாய், விமான ஓட்டியாய், விளையாட்டு வீரனாய், அங்காங்கே தாம் வாழும் இடத்தின் அந்த நாட்டின் மக்களுடன் ஒன்றியும் அயராத உழைப்பால், உத்வேகத்தால் செயல்படும் துறைகளில் வெற்றிகண்டு விலைமதியாப் பயன்களும் பெற்று, புகழ் அடைந்து வருகிறார்கள் என்றால் அவர்களின் தாய்பொழியாம் தமிழ்மொழியின் உயர் பண்பாடுதான், சிறப்பம்சம்தான், அதனால் தமிழ்மொழியின் உயர்பண்புடன் கூடிய கொள்கைகளை அங்கு தங்களின் செயல்களால் பரப்புவதுடன் தாய்நாட்டுப்பற்றினை ஆன்மீகத்தை சன்மார்க்கத்தை அகிம்சையை அறத்தை, அன்பை, குடும்ப உயர்வை, அயல்நாட்டு அந்நிய மக்களும், மனமுவந்து ஏற்கும் பக்குவத்தில், வாழ்ந்து கொண்டுள்ளனர் என்றால் தாய்மொழியாம் தமிழ்மொழியின் சிறப்பம்சம்தானே! அடுத்து ஆன்மீகரீதியாகவும், தெய்வம் எனும் இறைசக்தியும் எங்கோ நம் கண்காணமுடியாத மறைவிடத்தில் இருப்பது அல்ல இன்னும் நாம் ஒவ்வொருவரும் செயல்படும் செய்கைகளின் வாயிலாகத்தான், தெய்வ சக்தியாக, இயங்கிக்கொண்டிருக்கிறது, எனும் உயர் தத்துவத்தையும், அருள், இரக்கம், அகிம்சை, தாய்மை, சகோதரத்துவம், சத்தியம், ஒழுக்கம், பொறுமை, மனிதநேயம், போன்ற ”நற்பண்புகள்”தான், வாழ்க்கையின் அஸ்திவாரம், சம்பாதிக்கவேண்டிய முதல் செல்வம், எனும் கொள்கைகளை கைக்கொண்டு, வாழ்ந்து காட்டிக்கொண்டிருப்பதும் தமிழ்மொழிக்கு கிடைத்த ஈடில்லப்பேறாகும்.

மேலும் ”கண் கண்ட” தெய்வமாக இயற்கைச் சக்திகளாம், ஐம்பெரும்பூதம், என்கின்ற நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், இவற்றினுடைய அற்புதமான இயக்கங்களை தமிழர் ஆராதனை செய்வார்கள். உலகில் “இரவு பகலை”, உண்டாக்க இயங்கும் நெருப்பு எனும் சூரியனும், அதை சார்ந்த சந்திரன் நட்சத்திரம் இவைகளையும், உலகிற்க்கு உயிர்ப்பு தரும் நீர் எனும் மழையையும், மழையை உண்டாக்கும் மேகம், மேகத்தையும் மழையாக்கிப் பெய்யவைக்கும் காற்று, இவைகளுக்கு இருப்பிடமான ஆகாயம், இவற்றில் நான்கு சக்திகளின் (ஆகாயம் தவிர) உதவியால் இயக்கப்படும் நிலம் எனும் பூமி இதில்தான் மக்கள் ஜீவிக்கிறார்கள்.

உலக மக்கள் அனைவருள்ளும், தமிழர் மட்டும்தான், இந்த ஐம்பெரும் சக்திகளையும், தெய்வமாகக் கருதி வழிபட்டு வணங்கி வருகிறார்கள். இந்த வகையில், தமிழரின் மொழியான, தமிழின் புகழ் வான் உச்சியைதொடுகிறது. அன்றைய காலத்திலிருந்து இன்றைய நாகரீக காலம் வரை, உலக இயக்கத்தின் பலவகைகளிலும், முன்னோடியாக, வழிகாட்டியாகத் திகழ்ந்த தமிழகம், இல்லற வாழ்விலும், முழு ஈடுபாட்டுடன், கட்டுப்பாட்டுடன், தாய்மையின் பெருமை, சொல்லில் அடங்காத, சிறப்புடையதாம். இந்த மாபெரும் உலகிடை, தமிழகம் ஒன்றில்தான், “தாய்மையை”ப்பற்றி உயர்வில் இணையில்லாத பெருமையுடன் திகழ்பவர்கள் , தமிழகப் பெண்களே!!

அன்பும் அரவணைப்பும் கொண்ட தாய், தன் உதிரத்தால் உருவாகும் ஊறித்ததும்பும், தாய்ப்பாலை தன் குழந்தைக்குப் பசிதீர்க்கும், உணவாகத்தருவதுடன், தனது சிசுவின் வளர்ச்சிக்கு அன்புறுகப்பாடுபட்டு, இமைமூடாப் பணி புரிகிறாள். குழந்தைக்கு எந்த நோயும் வராது தடுப்பத்ற்க்காக, “பத்தியச்சாப்படு” எனும் ருசியற்ற, கசப்பான, சுவையிருந்தால்கூட, எந்த மப்புமின்றி, முகமலர்ச்சியுடன் இனிமையாகச் சுவைத்துச் சாப்பிடுவாள். சில இன்னல்களைக்கூட, அதன் சுமையைக் கருத்தில் கொள்ளாது, குழந்தைக்காகத் துணிவுடன், மகிழ்வுடன் ஏற்ப்பாள். குழந்தையை அணைக்கும் சுகம், சொர்க்கலோக இன்பம் என்பாள், தன்பிள்ளையின் நலனுக்காகத் தன் உயிரையும் கொடுக்க முன்வருவாள், இவ்விதமாக, இவர்களின் தாய்மைப்பற்று, உலகில் ஜோதிச்சுடராகப் பிரகாசிக்கிறது, இன்றைய காலகட்டத்திலும் தமிழகத்தில் தாய்மைப்பண்பால், மேன்மேலும் பெருமைக்கு உரித்தாகின்றது தமிழ்மொழி.

மேலும், அரசியலில் இருந்து, அனைத்துத்துறைகளிலும், பங்கேற்க்கச்செய்கிறது பெண்ணினத்தை தமிழகம், அவர்களின் முன்னேற்றத்திற்க்கும், வழிவகை செய்கிறது. இவ்வகையிலும் தமிழ்மொழி தனிப்பெரும் வரம்பெற்றுள்ளது. அடுத்து, விஞ்ஞானயுகமாம், இன்றைய நாளில், தமிழகத்தின் “மாமனிதர்” மேதகு அப்துல்கலாம், அவர்களும், தனது விஞ்ஞான ஆற்றலால், ஆராய்ச்சிகளால், விண்தளத்தில், ஏவுகணைகளை அனுப்பி அற்புதமாக, சாதனை புரிந்துள்ளார். விஞ்ஞான இயிலிலும், “தமிழ்மொழி”, வாகைசூடி வெற்றிபெற்றுள்ளது. ஆகையால் எந்தவித ஆர்ப்பாட்டமின்றி, ஆரவாரமின்றி, இனி வரும் காலத்திலும், தமிழ்மொழியானது அடிமேல் அடி எடுத்து வைத்து அன்ன நடையின் மென்மையுடன்,
”மெல்லத்தமிழ் இனி வாழும், வளரும்” புகழ்பெருக்கி வளர்ந்து கொண்டேயிருக்கும், என இதய நிறைவுடன், இன்பம் பொங்கிடக்கூறுகிறேன்.

Advertisements
This entry was posted in இலக்கியம், மணற்கேணி 2010. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s